முற்றிலுமானவர் Jeffersonville, Indiana, USA 62-12-30M 1. இன்று காலையில் இங்கு இருப்பதற்காக மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மேடைக்கு வரும்போது இங்கு கூறப்பட்ட அறிவுரையைக் கேட்கவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தாமதமாக வந்ததற்காக வருந்துகிறேன். ஆனால் உள்ளே பிரவேசிக்க இயலாமல் பின்னால் இருந்து கொண்டிருக்கிற வியாதியஸ்தர்களும், கார்களும், ஆம்புலன்ஸ் வண்டிகளும் உள்ளன. நான் உள்ளே பிரவேசிக்கும் முன்னர் அவர்களை சந்திக்க வேண்டியதாயிருந்தது. 2 இப்பொழுது அச்சிறு குழந்தையை வைத்துக் கொண்டிருக்கும் அச்சகோதரி இன்று மதியம் இங்கே வருவார்களா என்று நான் அறிய விரும்புகிறேன். கர்த்தருக்கு சித்தமானால், இன்று மாலையிலும் கூட பிரசங்கிக்க விரும்புகிறேன். அச்சகோதரி அப்போது பிரதிஷ்டைக்காக வர இயலாமற் போனால் பரவாயில்லை. இப்போது நான் வெகு நேரம் நின்று கொண்டிருக்கையில், இப்போதே அச்சிறு குழந்தையை பிரதிஷ்டைக்காக நாம் கொண்டு வருவோம். இப்பொழுது, இவைகள் யாவும்... நான் பேசிக் கொண்டிருக்கையிலேயே இப்போதே அப்பெண்ணுக்கு வரவிருப்பமிருந்தால், வருவதற்கு இதுவே தருணம். 3 இப்போது, இன்றிரவில் விசேஷித்த ஒன்று உள்ளது. ''ஐயன்மீர் இதுவா சமயம்'' என்ற ஒரு தீர்க்கதரிசன செய்தியின் பேரிலே அந்தப் பொருளிலே இன்றிரவு நான் பேச விரும்புகிறேன். (உரைக்கப்பட்ட வார்த்தை வால்யூம் 2 எண்:11 - ஆசிரியர்) எனவே கர்த்தருக்கு சித்தமானால் இன்றிரவில் அந்தப் பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். “இதுவா சமயம் ஐயா'' என்பதுதான் பொருள். பிறகு, சபையின் முன்பாக நான் இந்த சந்தர்ப்பத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். மகத்தான ஒன்றைச் சுட்டிக் காட்டும் அநேக காரியங்கள் கடந்த சில நாட்களாக சம்பவித்திருக்கின்றன. அதை நான் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் நாம் எப்போதும்... தேவனுடைய வழிகள் மனிதனால் காலங்கடந்துதான் கண்டுகொள்ளக் கூடியதாக இருக்கிறது. எனவே நாம் விசுவாசத்தினால் தான் நடக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். எவராவது தேவனைக் குறித்து விளக்கிட முடியும் என்றால், அப்போது, இனி முதற்கு, விசுவாசமே தேவையாயிருக்காது, ஏனெனில் நீங்கள் அப்போது அறிந்திருப்பீர்கள். ஆனால் நாமோ விசுவாசத்தினால் தான் நடக்கிறோம். இன்று காலையில் நான் வழக்கமாக நடத்தும் சுவிசேஷ ஊழியத்தின் ஆராதனையை நடத்துவேன் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஏனெனில்... ஆனால் நான் இங்கு வந்த பிறகோ எனது எண்ணத்தை மாற்றிக் கொண்டுவிட்டேன். இங்கு அநேகர் நின்று கொண்டிருக்கிறதையும், நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்கிறதையும் நான் கண்டேன். பிறகு, இன்றிரவில், நான் என்ன கூற விரும்புகிறேனோ அதை நான் சொல்லுவேன். 4 நீங்களெல்லாரும் கூடி வந்திருக்கிற வேளையில் நான் ஒரு காரியத்தைக் குறித்து அறிவித்திட விரும்புகிறேன். அந்த ஒரு விஷயத்தை பற்றி கடந்த இரு வாரங்களாக அறிவிக்காமல் தவிர்த்து வந்தேன். எனக்கு அரசாங்கத்தோடு இருந்த அந்த வருமான வரி வழக்கு சம்மந்தமாக உங்களுடைய ஜெபங்கள் கேட்கப்பட்டுவிட்டன. அவ்வழக்கு தீர்க்கப்பட்டுவிட்டது. எனவே நாம்... அது இப்பொழுது முடிவடைந்துவிட்டது. நீங்கள் யாவரும் அறிந்திருக்கிறபடி அவர்கள் எனக்கெதிராக சுமத்திய குற்றச்சாட்டு என்னவெனில், சுவிசேஷக் கூட்டங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்ட, அந்த காசோலைகள் தான். அவைகள் எனக்கென அளிக்கப்பட்டவை என்று குற்றஞ்சுமத்தி, அதற்காக 3 இலட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் என் மேல் வரியாக சுமத்திட அவர்கள் விரும்பினர். ஏனெனில் அந்த காசோலைகள் என்னுடைய ஆஸ்தி என்று அவர்கள் கருதினர். ஆனால் அது அவ்விதமாக அல்ல. அவைகள் சுவிசேஷக் கூட்டங்களுக்காக அளிக்கப்பட்டவை. அதைப் பற்றி சபையானது நன்கு அறியும். நீங்கள் யாவரும் அதைப் பற்றி அறிவீர்கள். 5 இறுதியாக அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். நான் அதைப் பற்றி, என்ன நடந்தது என்பதைப் பற்றி சுருக்கமாக விவரிக்கிறேன். ஏறக்குறைய மூன்று முதல் ஐந்து ஆண்டுகளாக அவ்வழக்கு சுமார் ஐந்து ஆண்டுகள் இருக்கும் என்று நான் கருதுகிறேன். எனக்கெதிராக அவர்களால் எதையும் கண்டுபிடிக்க இயலாமற் போயிற்று. என்மேல் எந்தக் குற்றத்தையும் சுமத்தி குற்றஞ்சாட்ட இயலாது போயிற்று, அதற்காக நான் மிக்க நன்றியுள்ளவனாயிருக்கிறேன். எனவே குற்றஞ்சாட்டுவதற்கு அங்கே ஒன்றுமில்லை. எனது அறியாமையினால் இப்படியாயிருக்கிறது என்று மாத்திரம் அவர்கள் கூறினார்கள் என்று நான் கருதுகிறேன். தேச சட்டத்தைப்பற்றி அதிகம் அறிந்திருக்காமல், அவர்கள் என்னிடம் காசோலைகளைக் கொண்டு வந்தபொழுது, நான் அவைகளில் கையொப்பமிட்டு என் பெயரை அதில் இட்டு, அவைகளை மாற்றி பணத்தையெல்லாம் சுவிசேஷக் கூட்டங்களுக்காகவென்றே செலவழித்து வந்தேன். ஆனால் என்னுடைய பெயரை அக்காசோலைகளில் இட்டு வந்த வரையிலும், அவைகள் என்னுடையவைகளாகவே எடுத்துக் கொள்ளப்பட்டன. நீங்கள் புரிந்து கொண்டீர்களா? எது எப்படியாயினும்... ''அவ்வாறு செய்வது உமக்கு அருமையாயிருக்கலாம், ஆனால் அவைகள் உமக்குச் சொந்தமானவைதான். பிறகு நீங்கள் அதை சபைக்கு அளித்திருக்கிறீர்கள். ஆனால் உங்களுடைய பெயரை அதில் நீங்கள் எழுதி கையொப்பமிட்டுவிட்டபடியால், அவைகள் வேறு எதற்காகவோ ஒதுக்கப்பட்டிருந்தாலும் கூட, அவைகள் உமக்கு அளிக்கப்பட்டபடியினால், உம்முடையவைகளாகவே ஆகிவிடுகிறது'' என்று அவர்கள் கூறினர். எனவே அவர்கள் அதிலே ''தனிப்பட்ட அன்பளிப்பு'' என்று போட்டிருந்தால் பரவாயில்லை; ஆனால் அவர்கள், “வில்லியம் பிரன்ஹாம்'' என்று எழுதிவிட்டனர். அதிலே நான் என் பெயரை எழுதிவிட்டால், அவ்வளவு தான், அதுவே போதுமானது. எனவே அவர்கள். அதன்பிறகு, முடிவிலே ஜெபத்தோடு... 6 பிறகு, சமீபத்தில் எனக்கு ஒரு தரிசனம் உண்டாயிருந்தது. அத்தரிசனத்தில், ஒரு பிரம்மாண்டமான மனிதன், கறுமை நிறத்துடன், புகையடைந்து மங்கிய தோற்றத்துடன், தெளிவற்ற ரூபத்துடன், முதலையைப் போல் மேலெங்கும் செதில்களையுடையவனாய், இரும்பினாலான விரல்களுடன் என்னை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்தான். ஒரு சிறிய கத்தி மாத்திரம் என்னிடம் இருந்தது. அம்மனிதனின் மேல் ''அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசாங்கம்'' என்று எழுதப்பட்டிருந்தது. நான் எந்தவித உதவியற்ற நிலையில் நிராதரவாக இருந்தேன். அப்போது கர்த்தர் அவ்வேளையில் தோன்றினதால், அவன் மேற்கொள்ளப்பட்டான். நீண்ட நாட்களுக்கு முன்னர் நான் உங்களுக்கு கூறியது உங்களுக்கு ஞாபகமிருக்கும். அன்றைக்கு அவர்கள் (அரசாங்கம் - தமிழாக்கியோன்) எனக்கு ஒரு சமசர ஏற்பாட்டை அளித்தனர். நியூ அல்பெனியிலுள்ள என்னுடைய வழக்குரைஞர் திரு. ஆர்பிசன், இண்டியானா போலீசிலுள்ள ஐஸ்ஷன் மில்லர் என்பவர்களும், வருமான வரி வழக்குப் பற்றி என்னை கூப்பிட்டு, என்னிடம், ''இங்கே வாருங்கள்'' என்று அழைத்தனர். அதன் பேரில் நானும் எனது மனைவியும், சகோதரன் ராய் ராபர்சன் அவர்களும் இந்த சபையில் உள்ள தர்மகர்த்தாக்களும் அங்கே சென்றோம். அவர்கள் எங்களிடம் அரசாங்கமானது சமரசம் செய்து கொள்ள விரும்புவதாக தகவல் தெரிவித்தனர். 7 நான் யாருக்காவது ஏதாவது கடன்பட்டிருந்தால் நான் அவர்களுக்கு கொடுத்துவிடுவேன், என்னால் முடிந்த அளவு செய்கிறேன், ஆனால் நான் யாருக்கும் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. உத்தமமாகவே அதை நான் செய்திருக்கிறேன். தேவன் அதை அறிவார். நான் குற்றமுள்ளவனாயிருந்தால் ஏன் அவர்கள் என் மேல் குற்றஞ்சுமத்த முடியவில்லை என்று நான் கூறினேன். அவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் கிடைத்திருந்தது. ஆனால் அவர்களுக்கு ருசு ஒன்றும் கிடைக்கவேயில்லை. நான் வரி கொடுக்க வேண்டியதாக நிரூபிக்கப்படாமல் நான் அதை செலுத்தப் போவதில்லை என்று கூறினேன். பிறகு, வழக்குரைஞர் என்னை உள்ளே அழைத்துச் சென்று என்னிடம், “நாம் இவ்வழக்கை எடுத்து வழக்காடலாம், அரசாங்கமும் வழக்காடும். அவர்கள் வாதாடும் போது, உங்களுக்கெதிராக அவர்கள் எடுத்து வைக்கும் வாதமெல்லாம் நீங்கள் அவ்வாறு செய்ததைப் பற்றியே கூறுவார்கள்'' என்று கூறினார். 8 நான் அதைச் செய்த விதத்திலே நான் அறியாமையுள்ளவனாயிருந்தேன். கணக்குப் பேரேடுகள் எழுதி வைக்க வேண்டும் என்பதையெல்லாம் நான் அறியவில்லை. எனவே, உத்தமமான வழி என்று நான் எதைக் கருதினேனோ, அவ்வண்ணமே நான் செய்ய வேண்டியதாயிருந்தது. அது ஒரு போதும் என் பெயரில் வங்கியில் செலுத்தப்படவில்லை. அது எப்போதும் சபையின் கணக்கில் சுவிசேஷக் கூட்டங்களுக்காகவென்று தான் வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளப்பட்டது. புரிந்து கொண்டீர்களா? ஆகவே எனக்கு சம்மந்தமாக நான் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. ''அவர்கள் பதினையாயிரம் டாலர்கள் வரியாகவும், பத்தாயிரம் டாலர்கள் அபராதமாகவும் விதித்து அவ்விதமான ஒரு சமரச ஏற்பாட்டிற்க்கு வருவதற்கு விரும்புகிறார்கள் என்று வழக்குரைஞர் கூறினார். இவ்வளவும் போக வழக்குரைஞருக்குரிய கட்டணம் பதினையாயிரம் டாலர்கள் செலுத்தவேண்டும். ஆக மொத்தம் நாற்பதாயிரம் டாலர்கள் ஆயிற்று. அதன்பிறகு, அவர்கள் இன்னும் ஐந்து கூடுதலாக வேண்டும் என்றார்கள். அதைக் குறித்து நான் எண்ணிப் பார்த்தேன். ''இவ்வுலகில் எனக்கு எப்படி இந்த நாற்பதாயிரம் டாலர்கள் கிடைக்கப் போகிறது'' என்று நான் கூறினேன். “என்னுடைய வங்கிக் கணக்கை இங்கே அறிவீர்கள், சுமார் ஒரு நூறு டாலர்கள் தான் என் கணக்கில் இருக்கக் கூடும். எனக்கு எங்கேயிருந்து இந்த நாற்பதாயிரம் டாலர்கள் கிடைக்கப் போகிறது? மேற்படி பணத்தைச் செலுத்துவதற்காக பிணை வைப்புக்காக என்னிடம் ஒன்றுமேயில்லை. என்னிடம் அதெல்லாம் இல்லை. அவ்வளவுதான்” என்று நான் கூறினேன். 9 அதற்கு அந்த வழக்குரைஞர் என்னிடம், “திரு. பிரன்ஹாம் அவர்களே, இதுதான் விஷயம். நாம் வழக்காடுவோமென்றால், நாம் நிச்சயமாக வழக்கிலே ஜெயித்துவிடலாம். ஆனால் இங்கே... நாம் அதை ஜெயித்துவிடலாம், ஏனெனில் நான் இதில் இவ்வாறு செயல்படுவேன். அவர்கள் என்ன செய்யப் போகிறார்களென்றால், அக்காசோலைகள் யாவும் உங்களுடையது என்று நிரூபிக்கப் போகிறார்கள். ஏனெனில், நீங்களே அவைகளிலெல்லாம் கையொப்பமிட்டு மாற்றியிருக்கிறீர்கள். எனவே அவர்கள் அவை யாவும் உங்களுடையது என்று வாதாடப் போகிறார்கள். அவை யாவும், சுவிசேஷக் கூட்டங்களுக்காகவென சபையின் பெயரில், ''பிரன்ஹாம் சுவிசேஷக் கூட்டங்கள்” என்ற பெயரில் வங்கியில் மாற்றப்பட்டு, பிறகு ஒரு சபையின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாயினும், “அவர்கள் இவ்விதமாக உங்கள் பேரில் தான் அதை சாட்டப் போகிறார்கள்” என்று அவர் கூறினார். ஒரு தடவை கூட, நான் எனக்கென ஒரு பைசாவாவது செலவழித்திருக்கிறேன் என்பதாக அவர்களால் குற்றங் காணவே முடியவில்லை. அது சத்தியமாயிருக்கிறது. தேவன் அறிவார். இதையெல்லாம் அறிந்துள்ள இத்தனை காலமும் என்னோடேயே இருந்த மனிதர்கள் இங்கே அமர்ந்திருக்கின்றனர். ஒரு பைசா கூட அப்பணத்தில் நான் என் சொந்தத்திற்காக செலவழித்ததே கிடையாது. ஒவ்வொரு காசோலையும், ஒவ்வொரு இடத்தில் யாவுமே தேவனுடைய இராஜ்ஜியத்திற்கென்றே செலவழிக்கப்பட்டுள்ளது. 10 ஆனால் அதைப் பாருங்கள்? ஆனால் அதெல்லாம் ஒரு பொருட்டாயிருக்கவில்லை அவர்களுக்கு, அது முதலாவதாக எனக்குரியதாக கருதப்பட்டு, பிறகு சபைக்கென்றும், சுவிசேஷக் கூட்டங்களுக்கெனவும் ஆக இருந்தது. அரசின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு தப்பிக் கொள்வதற்கு அவர்களுக்கு அதற்கென ஒரு வழியுள்ளது. அதையெல்லாம் அவர்கள் செய்து கொள்ளலாம். ஆகவே அப்போது நான், ''நான் அதைச் செய்யப் போவதில்லை“ என்று நான் கூறினேன். ''நல்லது, நாம் அந்த விதமாக அவ்வழக்கை வாதாடி வென்றால் நல்லது. ஏனெனில் நான் அவைகள் யாவும் சொந்த அன்பளிப்புக்கள் என்று அறிவித்துவிடுவேன். அரசாங்கத்திடம் அவைகள் தனிப்பட்ட அன்பளிப்புக்கள் என்று அறிவித்துவிடுகிறேன் (கவனித்தீர்களா?)'' என்று வழக்குரைஞர் கூறினார். அவர் மேலும், ''நான் அவ்வாறு செய்தால், அப்போது, பத்தாயிரம் டாலர்களுக்கு மேற்பட்டு வரும் தொகையெல்லாம் பரம்பரை ஆஸ்தி என்றாகிவிடும். அப்போது, நீங்கள் மீண்டும் இதில் பேரில் சிக்கிக் கொள்வீர்கள், அவர்கள் உங்களை இன்னொரு ஐந்தாண்டுக் காலம் அலைக்கழித்து, எல்லாவற்றையும் மறுபடியும் சோதித்துக் கொண்டு இருப்பார்கள்'' என்று கூறினார். 11 பார்த்தீர்களா? ஒரு காசோலையை நீங்கள் எழுதும் போது, அது க்ளியரிங் ஹவுஸ் வழியாகத்தான் அது மாற்றப்படுகிறது. அப்போது அக்காசோலையை போட்டோஸ்டெட் நகல் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். அவ்வாறுதான் என்னுடைய எல்லாக் காசோலைகளும் கூட அவ்வழியாகச் சென்றது. எனவே அவர்கள் கூறினர் “அங்கே தான் அவர்கள் உங்களை மீண்டும் சிக்க வைப்பார்கள் இன்னொரு காரியம் சகோதரன் பிரன்ஹாம் அவர்களே! நீங்கள் என்ன செய்தாலும் சரி, ஆனால் ஒரு புலன் விசாரணையின் கீழாக நீங்கள் அரசாங்கத்தால் விசாரணைக்கு ஒரு வழக்கில் மீண்டும் திரும்பி வரும்படி அழைக்கப்பட்டுவிட்டால், அப்போது? நீங்கள் பொது மக்கள் கண்கள் முன்பாக ஒரு ஏமாற்றுக்காரனாக காட்சியளிப்பீர்கள்'' என்று கூறினார். பார்த்தீர்களா? ஆனால் அப்படித்தான் இருக்கிறது. 12 மிஸ்ஸிஸ்ஸிப்பியிலுள்ள அந்த எளிய பாப்டிஸ்ட் ஊழியக்காரரைப் பாருங்கள். அவ்வெளிய மனிதன்... ஒரு பெண்மணி, அவ்வூழியக்காரர் வந்து தன்னை இகழ்ந்து அவமானப்படுத்திவிட்டார் என்று குற்றஞ்சாட்டினாள். அம்மனிதனோ தேசம் முழுவதிலுமிருந்து, அப்பெண்மணி குறிப்பிட்ட அந்த நாட்களிலோ, அதற்கு முன்போ, அல்லது அதற்கு பிந்தியோ, அந்நகரத்தில் தான் இருக்கவேயில்லை என்பதை நிரூபிக்கும் நிரூபணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இம்மனிதன் நிரபராதி என்று கண்ட அந்த நீதிபதி அப்பெண்மணியின் மேல் பழியைத் திருப்பி, அவள் அவ்வூழியக்காரரை அவதூறு செய்து பொய்யாக பழிச்சொல் சுமத்தியதற்காக அவர் அவள் மேல் வழக்கு போட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவ்வூழியக்காரரோ “அவள் போகட்டும்'' என்று கூறிவிட்டார். இவ்விஷயமானது தேசம் பூராவிலும் கருத்துக் கணிப்புக்காக விடப்பட்டபோது, என்ன நடந்தது உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்க மக்களில் எழுபத்தைந்து சதவீதத்தினர் கூறின ''நெருப்பு இருக்கிற இடத்தில் புகையும்“ என்று கூறிவிட்டனர். என்னைப் போல அப்பாவியான அந்த எளிய மனிதன் அக்குற்றத்தை செய்யாதிருந்த போதிலும், தன் வாழ்நாள் காலமெல்லாம் அந்த அவமதிப்பை சகித்துக் கொள்ள வேண்டியதாக இருக்கும். 13 தேவனுடைய இராஜ்ஜியத்திற்கென நான் முழு ஜீவியத்தையும் அர்ப்பணித்துவிட்டு, மக்கள் உங்களுடைய வரிகளை கட்டும்படியான நிலைமைக்குள்ளாக்கி, நேர்மையாகவே காரியங்களை நடப்பித்துவிட்டு, இதன்பிறகும், இவ்வாறு நடக்கிறதே என்று எண்ணும்போது சிறிது காலம் எனக்கு அது மனவேதனையாகத்தான் இருந்தது. ஆனால் கோணலான வழியில் நடப்பவர்களோ நேர்மையான மனிதனாக எண்ணப்படுகிறான்; என்னையோ ஒரு கோணல் ஊழிக்காரனாக ஆக்கிடும் காரியமும் நடக்கிறது. நான் என்ன தான் செய்துவிட்டேன்? என்று நான் எண்ணினேன். அப்போது எனக்கு வேதத்திலிருந்து வந்த ஒன்றை நான் கவனித்தேன். வேதத்திலே ஆவிக்குரிய ஊழியத்தையுடைய எந்தவொரு மனிதனும் விதி விலக்கின்றி, அவர்களை சாத்தானால் ஒழுக்கம் பற்றி விஷயங்களில் ஒன்றிலும் குற்றங்காண முடியாவிட்டால், அப்போது, அரசாங்கம் அவர்களை பிடித்துக் கொள்கிறது. வேதத்தில் எங்கு வேண்டுமானாலும் திருப்பிப் பாருங்கள். மோசே, தானியேல், எபிரெய பிள்ளைகள், யோவான் ஸ்நானன், இயேசு கிறிஸ்து - இவர் அரசாங்கத்தினால் உள்ளவற்றிலே மிகக் கடுமையான தண்டனை மூலம் மரித்தார்; பவுல், பேதுரு, பெரிய யாக்கோபு, சின்ன யாக்கோபு ஆகிய ஒவ்வொருவரும் அரசாங்கத்தின் கையில் மரித்தனர். ஏனெனில் ஒவ்வொரு அரசாங்கமுமே சாத்தானுடைய சிங்காசனமாயுள்ளது. இயேசு அவ்வாறு கூறினார், வேதாகமும் அவ்வாறே கூறுகிறது. இதை அறிந்து கொண்டீர்களா? 14 ஒவ்வொரு அரசாங்கமும் பிசாசினால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. கிறிஸ்துவினால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு அரசாங்கம் வரப்போகிறது; ஆனால் அது ஆயிர வருட அரசாட்சியில் தான் ஏற்படப் போகிறது. ஆனால் இப்பொழுது இவ்வரசாங்கங்களோ, அவைகள் எவ்வளவாய் நல்லதென நம்மால் கருதப்பட்ட போதிலும், அவைகளின் பின்னால், சாத்தான் நின்று ஆதிக்கம் செலுத்தி வருகிறான். பிசாசானவனே கூறியுள்ளான். “...இந்த இராஜ்யங்கள் யாவும் என்னுடையவைகள். அவைகளைக் குறித்து நான் எனக்கு இஷ்டமானபடி செய்கிறேன். நீர் விழுந்து என்னைப் பணிந்து கொண்டால் இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்'' என்று சொன்னான் (மத்தேயு. 4:8-9). அப்பொழுது இயேசு: ''அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக...'' என்றார். (மத்தேயு. 4:10) 15 அதற்கு பிறகு நான் உற்சாகம் குன்றினேன். நான் கூறுவதை என் மனைவி கேட்டுக் கொண்டிருக்கிறாள். நான் வீட்டுக்குச் சென்று, அங்கே கூறினேன்; ''இல்லை ஐயா, நான் கொடுக்க வேண்டியதாயிருந்தால் நான் அதை செலுத்திவிடுவேன்; நான் கொடுக்க வேண்டியதில்லை; எனவே நான் அதை செலுத்தப் போகிறதில்லை. அவ்வளவுதான். எப்படி நான் அதை செலுத்த முடியும்?'' என்று நான் கூறினேன். ஆகவே நான் வீட்டில் என் மனைவியிடம், ''மேடா, பிள்ளைகளின் முகமெல்லாம் கழுவி, அவர்களுடைய ஆடைகளையெல்லாம் ஆயத்தம் செய்து வை, நான் புறப்படுகிறேன். அவர்கள் விட மாட்டார்கள்... யாவும் தலைகீழாக ஆகிவிட்டது. நான் என்ன தான் செய்துவிட்டேன். நீயே சொல். இன்னும் நாற்பதாயிரம் டாலர்களா செலுத்த வேண்டும்? வ்யூ! அது என்னைப் பொருத்தமட்டில் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை நீ உணரமாட்டாய்'' என்று கூறினேன். அதற்கு அவள், எப்படியாக ஒரு அருமையான மனைவி நயமாக வருவாளோ அவ்வாறு வந்து கூறினாள். “நான் கிளம்புகிறேன்'' என்று நான் கூறினேன். “அப்படிச் செய்வது எந்தவிதத்திலும் நன்மை பயக்கும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அந்தக் காரியத்தைப் பற்றி இதுவரையில் ஜெபித்துவிட்டீர்களா?” என்று அவள் கேட்டாள். 16 ''நல்லது, ஒருவேளை நான் மறுபடியும் ஜெபித்துப் பார்க்கிறேன்'' என்று எண்ணினேன். நான் அவரிடம் திரும்பிச் சென்றேன். அப்போது அவர் என்னிடம் ஒரு வேத வாக்கியத்தை குறிப்பிட்டதாக எனக்குத் தெரிந்தது. தேவன் எப்போதும் என்ன செய்கிறார், சொல்லுகிறார் என்பதைப் பற்றி அறிய நாம் வேதவாக்கியத்தைக் கவனிக்கவே விரும்புகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்களா? ஒருநாள் இயேசுவை குற்றங்கண்டு பிடித்து, அவரை அரசாங்கத்திடம் ஒப்புக் கொடுக்கும்படி அவரிடத்தில், ''சுதந்திரமான யூதர்களாகிய நாம் இராயனுக்கு வரி கொடுப்பது நியாயமோ, அல்லவோ'' என்று கேட்டார்கள். “ஒரு பணத்தை எனக்குக் காண்பியுங்கள், இதிலிருக்கிற மேலெழுத்து யாருடையது” என்று இயேசு கேட்டார் . அதற்கு அவர்கள்: “இராயனுடையது” என்றார்கள். ''அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்“ (லூக்கா. 20:25). 17 அதைக் குறித்து நான் சிந்தித்துப் பார்த்தேன். நான் வேதாகமத்தை திருப்பி அவ்வசனத்தை நான் வாசித்திருந்தேன். நான் எனக்குள் இவ்வாறு சிந்தித்தேன்; ''மெய்யாகவே, கர்த்தாவே, அது சரிதான்! ஆனால் இந்தப் பணங்கள் இராயனுடையது அல்லவே! இப்பணங்கள் உம்முடையதாயிற்றே, அவைகள் இராயனுடையது அல்லவே. அது என்னுடையதாயிருந்தால், அதினால் நான் இன்னும் கூடுதலாக வரிகள் செலுத்த வேண்டியிருந்தால் அது வேறு விஷயம். அது பிரதானமாக இராயனுக்குச் சொந்தமானவை அல்லவே, அப்பணம் உம்முடையதாயிற்றே“ என்றேன். அவருக்கு வேத வசனத்திலே எப்போதும் பதிலை உடையவராயிருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் மேற்கொண்டும் வேதத்தில் வாசித்தேன். இயேசு, ''சீமோனே, உன் பாக்கெட்டில் மீன் தூண்டில் வைத்திருக்கிறாயா? எப்போதும் ஒரு தூண்டில் வைத்திரு. உனக்குத் தெரியுமா? நான் இன்று காலையில் அந்த ஆற்றிலுள்ள மீன் வங்கியில் பணம் டெபாசிட் செய்துள்ளேன் என்று நான் பணம் செலுத்தி வைத்துள்ளேன். அந்த வங்கியாளர் நிச்சயமாக தன்னிடம் உள்ளதை உன்னிடம் கொடுத்து விடுவான். நீ அந்த ஆற்றண்டையில் போய் தூண்டில் போட்டு, அப்போது உனக்கு கிடைக்கும் வங்கியின் வாயைத் திறந்து பார், அது உன்னிடம் அந்தப் பணத்தை கொடுத்துவிடும். நாம் அவர்களுக்கு இடறலாயிருக்க வேண்டாம். அவர்களுக்கு இடறலைக்கொண்டு வராதே. போய் அதை எடுத்து உனக்காகவும் எனக்காகவும் செலுத்துவாயாக'' என்று கூறினார். “மெய்தான் ஆண்டவரே, உம்மிடம் மீன் வங்கிகளும் இன்னும் யாவும் தேசம் முழுவதிலும் உள்ளன. காரியங்கள் எப்படி நடக்கும் என்பதை அறியாதவனாய் நான் இருந்துவிட்டேன்'' என்று நான் எனக்குள் எண்ணினேன். 18 நாங்கள் திரும்பிச் சென்றோம். இங்கே சபையில் உள்ள சகோதரர்கள் என்னுடைய பண முறியின் பேரில் பிணையாக நின்றார்கள். அவ்வாறு வங்கியில் நான் ஒரு பண முறியை எழுதிக் கொடுத்து, நாற்பதாயிரம் டாலர்கள் வாங்கி வரிப் பணத்தைச் செலுத்தி தீர்த்தேன். நான் காசோலையை எழுதிக் கொடுத்த விதத்தை குறித்து நான் வீடு திரும்பிய பிறகு அறிய விரும்பினேன்; ஏனெனில் அவர்கள் திரும்ப என்னிடம் வருவார்களோ என்பதினால், ''நான் எல்லா வரி பாக்கிகளிலுமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளேன் என்று இதன் மூலம் தெரிவிக்கிறேன்“ என்று எழுதினேன். அதை யாராவது இனிமேல், வேறு யாருக்காவது மாற்றி ஒப்படைத்தால், நிச்சயமாக அவர்கள் அதன்பிறகு ஒரு குழப்பத்தில் அகப்பட்டுக் கொள்வார்கள். நான் வங்கியாளர்களை அதை அவர்கள் செய்துவிட்டார்களா என்று அறிய அவர்களை திரும்ப தொலைபேசியில் அழைத்துக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். இறுதியில் பாப் என்னிடம், “பில்லி அவர்கள் அதைச் செய்துவிட்டார்கள்'' என்று கூறினார். நான் வீட்டிற்குள் சென்று, என் மனைவியின் மேல் என் கரங்களைப் போட்டுக்கொண்டு, ''அன்பே, நான் இப்பொழுது விடுதலையாகிவிட்டேன்'' என்று கூறினேன். விடுதலையாக்கும் உணர்வை என்னவென்று விவரிப்பது? அவர்கள் எனக்கு வரி செலுத்துவதை இனி முதற்கொண்டு மிகவும் சுலபமாக ஆக்கிவிட்டார்கள். இனிமேல் நான் ஆண்டுதோறும் நான்காயிரம் டாலர்கள் வீதம் செலுத்தலாம் என்று ஆக்கிவிட்டார்கள். நான் இனிமேல் இதற்காக காலத்தை வீணடித்துக் கொண்டிருக்க முடியாது. என் ஜனங்களே நான் புறப்பட்டுச் சென்று காரியமாற்ற வேண்டும் இனிமேல். இயேசு வராமலிருந்தால், இந்தப் பணத்தை நான் திரும்பச் செலுத்தித் தீர்க்க எனக்கு பத்து ஆண்டுகள் பிடிக்கும். அவர் கிரியை செய்துவிட்டால், அப்போது எல்லாக் கடன்களும் எப்படியாவது முழுமையாக தீர்க்கப்பட்டுவிடும். அது எதிரானது. ஆகவே, நீங்கள் யாவரும்... என்று நான் நம்புகிறேன். உங்களுடைய ஜெபங்கள் தான் எனக்கு உதவி புரிந்துள்ளன. இன்றிரவில் நான் தொடர்ந்து ஒன்றைக் குறித்து கூறுவேன். உங்களுக்கு மிக்க நன்றி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் எங்கிருந்தாலும் சரி, நான் அதை மறக்கமாட்டேன். 19 இன்றிரவில் கர்த்தருக்கு சித்தமானால், நான் அறிந்திருக்கிற சில உண்மைகள் சிலவற்றை கூறிட விரும்புகிறேன். ஆகவே தவறாது வாருங்கள். ''ஐயன்மீர் இது என்ன சமயம்?'' ஞாபகத்தில் கொள்ளுங்கள். இனி மீதமுள்ள வாரம் முழுவதுக்கும் அவர்கள் முழுமையான நிகழ்ச்சி நிரலை தயாரித்துள்ளார்கள் என்று நான் நம்புகிறேன். திங்கட்கிழமை இரவு, இன்று இன்றிரவிலும் ஆராதனைகள் உண்டு. திங்கட்கிழமை இரவில் விழிப்பு ஜெபம். அதன் பிறகு உங்களுக்கு செவ்வாய்க்கிழமை வருகிறது. அது புத்தாண்டு தினமாகும். அன்று நகரத்தை விட்டு வெளியே வந்திருந்தால், நீங்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்லலாம். அக்கூட்டத்திற்கு நமக்கு சில அருமையான ஊழியக்காரர்கள் இருப்பார்கள். ஒரு பெரிய குழுவான அருமையான பிரசங்கிகள் அவர்கள். நடுநிசி வரையிலும் இடைவெளி விட்டு, அவர்கள் யாவருமே பிரசங்கிப்பார்கள். சிலவேளை அவர்கள் இராப்போஜனமும் எடுப்பார்கள். அவர்கள் இதை இந்தத் தடவை அதை ஏற்படுத்தியிருக்கிறார்களோ அல்லவோ எனக்குத் தெரியாது. உலகமானது கனைத்துக் கொண்டும், அலறிக் கொண்டும், துப்பாக்கியால் சுட்டுக் கொண்டும், மது குடித்துக் கொண்டும் இருக்கையில், நாம் தானே இராப்போஜனத்தை எடுப்போம். (ஆமென்.) புத்தாண்டை இராப்போஜனம் ஆசரித்தலோடு துவக்குவோமாக. 20 இப்போது, நீங்கள் யாவரும் அழைக்கப்படுகிறீர்கள். பரலோகத்தின் தேவன் தாமே அதுவரையிலும் உங்களால் முடிந்தால், தங்கியிருக்க உங்களுக்கு ஒரு தருணத்தை அளிப்பார் என்று நான் நம்புகிறேன். இப்போது, நாம் திருவசனத்தை அணுகும் முன்னர், இதையும் கூட நான் கூறிட விரும்புகிறேன், என்னவெனில், இந்த சபைக்கும், அதன் அங்கத்தினர்களுக்கும், எனக்காக நீங்கள் வாங்கி அளித்துள்ள அருமையான ஆடைகளுக்காக நன்றி செலுத்துகிறேன். உங்களுக்கு மிக்க நன்றி. அது எனக்கு மேலதிகமானது. கிறிஸ்துமஸ் சீசனில், நீங்கள் என் குடும்பத்தினருக்கும் எனக்கும் அளித்த வாழ்த்து அட்டைகளுக்காகவும், அன்பளிப்புகளுக்காகவும் நன்றி. அவைகள் எனக்கு எண்ணிலடங்காதவையாகும். உங்களிடத்திலிருந்து வந்தவை என்று எண்ணும் போது ஒன்றும் அதற்கு ஈடாக அமைய முடியாது. எனவே, சிலர் எனக்கு கிறிஸ்துமஸ் அன்பளிப்புகளை பணமாக அனுப்பித் தந்துள்ளனர். இன்னும் சிலர் அனுப்பியவை... ஒரு சகோதரன், என்னுடைய பெயர் பொறிக்கப்பட்ட பாக்கெட் புக் ஒன்றும் அனுப்பித் தந்துள்ளார். ஒரு சிறிய பின் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. அதிலிருந்து உற்று நோக்கினால் அதில் கர்த்தருடைய ஜெபம் பொறிக்கப்பட்டுள்ளது. ஓ, அவ்விதமான மிக அருமையான பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. நாங்கள் அவற்றை பொக்கிஷமாகக் கருதுகிறோம். நானும் என் மனைவியும், என் பிள்ளைகளும் உங்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறோம். “தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக'' என்ற சிறிய வார்த்தையை நாங்கள் பதிலீடாக அளிக்கிறோம். ஆனால் எந்தவொரு நபரும் அளிக்கக் கூடிய மகத்தான வார்த்தை அல்லது வாழ்த்து என்ற ஒன்று இருக்குமானால் இதுதான் யாவற்றிலும் மகத்தானதாகும். இதைவிட மேலான வாழ்த்து வேறொன்றும் இருக்கவே முடியாது. 21 எனக்கு அத்துப்பாக்கியை வாங்கி அன்பளிப்பாக அளித்த சபையில் உள்ள இச்சகோதரர்களுக்கு நான் கூறுவது என்னவெனில், நான் எனக்கு அளிக்கப்பட்ட சூட்டை அணிந்து கொண்டேன். ஆனால் அத்துப்பாக்கியை இங்கு சபைக்கு கொண்டு வர முடியவில்லை. ஆனால் அது... அவ்வாறு செய்தால் அவர்கள் அப்போது உண்மையிலேயே எனக்கெதிராக ஒன்றைக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு செய்யமாட்டார்களா? சகோதரர்களே, எனவே நான் உங்களுக்கு நிச்சயமாகவே நன்றி கூறுகிறேன். அன்பளிப்பை அளித்திட்ட அவர்களுடைய பெயர்கள் ஒரு சிறிய தாளில் எழுதப்பட்டிருந்தது. அதை வாசிக்கப் போவதாக இருந்தேன். ஆனால் அச்சகோதரர்களில் ஒருவர் நேற்று என்னிடம் வந்து, ''சகோதரன் பிரன்ஹாமே நீங்கள் எனக்கு நன்றி கூற வேண்டாம்... அப்படிச் செய்தால், அதைப் பற்றி ஏற்பட்டுள்ள மகிழ்ச்சி யாவும் போய்விடும்'' என்று கூறினார். பார்த்தீர்களா? எனவே, நான் எண்ணினேன்: “ஒருவேளை ஏனையோரும் அவ்வண்ணமே சிந்திக்கக் கூடும் என்று. ஆனால் உங்களுடைய பெயரானது தட்டச்சு செய்யப்பட்டு என்னிடம் உள்ளது. நான் எப்போதும் அதை நினைவு கூறுகிறேன். கர்த்தர் மகத்தான விதமாக உம்மை ஆசீர்வதிப்பாராக. உங்களுக்கு தெரியும். நான் எங்கு ஓய்வு பெறுகிறேன் என்று. நான் அந்த குகை அறைக்குச் சென்று அங்கே தங்கித்தரித்து, அங்கே தான் இளைப்பாறுகிறேன். ஒரு இறுக்கமான சூழ்நிலையானது ஏற்பட்டு, மேற்கொண்டு நான் ஒன்றும் செயல்பட முடியாத நிலை ஏற்படும் போது, நான் வேட்டைக்கான பயணத்தை மேற்கொள்ள நினைக்கும் போது அதை எடுத்துச் செல்லுவேன். அல்லது எங்காவது மீன் பிடிக்கச் சென்றுவிடுவேன். நான் அதை மெச்சுகிறேன். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. 22 இப்போது திருவசனத்தை நாம் அணுகுகையில், சற்று நேரம் நாம் நமது தலைகளை வணங்குவோமாக! இன்று காலையிலே இங்கு எண்ணிலடங்காத ஜெப வேண்டுகோள்கள் வந்துள்ளன. எனவே நமது தலைகள் தாழ்த்தப்பட்டிருக்கையில், உங்களுடைய விசேஷித்த ஜெப வேண்டுகோள்களைக் குறித்து உங்கள் இருதயத்தில் வைத்து நினைத்துக் கொண்டு, உங்கள் கரங்களை உயர்த்தினவர்களாய், “தேவனே, நான் இப்போது என்ன எண்ணிக் கொண்டிருக்கிறேன் என்பதை நீர் அறிவீர்'' என்று நீங்கள் கூறிட வேண்டுமென நான் நினைக்கிறேன். 23 கர்த்தராகிய இயேசுவே, உயர்த்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு கரத்தையும் நீர் காண்கிறீர். அதன் பின்னால் என்ன உள்ளது என்பதை நீர் அறிவீர். அக்கரத்தின் கீழாக ஒரு ஜெப வேண்டுகோள் உள்ளது. நாங்கள் இப்போதும் ஜீவனுள்ள தேவனுடைய சிங்காசனத்தண்டையிலே பயபக்தியுடன் வருகிறோம், காலத்தின் இடைவெளிக்கப்பால் பரவியிருக்கிற, அம்மகத்தான வெண்முத்து பரப்பப்பட்டிருக்கிற அங்கே யெகோவா தேவன் அமர்ந்திருக்கிறார், அங்கே பீடத்திலே கிறிஸ்துவின் இரத்தம் உள்ளது. அந்த இரத்தத்தின் மூலமாக, ''என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்...'' என்று எங்களுக்குச் சொன்னவர் மூலமாக நாங்கள் கேட்கிறோம். தேவனே, இன்று காலையில் அவர்களுடைய ஜெப வேண்டுகோள்களுக்கு செவி கொடுத்து பதிலளிக்க மாட்டீரா? நீர் அதை அளிக்கும் படியாக கேட்டுக் கொண்டு என்னுடைய ஜெபத்தையும் அவர்களுடைய வேண்டுதல்களோடு சமர்ப்பிக்கிறேன். வியாதியஸ்தர், பெலவீனப்பட்டவர்கள் நிமித்தமாக இங்கே கைக்குட்டைகள் இருக்கின்றன. பரிசுத்த பவுலின் மேல் இருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதியஸ்தர் மேல் போட்டார்கள் என்றும், பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டு நீங்கிப் போயின என்றும், வியாதிகள் நீங்கிப் போயின என்றும் நாங்கள் வேதத்திலிருந்து போதிக்கப்பட்டிருக்கிறோம். பிதாவே, நாங்கள் பரிசுத்த பவுல் அல்லவென்றும், ஆனால், அக்கிரியையை செய்தது, பரிசுத்த பவுலும் அல்ல, அவனில் இருந்த கிறிஸ்துவே அக்கிரியைகள் யாவையும் செய்தார் என்றும் நாங்கள் நிச்சயமாகவே நீண்ட காலமாகவே அறிந்திருக்கிறோம். வேதவாக்கியத்தின்படி நீர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறீர். 24 இப்பொழுது, கர்த்தாவே, நாங்கள் தேவனை வேண்டிக் கொண்டால், அப்போது இவ்வுறுமால்களை எடுத்துக் கொண்டு போய், வியாதிக்காரர் மேல் போட, அதினால் வியாதிக்காரர் குணமடைவார்கள் என்று இந்த மக்கள் விசுவாசிக்கின்றனர். இவ்வுறுமால்கள் வியாதிக்காரர் மேல் போடப்படுகையில், அவ்வாறே சம்பவிக்க வேண்டுமென நான் ஜெபிக்கிறேன். ஒரு சமயம், இஸ்ரவேலரைப் பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு போகிற யாத்திரைப் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, அவர்களை சிவந்த சமுத்திரமானது வழிமறித்து, அவர்களைத் தடுத்தது. ஆனால் தேவனோ அவ்வக்கினி ஸ்தம்பத்தின் மூலமாக கோபங் கொண்ட கண்களுடன் அதை உற்று நோக்கினார், அதைக் கண்ட சமுத்திரமானது பயந்து பின்னிட்டு விலகினது, தண்ணீர்கள் பிரிந்து நின்றது, அப்போது வெட்டாந்தரை வழியாக இஸ்ரவேல் மக்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு கடந்து சென்றனர். இப்போதும் கர்த்தாவே இயேசுவின் இரத்தத்தின் மூலமாக கண்ணோக்கியருளும். இன்று காலையில் இங்கே நாங்கள் நிகழ்த்துகிற விசுவாசத்தின் செயலை நீர் கண்ணோக்கியருளும், அதினால், சாத்தான் பயந்து விலகியோடட்டும். இங்கே பிரசன்னமாயுள்ள மோட்ச யாத்திரிகள் ஒவ்வொருவரும், இந்த உறுமால்கள் எவர் மேலெல்லாம் வைக்கப்படுமோ அவர்கள் யாவருக்கும், தடையின்றி அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அக்கினி ஸ்தம்பமாகிய பரிசுத்த ஆவியால் நடத்தப்பட்டு, யாத்திரை செய்யும்படி அவர்களுக்கு சாலையானது திறந்து விடப்படட்டும், வியாதிகள் நீங்கிப் போகட்டும். இதை அளித்தருளும் கர்த்தாவே. இப்போதும், இவ்வாராதனையையும், வார்த்தைகளையும், பொருளையும், வாசித்தலையும் ஆசீர்வதியும்; இன்னதென்று நாங்கள் அறியாமலிருக்கிறதும், மகத்தானதும், பயப்படத் தக்கதுமான ஒன்றை நாங்கள் மிகவும் கிட்டிச் சேர்ந்து கொண்டிருக்கிற வேளையிலே, பரிசுத்த ஆவியானவர் தாமே இன்று காலையில் திருவசனத்தை எடுத்து, அதை எங்கள் ஒவ்வொருவருக்கும் இனிமையாக பகிர்ந்தளிப்பாராக. கர்த்தாவே எங்களுடைய இருதயங்கள் ஆச்சரியமான விதமாக அசைக்கப்படுகின்றன. நீரே இன்று காலையிலே, உம்முடைய வார்த்தையை வியாக்கியானித்து, அதன் அர்த்தத்தை எங்களுக்கு தெரியப் பண்ணும்படியாக, உம்மையும் உமது வசனத்தையும் நாங்கள் பயபக்தியுடன் அணுகுகையில் இப்போது நாங்கள் ஜெபிக்கிறோம். இதை நாங்கள் இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறோம். ஆமென். 25 ''இது என்ன சமயம் - இன்றிரவிலே நீங்கள் மறந்துவிடாதீர்கள்“. ஆகவே இப்பொழுது, இக்காலை வேளையில் வேதாகமத்தை வைத்துள்ளவர்கள் திருவசனத்திலே அப்போஸ்தலர்களின் நடபடிகள் புத்தகத்திற்கு திருப்புங்கள். அதிலிருந்து தான் சற்று நேரம் நாம் பிரசங்கிக்கப் போகிறோம். அக்கறை கொண்டவர் அதை குறித்துக் கொள்ளுங்கள். நாம் இரண்டு அல்லது மூன்று இடங்களில் வாசிக்கலாம். அப்போஸ்தலர்: 26:15. முதலில் அப்போஸ்தலர் 26-ம் அதிகாரம் 15-ம் வசனத்திலிருந்து துவக்கம். அதன்பிறகு நாம் அப்போஸ்தலர்: 23:11-ஐ வாசிக்க விரும்புகிறோம். இவற்றோடு நீங்கள் விரும்பினால், பிலிப்பியர்: 1:20-ஐயும் கூட்டிக் கொள்ளுங்கள். ஒருவேளை அதை வாசிக்க எனக்கு நேரமில்லாமல் போகலாம். இது யாவும் ஒரே விஷயத்தைப் பற்றினவைதான். அதே வார்த்தைகள்தான். 26 இப்போது, அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் 26:15 இவ்வாறு இவ்வசனங்கள் கூறுகின்றன. அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர் நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப் போகிறவைகளையுங் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும், சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்கு தரிசனமானேன். உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி; அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவ மன்னிப்பையும் பரிசுத்தமாக்கப் பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக் கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும் பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். ஆகையால் அகரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரம தரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை. முன்பு தமஸ்குவிலும் எருசேலமிலும் யூதேயா தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும் பின்பு புறஜாதியாரிடத்திலும் நான் போய் அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக் கேற்ற கிரியைகளைச் செய்ய வேண்டுமென்று அறிவித்தேன். அப். 26:15-20 அப்போஸ்தலர் நடபடிகள் 23-ம் அதிகாரம் 11-ம் வசனம். அன்று இராத்திரியில் கர்த்தர் பவுலின் அருகே நின்று, பவுலே, திடன்கொள்; நீ என்னைக் குறித்து எருசலேமிலே சாட்சி கொடுத்தது போல ரோமாவிலும் சாட்சி கொடுக்க வேண்டும் என்றார். நமக்கு முன்பாக உள்ள இந்த மிகுந்த கிருபையுள்ள பரிசுத்த வசனத்தின் வாசித்தலோடு தேவன் தாமே தமது பரிசுத்த ஆசீர்வாதங்களை கூட்டி அளிப்பாராக. 27 சமீபத்தில் ஒரு மனிதன், “முற்றிலுமானவர்” என்ற வார்த்தையை அவர் பிரசங்கிக்கும் போது உபயோகிக்க நான் கேட்டேன். அது மிகவும் அருமையான வார்த்தை என்று நான் எண்ணினேன். “முற்றிலுமாக'' என்ற வார்த்தை அநேக சமயங்களில் உபயோகிக்க நான் கேட்டிருக்கிறேன். அது... வெப்ஸ்டர் அகராதியில் அதைப்பற்றி நான் பார்த்தேன். (Absolute) என்ற வார்த்தைக்கு வெப்ஸ்டரின் அகராதியின்படி, ''தன்னிலே தானே பரிபூரணமான; எல்லையற்ற வல்லமை; பிரதானமாக அதுவே இறுதியானது'' என்றெல்லாம் அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது. கடைமுடிவான மூலாதாரமான ஒன்றானது ''ஆமென்“ என்பதாக இருக்கிறது. அப்படித்தான் இருக்கிறது. 'முற்றிலுமானது' என்ற வார்த்தையானது ''வரம்பற்ற வல்லமை'' என்ற அர்த்தங் கொண்டதாகும். அது தன்னிலே தானே பரிபூரணத்தைக் கொண்டதாயிருக்கிறது. அதுவே எல்லாமாயிருக்கிறது. அதுவே தீர்வு செய்கிறது. ”அது ஒரு மகிமையான காரியமாயிருக்கிறது; அது ஒரு அற்புதமான வார்த்தை'' என்று எனக்குள் சிந்தித்தேன். வார்த்தை என்பது, “ஒரு சிந்தை தெரியப்படுத்துதல்” என்று அர்த்தங் கொள்ளும். வார்த்தையானது முதலில் ஒரு சிந்தையாக இருக்கிறது, பிறகு அது வார்த்தையாக ஆகிறது; ஏனெனில், வார்த்தையைப் பேசு முன்னர் முதலில் அது உங்களில் சிந்தையாக இருக்காமல் நீங்கள் அதை பேசமுடியாது. 28 நாம் அன்னிய பாஷைகளில் பேசும் போது, அப்போது நமக்கு சிந்தையில்லை. அப்போது தேவன் நமது சிந்தைகளை அவரே எடுத்துக் கொள்கிறார். நமது உதடுகளை உபயோகித்து தேவனுடைய சிந்தையானது வார்த்தைகளாக பேசப்படுகிறது. நீங்கள் ஆவியினால் ஏவப்பட்டு அன்னிய பாஷைகளில் பேசும்போது, நீங்கள் என்ன சொல்லுகிறீர்களென்பதைப் பற்றி நீங்கள் எண்ணுவதோ, அல்லது அறிவதோ கிடையாது. நீங்கள் அன்னிய பாஷைகளில் பேசுவதை வியாக்கியானம் செய்யும் போதும், நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்பதை பற்றி உங்களுக்கு தெரியாது. நீங்கள் அப்படியே பேசுகிறீர்கள், அவ்வளவுதான். புரிந்து கொண்டீர்களா? அது தேவனாயிருக்கிறது. ஏனெனில், நீங்கள் ஆவியினால் நிறைந்து பேசும் விஷயங்களை, சாதாரணமாக, பேசும்படியாக உங்கள் எண்ணத்தில் அவைகள் ஏற்படுவதில்லை. 29 ஆனால், “முற்றிலுமான” என்றால், அது யாவுங் கடந்த இறுதியான என்பதாக இருக்கிறது. ஆகவே, ஒவ்வொருவருக்கும் அந்த இறுதியான யாவுங்கடந்த ஒன்று இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். சாதனை நிகழ்த்தப்பட்ட ஒவ்வொரு மகத்தான சாதனையும் அதன் பின்னால் ஒரு “முற்றிலுமாக” ஒன்றைக் கொண்டிருத்தல் வேண்டும். அது என்னவாயிருந்த போதிலும் சரி, அதன் பின்னால் அவ்வாறாக ''முற்றிலுமான“ ஒன்றைக் கொண்டிருத்தல் வேண்டும். எந்த ஒரு நபரும் ஏதாவது ஒரு சாதனையை நிகழ்த்த வேண்டுமெனில் அதற்கு முன்பாக முதலில் அந்நபருக்கு தன்னோடு ஒரு வரம்பற்ற வல்லமை உண்டாயிருத்தல் வேண்டும். யாவற்றின் முழுமைக்குள் அல்லது பூரணத்திற்குள், அல்லது அந்த ''ஆமென்” என்பதற்குள், அல்லது நீங்கள் என்னவாயிருக்கிறீர்களோ அதன் இறுதிக் கட்டத்திற்கு வருகிற வரையிலும், இந்த அனுபவம், அந்த அனுபவம் என்று பல்வேறு காரியங்களுக்குள்ளாக சுழன்று வந்து கடைசியாக இந்த இறுதிச் சுற்றில் வந்து விடுகிறீர்கள். நீங்கள் உங்களை கண்டிப்பாக பிணைத்துக் கொள்ளும்படியான ஒன்று உங்களுக்கு உண்டாயிருக்கிறது. அதாவது ஒவ்வொரு சாதனையும் நிகழ்த்துவதற்காக நீங்கள் உங்களை அந்த முற்றிலுமானதாக இருக்கும் அவ்வாதாரக் கம்பத்தோடு பிணைத்துக் கொள்ளுங்கள். அது ஓரிடத்திலுள்ளது. அது அநேக வித்தியாசமான காரியங்களின் வழியாக சுற்றி வரும். இறுதியில் அந்த ஆதாரமான முற்றிலுமானதில் போய் முடிவடையும். ஆனால் அதன் எல்லாவற்றிற்கும் அங்கே அந்த “ஆமென்'' என்பது உள்ளது. அவ்விதமான ஒன்று இருந்தாக வேண்டும். அவ்விதமாக ஒன்று இல்லாமல் நீங்கள் வாழ்க்கையை வாழ முடியாது. 30 நீங்கள் திருமணம் செய்துகொள்ளும் போது, நீங்கள் அந்த ஆதாரமான பிணைத்துக் கொள்ளும் முனையில் முற்றிலுமானதில் வந்தடையும் வரையிலும், நீங்கள் உங்கள் சிந்தையினூடே பல காரியங்களைச் சுற்றி வரவேண்டியதாயுள்ளது. அதுதானே உங்களுடைய மனைவி, அல்லது கணவருக்கு என்று இருக்கும் உங்களுடைய நேசம் ஆகும். நல்லது, ஒருவேளை உங்கள் மனைவி, ஜானுடைய மனைவியை விட அழகில்லாமல் இருக்கக்கூடும், அல்லது அவளைப் போலவே, அல்லது இவளைப் போலவோ இல்லாதிருக்கலாம். ஆனால் உங்களைத் தொடுகிற ஏதோ ஒன்று உங்கள் மனைவியினிடத்தில் உள்ளது. ''அவள் வேறொருத்தியைப் போல அழகுள்ளவளாக இல்லாதிருக்கக் கூடும்'' என்றோ அல்லது “என் கணவர் வேறொருவரைப் போல் அழகுள்ளவராக இல்லாதிருக்கக் கூடும்'' என்று நீங்கள் கூறலாம். ஆனால் அந்த நபர் ஏனையோரைவிட வித்தியாசமானவராக இருப்பதற்கு அவரிடத்தில் ஒரு முற்றிலுமான ஒன்று இருக்க வேண்டும். அதன் பேரில் தான் நீங்கள் பற்றிக் கொள்கிறீர்கள். அவ்விதமான முற்றிலுமான ஒன்று அந்த நபரில் இல்லையெனில், நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதிருத்தல் நன்றாக இருக்கும். 31 வேதாகமத்திலே, அந்த முற்றிலுமானதைப் பெற்றிருந்த அநேகரைக் குறித்து நாம் எண்ணிப் பார்க்க முடியும். வேதாகமம் முழுவதிலும் அந்த முற்றிலுமானதைக் குறித்து எடுத்துக் கொண்டு, இப்போதிலிருந்து இரண்டு வார காலத்திற்கு அதைக் குறித்து எவ்வளவாய் நாம் சிந்திக்க முடியும். அந்த முற்றிலுமானதைப் பற்றி நாம் எடுத்துக் கொள்வோமென்றால், அதன்மேல் பாகத்தைக் கூட அந்த காலத்திற்குள் நம்மால் வந்தெட்ட முடியாது போய்விடும். அதைப் பற்றிய ஒன்றிரண்டு உதாரணங்களை நான் எடுத்துக் கொண்டு அவைகளை விவரிக்கட்டும். யோபைப் பாருங்கள். இப்போது, அவனிடம் ஒரு முற்றிலுமானதை கொண்டிருந்தான். அவன் ஒரு நீதிமானாயிருந்தான். அவன் வாழ்க்கையில் எல்லாவிதமான தீங்கும் அவனுக்கு நேரிட்டது. அவன் நீதிமானாயிருக்கவில்லை என்று ஒருபோதும் சொல்லத் துணியமாட்டோம். ஏனெனில் தேவன் அவன் நீதிமானாயிருந்தான் என்று கூறினார். யோபைப் போல பூமியிலே ஒருவனும் இருக்கவில்லை. தேவனுடைய பார்வையிலே அவன் பூரணமான மனிதனாயிருந்தான். அவன் அதை அறிந்திருந்தான். ஏனெனில் அவனிடத்தில் அந்த பரிபூரணமான முற்றிலுமானது இருந்தது. 32 எல்லாம் முரண்பட்டதாக இருந்தபோது, அவன் வியாதிப்பட்ட பொழுது, அவனுடைய சிநேகிதர்கள், “இதோ யோபே, நீ பாவம் செய்து கொண்டிருந்தாய் என்பதை அது நிரூபித்துவிட்டது. நீ தவறாயிருக்கிறாய்'' என்று ஒருவேளை கூறியிருக்கக் கூடும். பிறகு, அந்த பிஷப்புகள் யோபினிடத்தில் வந்தார்கள்; அவர்களெல்லாம் யோபுவைத் தேற்ற வந்தவர்கள் என்று கூறிக் கொண்டார்கள், யோபை அவர்கள் தேற்றுவதற்கு பதிலாக, அவனது ஜீவியத்திலே அவர்கள் பாவத்தைத் தவிர வேறெதையும் காணவில்லை. ஏனெனில் தேவன் அவனை அவருடைய வழியிலே தான் நடத்தினார். அவனுடைய பிள்ளைகள் கொல்லப்பட்டனர்; அவனுடைய ஆஸ்திகள் சுட்டெரிக்கப்பட்டன, யாவும் தவறாகப் போய்விட்டன. அவனது சொந்த ஜீவனே மோசத்திற்கேதுவாக இருந்தது. தலை முதல் கால் வரை கொடிய கொப்புளங்களால் நிறைந்தவனாய், சாம்பலின் மேல் அமர்ந்திருந்தான். அவனுடைய வாழ்க்கைத் துணைவியாகிய அந்த இனியவளே, அவனது பிள்ளைகளின் தாயே, அவனைப் பார்த்து, “தேவனை சபித்து உமது ஜீவனை விடும்'' என்றாள். ஆனால் இவையெல்லாவற்றின் நடுவிலும், யோபு தன்னோடு முற்றிலுமானவரை உடையவனாயிருந்தான். 33 ஓ, வியாதியின் வேளையில் நாம் நம்மை அந்த முற்றிலுமானவரோடு பிணைத்துக் கொள்ளக் கூடுமானால் அது எவ்வளவு நன்றாயிருக்கும். யேகோவா என்ன விரும்புகிறோரோ அதை தான் செய்துவிட்டதை யோபு அறிந்தேயிருந்தான், அவன் தான் என்ன செய்தானோ அதில் விசுவாசம் கொண்டவனாயிருந்தான். ஏனெனில் யேகோவாவுக்கு அது வேண்டியதாயிருந்தது. நாம் மாத்திரம் அதேவிதமாக அதை செய்யக் கூடுமென்றால் அது எவ்வண்ணமாயிருக்கும். அவனது பாவங்களுக்காக ஒரு சர்வாங்க தகன பலியை யேகோவா விரும்பினார். யோபு, தனக்காக மட்டுமல்ல, தன் பிள்ளைகளுக்காகவும் கூட ஒரு சர்வாங்க தகன பலியை செலுத்தினான். அதுவே தேவனுக்குத் தேவையாயிருந்தது. “இன்றைக்கும் அவர் அதை கேட்கிறார்'' என்று நான் விரும்புகிறேன் என்று நீங்கள் கூறலாம். அதைவிடக் குறைவாகத்தான் அவர் கேட்கிறார், அதென்னவெனில் அவருடைய வார்த்தையின் பேரில் விசுவாசம் கொள்ள வேண்டுமென்பதைத்தான். நீங்கள் அவருடைய வார்த்தையை உங்களுடைய எல்லாமாக, முற்றிலுமானதாகக் கொள்ளுவீர்களென்றால் வேதத்திலுள்ள எந்தவொரு தெய்வீக வாக்குத்தத்தத்தோடும் கூட உங்கள் ஆத்துமாவை உங்களால் பிணைத்துக் கொண்டு விடமுடியும். எவ்வளவாய் அலைகள் உங்களை மோதியடித்தாலும் சரி, நீங்கள் இன்னமும் உங்களுடைய முற்றிலுமானவரோடு பிணைக்கப்பட்டுத்தான் இருக்கிறீர்கள். 34 அவனது தேற்றரவாளர்கள் ''நீர் பாவம் செய்தீர்'' என்று கூறின போது, தான் அவ்வாறு செய்யவில்லை என்று அறிந்தவனாய், அவரை விடாமல் பற்றி கொண்டவனாயிருந்தான். அவன் நீதிமானாயிருந்தான்; ஏனெனில் யேகோவா விரும்புவதையே அவன் செய்திருந்தான். ஒரு மனிதன் அவனிடம் வந்து, ''உன் பிள்ளைகள் மரித்துவிட்டார்கள்'' என்று கூறினான். இன்னொருவன் அவனிடம் வந்து, “வானத்திலிருந்து அக்கினி விழுந்து உன்னுடைய ஒட்டகங்களைப் பட்சித்துப் போட்டுவிட்டது,'' என்று கூறினான். அவனது தேறுதலைக் கெடுக்க வந்தவர்கள் எடுத்துரைத்த வாதத்தைப் பாருங்கள்; அவர்கள் கூறினதாவது: “வானத்திலிருந்து அக்கினி இறங்கி வந்திருக்கிறது. இப்போதும் யோபே, இது எதை நிரூபிக்கிறதென்றால்... “அது ஒன்றையும் நிரூபிக்கவில்லை” “யோபே நீ நீதிமானாயிருந்தால், அவர் உம்முடைய பிள்ளைகளை கொன்றிருக்கவே மாட்டார்'' என்றார்கள். ஆனால் யோபோ, ''நான் நலமானதையே செய்தேன் என்பதை நான் அறிவேன்“ என்று கூறினான். அவன் தொடர்ந்து விடாமல் பற்றிக் கொண்டான். அவன் தன்னிடத்திலே ஊக்கமாக செயல்படுவதற்கு ஏற்ற ஒன்றைக் கொண்டிருந்தான். அதை அவன் ஏற்றுக் கொண்டிருந்தான். தேவன் அவனிடத்தில் அவன் என்ன செய்ய வேண்டுமெனக் கூறியிருந்தாரோ சரியாக அதையே அவன் செய்து முடித்தவனாயிருந்தான். அதைப் பற்றி பூரண நிச்சயமுள்ளவனாயிருந்தான். 35 பின்பு, அவன் அந்த முற்றிலுமானவரைப் பற்றிக் கொண்டிருக்கிற வேளையில், அவரோடு தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கிற கயிறு முதலில் தளர்த்தியாக இருந்தது, பின்பு, சுற்றி சுற்றி வருகையில், அக்கயிறு இறுகிக் கொண்டே வந்துவிட்டதை அவன் உணர்ந்தான். ஆனால் அது இறுகுவதற்கு ஆரம்பிக்கையில், ஆவியானவர் அவன் மேல் வந்தார், அப்போது அவன் எழுந்து நின்று, அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தபடியால், அவன் கூறினதாவது; “என் மீட்பர் உயிரோடிருக்கிறார்...'' ஆமென்! கவனித்தீர்களா? அவன் அந்த முற்றிலுமானவரோடு தன்னை இறுகப் பிணைத்துக் கொண்டான். அவரோடு அவன் தொடர்பு கொள்ளுகிற கட்டத்திற்கு வந்தான். தான் சரியானதையே செய்திருப்பதை அவன் அறிந்திருந்தான். ஒரு நாளிலே தான் அதனோடு இணைத்துக் கொள்ள வேண்டுமென்று அறிந்திருந்தான். ''என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப் போன பின்பு நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்”. அப்போது அவன் அறிந்தான், தன்னுடைய முற்றிலுமானவரில் நங்கூரமிடப்பட்டதை அவன் அறிந்திருந்தான். 36 முற்றிலுமானவனான, ஆபிரகாம் பாபிலோனிலிருந்து பாபேல் கோபுரத்திலிருந்து சினேயார் தேசத்திற்குள் வந்தான். அங்கே அவன் தன் தந்தையோடு பரதேசியாய் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். ஒருவேளை அவன் ஒரு விவசாயியாக இருந்திருக்கக் கூடும். ஆனால் ஒரு நாளிலே, அவன் காட்டிலே பெரிய பழங்களை பொறுக்கிக் கொண்டிருந்திருக்கக் கூடும். அல்லது தனது உணவுக்காக ஒரு மிருகத்தை அவன் வேட்டையாடப் போயிருக்கக் கூடும். அங்கு எங்கோ ஓரிடத்திலே தேவன் அவன் எழுபத்தைந்து வயதாயிருக்கையிலே, அவனோடு பேசினார். அவனும், அறுபத்தைந்து வயதான அவனது மனைவி சாராளும், பிள்ளையற்றவர்களாயிருந்தனர். அப்போது தேவன் அவனிடத்திலே, “சாராள் மூலமாக உனக்கு ஒரு பிள்ளை கிடைக்கப் போகிறது? ஆனால் இதை அடைவதற்காக நீ உன்னை வேறு பிரித்துக் கொள்ள வேண்டியது அவசியமாயிருக்கிறது'' என்று கூறினார். 37 தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எப்போதும் நிபந்தனையுடன் கூடியதாகவே இருக்கிறது. நீர் முற்றிலுமாக நீங்கள் எத்தனையாய் அடிப்படைவாதியாய் இருந்தபோதிலும், வாக்குத்தத்தங்கள் எப்போதும் நிபந்தனையின் கீழாகவே உள்ளன. அந்த நிபந்தனையானது என்ன, அதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி அறிய இங்கே நாம் நிறுத்தி வேத வாக்கியங்கள் பூராவும் இங்கு அங்குமாக எவ்வளவாய் மணிக்கணக்கில் நாம் ஆராயலாம். நீங்கள் விரும்புகிற அளவுக்கு அடிப்படைவாதியாக இருக்கக் கூடும். ஆனால் வாக்குத்தத்தங்கள் நிபந்தனைகளின் பேரில்தான் உள்ளன. முன்குறித்தல் மற்றும் யாவும். 38 கவனியுங்கள், ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. எழுபத்தைந்து வயதுள்ள இந்த மனிதனும், அறுபத்தைந்து வயதுள்ள அவனது மனைவியுடன் ஒரு நாகரிகம் மிக்க உலகத்தை இப்படிப்பட்ட நம்பிக்கையுடன் சந்திக்க நேரிடுவது எத்தனை பயங்கரமான காரியமாயிருக்கும். அவனும் அவளும் இளந் தம்பதிகளாக இளவயது முதற் கொண்டே சேர்ந்தே வாழ்ந்து இருக்கிறார்கள். அவளுங் கூட ஒருவகையில் அவனுக்கு ஒன்று விட்ட சகோதரியாக இருந்தாள். இப்போது, அவள் மூலமாக அவன் குழந்தையைப் பெற்றுக் கொள்ளப் போகிறான். ஆனால் அவன் தன்னோடு முற்றிலுமானவரைக் கொண்டவனாயிருந்தான். ஒன்றும் அவனை அசைக்கப் போகிறதில்லை. முதலாம் மாதம் கடந்தது, ஒன்றும் நடக்கவில்லை. அவன் தனது முற்றிலுமானவரைப் பற்றிப் பிடித்தேயிருந்தான். தான் தேவனோடு பேசினோம் என்பதை அவன் அறிந்தேயிருந்தான். இரண்டாம் ஆண்டு, பத்தாவது ஆண்டு கடந்துவிட்டது. இறுதியில் இருபத்தைந்தாவது ஆண்டிலே அவன் நூறு வயதான போது, சாராள் தொண்ணூறு வயதான போது, இன்னமும் அவனது முற்றிலுமானது பற்றிக் கொண்டேயிருந்தது. 39 அவன் மரித்ததின் பின்னால் அவனைப் பற்றி வேதத்தில் எழுதப்பட்ட போது, ''ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல்... தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தில் வல்லவனானான்'' என்று எழுதப்பட்டுள்ளது. ஏன்? அது ஏன் என்று நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? அவன் பூரணமானவனாக, நம்பிக்கையுள்ளவனாக இருந்தான். அவன் செய்ய வேண்டியதெல்லாம், அவன் தன் ஜனங்களை விட்டு தன்னை வேறு பிரித்துக் கொள்ளவேண்டியதாக மட்டுமே இருந்தது. அதை அவன் செய்கிற வரையிலும் தேவன் அவனை ஆசீர்வதிக்கவே இல்லை. அவன் தன் தந்தையையே அழைத்துச் சென்றான். அவன் மரித்தான். லோத்தை அழைத்துச் சென்றான், லோத்தும் அவனை விட்டுப் பிரிந்தான். அவன் பிரிந்து சென்ற பிறகு, தேவன் அவனிடத்தில் வந்து, ''இப்போது தேசத்தில் நடந்து திரி'' என்றார். கீழ்ப்படிதல் வேண்டும். வாக்குத்தத்தமானது நிபந்தனையின் பேரில் தான் உள்ளது. தேவனோடும் அவருடைய வார்த்தையோடும் உள்ள காரியம் எப்போதும் அப்படித்தான் உள்ளது. 40 இப்பொழுது, நாம் மோசேயை எடுத்துக் கொள்வோம். விலகியோடின ஊழியக்காரனான தீர்க்கதரிசி; அவனை தேவன் எழுப்பி பார்வோனின் அரண்மனையிலே அவனை பயிற்றுவித்தார். தான் கற்றுக் கொண்ட வேத சாஸ்திரக் கல்வியோடு அவன் புறப்பட்டுச் சென்று, முதலாவதாக ஒரு பிழை ஏற்படுகிறது. அப்போது மோசே மரணத்தைக் கண்டு, கலங்குகிறான். ஏன்? அவனோடு முற்றிலுமானவர் இல்லை. அவன் தனது பிறப்பைப் பற்றி தனது தாயார் எடுத்துக் கூறிய சாட்சியை மாத்திரமே உடையவனாயிருந்தான். அவன் ஒரு விசித்திரமான பிள்ளையாயிருந்தான். அதைப் பற்றி அவனிடம் அவனது தாய் ஏற்கனவே கூறியிருந்தாள். தேவன் தனது பிள்ளைகளை சந்திக்கப் போகிறார் என்று முன்னுரைக்கும் வாக்கியங்களடங்கிய தோற்சுருள்கள் இருந்திருக்கக் கூடும்; ஒரு வேளை காகிதத்திலே எழுதி வைத்திருந்ததை அவர்கள் தங்களோடு கொண்டிருந்திருக்கக் கூடும். இப்போது நாம் நமது காலத்தை அறிந்திருக்கிறது போல அவனும், அப்போது அதுவே வேளை என்று அறிந்திருந்தான். ஒரு காரியம் சம்பவிக்கப் போகிறது என்பதை நாம் அறிவோம். 41 மோசே அதுதான் உரிய வேளை என்று அறிந்திருந்தான். அதற்கென்றே தான் தெரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவன் அறிந்திருந்தான். ஆனால் அவன் தன்னில் அந்த முற்றிலுமானவரைக் கொண்டிருக்கவில்லை. கவனித்தீர்களா? ஒரு நாளிலே வனாந்திரத்தின் பின்புறத்திலே, தரிசனத்தை இழந்தவனாக அவன் இருந்த போது, முட்செடி எரிகிற அக்கினி ஜூவாலையிலே அவனுக்கு தரிசனமாகி, “மோசே, என் ஜனங்களின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன். அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். அவர்களை விடுவிப்பதற்காகவே நான் இறங்கி வந்தேன். இப்போதும் நீ எகிப்துக்குப் போ'' என்றார். மோசே முறையிட்டான். “எனக்கு நன்கு பேச வராது. எனது பேச்சாற்றல் நன்றாக இல்லை. அவர்கள் என்னை விசுவாசிக்க மாட்டார்கள்'' என்றான். ''உன் கையிலிருப்பது என்ன?“ என்றார் அவர். ''ஒரு கோல்'' என்றான் அவன். “அதைக் கீழே போடு” என்றார் அவர். அப்போது அது ஒரு சர்ப்பமாக மாறியது. “அதின் வாலைப் பிடி” என்றார். அது மீண்டும் அவன் கையில் ஒரு கோலாக மாறியது. அவர் அவனுக்கு ஒரு நிச்சயத்தை, அடையாளத்தைக் கொடுத்தார். தேவன் ஒரு முற்றிலுமானதைக் கொடுக்கையில், அந்த முற்றிலுமானதற்கு, ஒரு உறுதியான அடையாளத்தை எப்போதும் தருகிறார். 42 பிறகு, மோசே எகிப்துக்குப் போன போது, பார்வோனின் முன்பாகவும், மந்திரவாதிகளின் முன்பாகவும் கோலைக் கீழே போட்டான். அந்த மந்திரவாதிகளும் தங்கள் கோல்களைப் போட்டனர். அப்போது, மோசே, “ஓ, நல்லது, நான் தவறாயிருந்தேன், நானும் இவர்களைப் போல ஒரு மலிவான மந்திரவாதியாக இருந்துவிட்டேன். ஒருவேளை நானும் தவறாயிருந்திருக்கக் கூடும் என்று பதறி சொல்லவில்லை. ஆனால் அவன் மட்டற்ற தன்னம்பிக்கை யுடையவனாய், தான் தேவனை சந்தித்தோம் என்பதை உறுதிபட அறிந்தவனாய், அப்படியே தரித்து நின்றான். யோபு எவ்வாறு தேவன் கூறியதை அப்படியே சரியாக நிறைவேற்றினானோ அதே போல், மோசேயும் தனக்கு தேவன் சொன்னபடியே சரியாக அப்படியே செய்தான் என்று நாம் கூறக்கடவோம். மோசே அவருடைய கட்டளைகளை பின்பற்றினான். அப்போது அவன் அப்படியே தரித்து நின்றிருந்து தேவனுடைய மகிமையைக் கண்டான். மோசே தன்னுடைய முற்றிலுமானதோடு, தனக்கு இடப்பட்ட உத்தரவோடு பிணைக்கப்பட்டவனாய் நிலைத்து நின்றான். அவ்வாறு அவன் செய்த பொழுது, அவனது சர்ப்பமானது ஏனைய சர்ப்பங்களை விழுங்கிப் போட்டது. கவனித்தீர்களா? அவன் அந்த முற்றிலுமானதோடு பிணைக்கப்பட்டிருந்தான். “நீ அவர்களை விடுவிக்கும் பொழுது, இந்த மலையிலே மீண்டும் என்னைத் தொழுது கொள்ளுவீர்கள்” என்று கூறினார். 43 அந்த முற்றிலுமானவரிடத்திலிருந்து உங்களை தூர விலக்கி வைக்க சத்துருவானவன் எவ்வளவாய் தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்வான் தெரியுமா? எகிப்திலிருந்து அவர்கள் புறப்பட்டவுடனேயே, குரல்வளையை நெரிக்கிறது போல இருமருங்கிலும் மலைகள் சூழ்ந்திருக்க, முன்னால் சிவந்த சமுத்திரம் எதிர் நோக்கியிருக்க, அவர்கள் சத்துருவால் நெருக்கப்பட்டார்கள். சமவெளியின் வழியாக அவர்கள் பயணமாய் வர, அவர்கள் முன்னால் அவர்களுக்கு வழியில்லை, வேறு எந்த வழியாகவும் அவர்கள் தப்ப முடியாத நிலையிருந்தது. பார்வோனின் சேனையோ அவர்களை பின்னாலிருந்து துரத்தியது. நிற்பதற்கு எப்படிப்பட்ட ஒரு இடம் அது. நீங்கள் செய்வதறியாமல் திகைக்கையில் அப்படிப்பட்ட ஒரு இடத்தில் உங்களை பிசாசு எப்படியாய் நெருக்குகிறான் பாருங்கள்! ஆனால், நீங்கள் அந்த முற்றிலுமானதோடு பிணைக்கப்பட்டிருந்தால், அப்போது பயமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ''நீ அவர்களை விடுவித்து வெளியே கொண்டு வரும்போது, இந்த மலையின் மேல் என்னைத் தொழுது கொள்ளுவீர்கள். உன் கரத்தினாலே நான் இறங்கி வந்து அவர்களை விடுவித்து, அந்த தேசத்திலே அவர்களை கொண்டு போய் சேர்ப்பேன் என வாக்குரைத்தார். அவன் அந்த வாக்குத்தத்தத்தில் பற்றிக் கொண்டு நிலைத்திருந்தான். அப்போது தேவன் ஒரு கீழ்த்திசைக் காற்றையனுப்பி, சமுத்திரத்தின் ஆழத்திலிருந்து தண்ணீர்கள் பிரிந்து விலகிப் போகச் செய்து, அதினால் அவர்கள் உலர்ந்த தரையில் நடந்து சென்றார்கள். ஒரு முற்றிலுமானது. 44 ஓ, இதைப் பற்றி எவ்வளவாய் வேத வாக்கியங்கள் முழுவதிலும் நாம் காண முடியும்! தானியேல் அந்த முற்றிலுமானதைக் கொண்டிருந்தான். ஷாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் அந்த முற்றிலுமானதைக் கொண்டிருந்தார்கள். தாவீது தன்னுடைய முற்றிலுமானதைக் கொண்டிருந்தான். யாவும் முற்றிலுமானது. பவுலும் அந்த ஒன்றைக் கொண்டிருந்தான். அதைப் பற்றி நாம் வாசித்திருக்கிறோம். அவனுக்கு கிறிஸ்துவை மையமாகக் கொண்டிருந்த அழைப்பு கிடைத்தது. அதுவே அவனுடைய முற்றிலுமானதாக இருந்தது. அக்காரணத்தினால் தான் அவன் அகிரிப்பா என்ன சொல்லுவானோ என்பதைப் பற்றி அஞ்சாதவனாக இருந்தான். நாம் அறிந்திருக்கிறபடி அகிரிப்பா ஒரு யூதனாயிருந்தான். அவனுக்கு முன்பாக அவன் நின்று கொண்டிருந்த போது, இந்த இராஜாக்களின் முன்பாக அவன் நின்றபோது, அவன் அவ்வாறு இருந்தான். தேவன் அவனிடம் ஏற்கனவே, அவன் அவ்வாறு அவர்கள் முன்பாக நிற்கப் போவதாகக் கூறியிருந்தார். எனவே அவன் தன்னிலே அந்த முற்றிலுமானதைக் கொண்டிருந்தான். நான் அத்தரிசனத்தை அகெளவரப்படுத்தவில்லை. அதை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் ஆகாத விதமாக நடந்து கொள்ளவில்லை என்று அவன் கூறினான். ஆனால் அவனோ அதைப் பற்றிக் கொண்டான். அதற்கு கீழ்ப்படியாதவனாக இருக்கவில்லை. அவன் அந்த வேளை வரையிலும் விடாமல் நிறைவேற்றினான். ஏனெனில் அது ஒரு முற்றிலுமானதாக இருந்தது. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட எந்தவொரு ஜீவியத்திற்கும் அதுவே உங்களுடைய முற்றிலுமானதாக இருக்கிறது. 45 அவன் அவரை தமஸ்குவுக்கு போகிற வழியிலே முகமுகமாய் தரிசித்தபடியினாலே அது முதற்கொண்டு பவுலுக்கு அது ஒரு பெரிய விஷயமாக இருந்தது. இதற்கு முன்பாக ஒரு பெரிய அறிவாளியாக அவன் இருந்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வேத வாக்கியங்களிலே அவன் வல்லவனாயிருந்தான். ஆனால், ஒரு பெரிய போதகரிடத்திலே கற்றுத் தேர்ந்து பட்டம் பெற்ற அவனை சனகெரிப் சங்கம் ஆதரித்ததேயல்லாமல், அவனுக்கு வேறு எந்த ஆதாரமும் இல்லை. அவன் தன்னுடைய துறையிலே ஒரு மகத்தான மனிதனாயிருந்தான். ஆனால் அவனோ உறுதியற்றவனாயிருந்தான். அவனது ஸ்தாபனமானது எத்துணை வலுவாயிருந்ததோ, அந்த அளவே அவன் பெற்றிருந்த அவனது முழு முதலான முற்றிலுமான ஆற்றலும் இருந்தது. அவனுக்கு அவ்வளவே இருந்தது. அந்த அளவே அது வலுப்பெற்றிருந்தது. அதற்கு உண்மையாக அவன் கிரியை செய்து கொண்டிருந்தான். அவன் கிறிஸ்தவர்களைப் பிடித்து அவர்களைக் கட்டி, அவர்களை நாசப்படுத்திக் கொண்டிருந்தான். ஸ்தேவானைக் கல்லெறிந்து கொல்லவும் காரணமாயிருந்தான். 46 அவனது வாழ்க்கையின் பிற்பகுதியில் அவன் எருசலேமுக்குப் போக இருந்த போது, ஒரு தீர்க்கதரிசியானவன் அவனிடம், அவனுக்கு எருசலேமிலே கட்டுகளும், சிறைவாசமும் காத்திருக்கின்றன, எனவே பவுலே நீர் அங்கே போக வேண்டாம் என்று கூறினான். அவன் அங்கே போவதற்கு விரும்பியதன் காரணம்... அதற்கு பவுல்: ''நான் அதைப்பற்றி அறிவேன்“ என்றான். அவன் தான் எருசலேமுக்கு ஒரு சாட்சியாக போகப் போவது மாத்திரமல்ல, இயேசு கிறிஸ்துவுக்காக மரிக்கவும் தான் ஆயத்தமாக இருப்பதாகக் கூறினான். ஏனெனில் தான் செய்ததைக் குறித்து அறிந்தேயிருந்தான். அவன் தான் ஒரு தேவனுடைய இரத்த சாட்சியை கொலை செய்ததற்கு காரணமாக இருந்தபடியினால் தன்னுடைய சாட்சியையும் தனது சொந்த இரத்தத்தினால் முத்திரையிட அவன் விருப்பமுடையவனாய் இருந்தான். அவன் இப்போது, பெரிய வேத பண்டிதராகிய கமாலியேலின் பாதத்தருகே உட்கார்ந்து யூதமார்க்கத்தின் எல்லா விஷயங்களைக் குறித்தும் கற்றறிந்து, பெற்ற தனது கல்வியோடு, அவன் தமஸ்குவுக்குப் போய் கொண்டிருந்தான். ஆயினும், இவையெல்லாவற்றையும் அவன் பெற்றிருந்துங் கூட, அவன் உறுதியற்றவனாக இருந்தான்; குறிப்பிட்ட காரியங்களைச் செய்வதற்கு அவனிடத்திலே போதுமான திறனற்றவனாயிருந்தான். அவன் பயணமாக போய் கொண்டிருக்கையில், திடீரென ஒரு ஒளி இடி முழக்கத்துடன் உண்டாகி, அவனை அடித்தது, அதினால் கீழே விழுந்தான். அப்போது அவன் மேலே நோக்கிப் பார்த்தான், அங்கே ஒரு ஒளி அவனது கண்களை குருடாக்கியது. அது என்னே ஒரு விசித்திரமான காரியமாக இருந்தது. 47 சவுலைத் தவிர அவனுடன் இருந்த வேறு யாரும் அவ்வொளியைக் காணவில்லை. அது அவனுக்கு மிகவும் மெய்யானதாக இருந்தது. அது அவனுடைய கண்களைக் குருடாக்கக் கூடிய அளவுக்கு அவனுக்கு அது இருந்தது. அக்கினி ஸ்தம்பமானது அவனுடைய முகத்திலே நேரடியாக வந்து ஒளி வீசியபடியால் அவன் காணமுடியாதபடி முழுவதுமாக குருடாக்கப்பட்டான். “...சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்...'' என்று கூறுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு, ''...ஆண்டவரே, நீர் யார்...'' என்றான். அதற்கு அவர், ''...இயேசு நானே... முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்“, என்றார். அங்கே ஒருவன் உன்னிடத்தில் அனுப்பப்படுவான் என்றும் அவனுக்குச் சொல்லப்பட்டது. பிறகு, அவன் அங்கிருந்து எழும்பினபோது, அங்கே நகரத்திலே ஒரு தீர்க்கதரிசியானவன் இருந்தான், அவன் ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கையிலே ஒரு தரிசனம் கண்டு, அவன் அங்கே வந்தான். அனனியா சவுலிடத்திற்கு வந்து, அவன் மேல் தன் கைகளை வைத்த போது, அவன் தெய்வீக சுகமடைதலினாலே குணமடைந்தான். பின்பு அவன் எழுந்து தன் பாவம் போகக் கழுவப்பட்டு, கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக் கூப்பிட்டு, ஞானஸ்நானம் பெற்றான். அதன்பிறகு தான் அவனுக்கு முழு முதலான அந்த முற்றிலுமானது கிட்டியது. அதற்குப் பிறகு அவன் முன்புபோல இருக்கவேயில்லை. ஜெப ஆலயங்கள் தோறும் அவன், ஒவ்வொரு இடமாகச் சென்று, தான் அழித்து நாசப்படுத்த எண்ணியவற்றையே கட்டியெழுப்ப கிரியை செய்தான். 48 தேசத்திற்கு, கிறிஸ்தவ உலகத்திற்கு, இன்று காலையிலே எவ்வளவாய் அந்த விதமான முற்றிலுமானது தேவையாயிருக்கிறது. சமயக் கோட்பாடுகளையும், மத சடங்காச்சாரங்களையும் செயல்படுத்துபவர்கள், மானிட போதகத்தைக் கொண்டு, நேற்றும், இன்றும், என்றும் மாறாததாயிருக்கிற தேவனுடைய வார்த்தையை தகுதி நீக்கம் செய்யப் பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு முற்றிலுமானவர் தேவையாயிருக்கிறது; அது தமஸ்குவுக்கு போகும் வழியில் ஏற்பட்ட அனுபவத்தைப் போன்றதாகும். அவர் தான் பிணியாளிகளை குணமாக்கி, மரித்தோரை எழுப்பி, பிசாசுகளைத் துரத்த வல்ல ஒரு அசலான முழு முதலான முற்றிலுமானவராகிய ஜீவனுள்ள தேவனாயிருக்கிறார். பவுல் தனக்கு ஏதோ ஒன்று சம்பவித்தது என்று அறிந்தான். அதை அவனிடமிருந்து ஒருவனும் பறித்துக் கொள்ளமுடியாது. என்ன நேரிடினும் கவலையில்லை. அவன் அதனோடு பிணைக்கப்பட்டிருந்தான். அதுவே அவனுக்கு எல்லாமாயிருந்தது. என்ன வந்த போதிலும் சரி, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட ஜீவனிலே அவன் பிணைக்கப்பட்டிருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். ஓ அவன் வாழ்ந்த ஜீவியமோ முற்றிலும் வித்தியாசமான ஜீவியமாகும். 49 பவுல் ஒரு பக்தியுள்ள மனிதனாக இருந்தான் என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள். இன்று காலையிலே உங்களிலே சிலருக்கு... இவ்வொலி நாடாவில் இச்செய்தி பதிவு செய்யப்பட்டு, வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு தேசத்திலும், உலகம் முழுவதிலுமாக, போட்டு கேட்கப்படும் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். இங்கிருக்கிற ஜனங்களில் சிலருக்கும், இன்னும் இவ்வொலி நாடாவில் அடங்கியுள்ள இச்செய்தியானது ஒரு மொழி பெயர்ப்பாளரால் மொழி பெயர்க்கப்பட்டு, ஆப்பிரிக்காவின் பூர்வ குடிமக்களுக்கும், நாகரீகமற்ற நாடோடிகளுக்கும், இன்னும் உலகில் உள்ள வேறு பல தேசங்களில் உள்ள மக்களுக்கும் போட்டுக் காண்பிக்கப்படப் போகிறதே அவர்கள் யாவருக்குமாக நான் கூறுகிறேன்; வேதாகமத்தின் கல்வியறிவு மூலமாக கற்றுக் கொண்டிருக்கிற மதத்தலைவர்களே; நீங்கள் அதை வரலாற்று அடிப்படையில் தான் அதைப் பெற்றுக் கொண்டுள்ளீர்கள்; ஒருவேளை உங்களால் அவைகளை அந்த அடிப்படையில் விளக்கிக் கூற இயலும். ஆனால் நான் உங்களுக்குக் கூறுகிறேன்; நீங்கள் இன்னமும் ஒரு முழு முதலான அந்த முற்றிலுமானதைப் பெற்றுக் கொள்ளவேயில்லையென்றால், நீங்கள் அந்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளவேயில்லை. நீங்கள் ஏதோ ஒரு அனுபவத்தைப் பெற்றுக் கொண்டதாகக் கூறிக் கொள்ளுகிறீர்களே, அதுவும் வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் மறுதலிக்கும்படியாக செய்யுமென்றால், அது முன்பு இருந்தது போல் அவ்வளவு நிஜமாக இப்போது இருக்கவில்லை என்று உங்களைக் கூறச் செய்யுமென்றால்; அற்புத அடையாளங்களின் காலம் கடந்து போய்விட்டது. நமக்கு தெய்வீக சுகமளித்தலெல்லாம் கிடையாது, பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் பெற்றுக் கொண்டது போன்ற பரிசுத்த ஆவியின் அபிஷேகமெல்லாம் இந்நாட்களுக்குரிய மக்களுக்குக் கிடையாது என்று கூறுகிற உங்களது மத ஸ்தாபனத்தின் கோட்பாடுகளின் பேரில் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால், இவ்விதமான நிலையில் நீங்கள் இருந்தால் எனதருமை சகோதரனே, சகோதரியே, உங்களுக்கு தமஸ்கு சாலை அனுபவம் தேவையாயிருக்கிறது. நீங்கள் இந்த ஜீவனுள்ள தேவனை சந்திக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. அவ்விதமான அனுபவத்தில், அது ஒரு பூரண சம்மந்தமான ஒரு நம்பிக்கை உங்கள் சிந்தையில் உண்டாவதில்லை, அல்லது ஏதோ ஒரு நடுக்கம் அல்லது ஒருவிதமான உணர்ச்சி போன்றதல்ல அது; ஆனால் போதிக்கப்பட்டு, உண்மையான அசலான ஒன்றின் அனுபவமாக அது இருக்கிறது. 50 கலிலேயாவிலே நடந்து சென்ற அதே இயேசுவானவர் இன்றும் ஜீவிக்கிறார்; சதாகாலங்களிலும் ஜீவிக்கிறார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் முழு முதலான முற்றிலுமானவராக இருக்கிறார். அதை நீங்கள் பெறும்போது, எவர் என்ன கூறியுள்ளார் என்பதை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியதிருக்காது; நீங்களே அதை அனுபவித்து உணருவீர்கள், ஏதோ ஒரு உணர்ச்சியல்ல. நீங்கள் பெற்றிருக்கும் அந்த உணர்ச்சியானது ஒரு வேளை உண்மையான வேதாகம அடிப்படையிலான உணர்ச்சியாக இருக்கக்கூடும்; அதைப்பற்றி உங்களுக்கு விளக்கிக் கூற முற்படுகையில், ''அது வேறு ஒரு நாளுக்கென்று உள்ளதாகும்'' என்றால் எச்சரிக்கையாயிருங்கள். அது உண்மைதான். ஆனால் எச்சரிக்கையாயிருங்கள். ஆனால் அதை அறிவதற்கு ஒரு வழியுள்ளது. வார்த்தையைக் கொண்டு அதை சோதித்துப் பாருங்கள். அதுவே செய்ய வேண்டிய பணிப் பற்றிய திட்டமாக (blueprint) இருக்கிறது. கட்டப்படும் வீடு செய்யவேண்டி பணி பற்றிய திட்ட வரைபடத்திற்கேற்ப அமையாமல் அதற்கு முரணாக எழும்பிக் கொண்டிருக்குமானால், கட்டிட காண்ட்ராக்டர் இடித்துத் தள்ளிவிட்டு, அதைத் திரும்பவும் கட்டுவான். ஆனால் அது செய்ய வேண்டிய பணி பற்றிய திட்டவரை படத்திற்கேற்ப அமைந்தாக வேண்டும். 51 உங்களுடைய அனுபவம் எத்தகையதாயினும் அது ஒரு பொருட்டல்ல. உங்களிலிருக்கும் ஏதோ ஒன்று, “வேதாகமம் உண்மையானது அல்ல, தேவனுடைய வல்லமை, அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், போதகர்கள், மேய்ப்பர்கள், ஆவியின் வரங்கள் ஆகியவை, பெந்தெகொஸ்தேயின் நாளிலே அப்போஸ்தலர்கள் மூலம் கிரியை செய்தது போல அதேவிதமாக இப்போதும் இருக்கவில்லை என்றெல்லாம் கூறுமென்றால், அப்போது உங்களிலுள்ள உங்களுடைய முற்றிலுமானதைப் பொருத்தமட்டில் ஏதோ தவறு இருப்பதாகத் தான் அர்த்தமாகிறது. அப்போது அது நிச்சயமாக தேவனுடைய வேதத்தோடு பிணைக்கப்பட்டிருப்பதற்குப் பதிலாக மத ஸ்தாபனக் கோட்பாட்டுடன் தான் பிணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். ''வானமும் பூமியும் ஒழிந்துபோம்; என் வார்த்தையோ ஒழிந்து போவதில்லை” என்று அவர் கூறியுள்ளாரே. உங்களிடத்திலுள்ள உங்களுடைய முற்றிலுமானது எப்படிப்பட்டது என்பதை கவனித்துப் பாருங்கள். உங்கள் சபை மேய்ப்பரோடு உங்களுக்கு நல்லதொரு ஐக்கியம் உண்டாயிருப்பதாக நீங்கள் முழு நிச்சயமுடையவர்களாயிருக்கக் கூடும். மாவட்ட அளவில் உள்ள சபையின் மூப்பரோடு உங்களுக்கு ஐக்கியம் உள்ளது என்று முழு நிச்சயம் உங்களுக்கு இருக்கக் கூடும்; மேலும் உங்களுக்கு பிஷப்போடு அல்லது சபையின் வேறு பெரிய மனிதரோடும் நல்ல ஐக்கியம் இருப்பதைக் குறித்து உங்களுக்கு முழு நிச்சயம் இருக்கக் கூடும். ஆனால் உங்களுடைய முழு முதலான முற்றிலுமானவர் இயேசு கிறிஸ்துவாக இல்லாவிடில் பயனில்லை. ஏனெனில் அவர் கூறினார்; ''இந்தக் கல்லின் மேல் என்னுடைய முழு முதலான முற்றிலுமானதை நான் வைக்கிறேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளாது'' என்றார். அதுவே, அவர் யார் என்பதைப் பற்றி வெளிப்பாடும், அதை அறிதலுமாகும். 52 ஓ, இப்போது நீங்கள் பவுலைப்போல ஆகிவிட்டால் அப்போது அவன் கொண்டிருந்த அந்த முற்றிலுமானவரை உங்களிலும் கொண்டிருப்பீர்கள். அப்போது, முன்பு நீங்கள் பெற்றிருந்த அந்த ஜீவியத்தைக் காட்டிலும் வித்தியாசமான, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட அந்த ஜீவியம் கிடைக்கும். அந்த முந்தைய ஜீவியம் ஒரு வேளை மிகவும் மார்க்க ரீதியில் பக்தி மார்க்கத்திலமைந்ததாக இருக்கக் கூடும். ஓ, மக்கள் இவ்வாறு கூற நான் கேட்டிருக்கிறேன்; “இப்போது அவர்கள் மிகவும் தேவ பக்தியுள்ளவர்களாயிருக்கிறார்கள்'' என்று. அதனால் ஒரு பயனுமில்லை. நான் அநேக மதங்களையும் அதில் பக்தி கொண்டவர்களையும் கண்டிருக்கிறேன். இன்றைக்கு கிறிஸ்தவர்கள் என்று பறைசாற்றிக் கொள்ளுபவர்களைக் காட்டிலும் அவர்கள் மேலாக உத்தமமானவர்களாக காணப்படுகிறார்கள். 53 ஒரு தாயானவள் தனது கொழுமையும் கறுமை நிறமுமுள்ள சிறு குழந்தையை எடுத்து, முதலையின் வாயிலே தனது தெய்வத்தின் மேலுள்ள நேசத்தின் காரணமாக தூக்கியெறியத் தக்கதாக இருக்கும் பொழுது, கிறிஸ்தவத்தின் உண்மைத் தன்மை எத்தகையதாக இருக்கிறது என்று நான் வியக்கிறேன். ஒரு மனிதன் தன்னுடைய சிவப்புக் கல்லாலான கண்கள் பொருத்தப்பட்ட விக்கிரக தெய்வத்திற்கு பலி செலுத்தும்படியாக தன் உடலெங்கும் ஆயிரக்கணக்கான ஊசி வளையங்களை குத்திக் கொண்டு, அதினால், உடலெங்கும் கொப்புளங்கள் நீரினால் நிறைந்து தொங்கிக் கொண்டிருக்கிற நிலையில், விசிறி விடப்பட்டு கொழுந்து விட்டெறியும் நெருப்புத் தணலில், இங்கிருந்து இந்தக் கூடாரத்தின் கடைசி வரையிலும் உள்ள தூரம் எவ்வளவோ அவ்வளவு தூரம் நெருப்பில் முன்னும் பின்னுமாக நடந்து போகிறான். இதையெல்லாம் பார்க்கையில் கிறிஸ்தவமானது எங்கேயிருக்கிறது என்று நான் வியக்கிறேன். ஆகவே உண்மைத் தன்மை என்ற ரீதியில் அளவிட வேண்டாம்... அது நேர்மை என்று இருக்கவில்லை. உண்மைத் தன்மை சரியான காரியத்தில் இருந்தால்தான் அது சரியானது. 54 ஒரு மருத்துவர் மருந்து கொடுப்பது போல இது இருக்கிறது. அவர் உங்களுக்கு மனதில் உண்மையுடன் அரிதாரம் என்ற நஞ்சை மருந்தாக கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அல்லது அவர் உங்களுக்கு உள்ளத்தில் உண்மையுடன் கந்தக அமிலத்தைக் கொடுக்கிறாரென்று வைத்துக் கொள்வோம்; உங்களுடைய மருந்துச்சீட்டு தவறாக எழுதப்பட்டிருந்து அந்த உண்மையெல்லாம் உங்கள் உயிரை சாவினின்று காப்பாற்றவே செய்யாது. புரிந்து கொண்டீர்களா? இல்லை ஐயா! நீங்கள் செய்வதைக் குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தைக்கு முரணாக இருப்பது எதுவும், அது என்னவாயினும் அது எனக்கு ஒரு பொருட்டல்ல அது இவ்வளவு காலமாக பழக்கத்தில் இருந்து வருகிறது என்று இருப்பினும் அது முழுவதும் தவறுதான். 55 பெந்தெகொஸ்தே என்னும் நாளிலே, பேதுரு அவர்களுக்கு ஒரு நித்தியமான மருந்துச் சீட்டு கொடுத்தான். “நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்; அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது (இந்த மருந்துச் சீட்டானது) உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி... அதுதான் சரியானது. அது ஒரு நித்தியமான நிவாரணச் சீட்டு. சில போலியான ஒரு மருந்து கடைக்காரர் அந்நிவாரணச் சீட்டை உபயோகித்து உங்களைக் கொன்றுவிட முடியும். அறிவீர்களா? நிச்சயமாக! கிருமியைக் கொல்லுவதற்கென குறிப்பிட்ட அளவு விஷமானது மருந்தில் அடங்கியுள்ளது. உங்களுடைய உடம்பு எந்த அளவு நச்சுத் தன்மையை தாங்கிக் கொள்ள இயலும் என்பதை மருத்துவர் அறிந்திருக்கிறார். அளவுக்கதிகமாக அதை அவர் உங்களுக்குக் கொடுத்தால் அது உங்களைக் கொன்றுவிடும். உங்களுக்குப் போதுமான அளவு அந்த மருந்து கொடுக்கப்படாவிடில் அது அப்போது உங்களுக்கு என்ன செய்யும்? அந்த மருந்தை நீங்கள் எடுத்துக் கொள்வது பயனளிக்காது போய்விடும். உங்களது உடம்பு தாங்கக் கூடிய அளவு மருந்து எவ்வளவு என்பதை மருத்துவர் அறிவார். ஆகவே, தேவனுடைய நிவாரணச் சீட்டும் அவ்வாறே உள்ளது. இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும் என்று யார் என்ன சொன்ன போதிலும் அவை ஒரு பொருட்டாக எண்ணாமல் இருந்து நீங்கள் அதை விசுவாசியாமல் இருங்கள். தேவனுடைய வார்த்தையை நீங்கள் எழுத்தின்படி அப்படியே பின்பற்றினால், அதுதான் சரி. அதை விடாமல் பற்றிக் கொள்ளுங்கள். 56 நீங்கள் தெளிப்பு ஞானஸ்நானம் தான் எடுக்க வேண்டும் என்று கூறுபவர் நம்மிடையே இருக்கிறார்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற பட்டங்களைத் தான் உபயோகிக்க வேண்டும் என்று கூறுவோர் நம்மிடையே இருக்கிறார்கள். ஆனால் வேதத்திலோ அவ்விதமான காரியங்கள் கிடையாது. வேதாகமத்தை நாம் பார்க்கையில், இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே தவிர வேறு எவ்விதத்திலும் எவரும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதாகக் கூறும் இடம் எங்கும் கிடையாது. அது ரோமன் கத்தோலிக்க சபையிலே சேர்க்கப்பட்ட ஒரு மதக்கோட்பாடாகும். பாரம்பரியங்களினாலே அது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. (அதைப் பற்றி இன்றிரவில் நாம் பேசலாம்). 57 ஆனால், கவனியுங்கள், இவையெல்லாவற்றின் மத்தியிலும் அந்த மருந்துச் சீட்டு (நிவாரணச் சீட்டு) இன்னும் அப்படியே நிலைத்திருக்கிறது. மருத்துவர் என்ன கூறினாரோ அதற்கு செவி கொடுக்காத படியினால்தான், அநேகம் வியாதிப்பட்ட பிள்ளைகள் நமக்கு உள்ளனர். அந்த முழு முதலான முற்றிலுமானதோடு நீங்கள் பிணைக்கப்பட்டிருந்தால் அதுவே சகலமுமாயிருக்கிறது. அது தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. அது தவறிப் போக முடியாது. அது கிறிஸ்துவை மையமாகக் கொண்ட ஜீவியமாகும். மிகவும் மார்க்க ரீதியாக பக்தியாயிருத்தல், கிறிஸ்துவை மையமாகக் கொண்டதல்ல. நம்மில் அநேகருக்கு இன்று அவ்விதமான ஜீவியம் தான் உள்ளது. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட ஜீவியத்தை நீங்கள் பெற்றிருக்கும் பொழுது, சாதாரணமாக நீங்கள் செய்ய முடியாததை அது உங்களை செய்ய வைக்கும். சாதாரணமாக நீங்கள் எவ்வாறு கிரியை செய்வீர்களோ, அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் செயல்பட வைக்கும். அற்பத் தனமாக நீங்கள் செயல்படுவீர்கள் என்று நான் கூறவில்லை; உண்மையாகவும், அசலாகவும் இருக்கக்கூடிய ஆவியில் கிரியை செய்தலையே நான் குறிப்பிடுகிறேன். யாராவது அற்பத் தனமாக அபத்தமாக கிரியை செய்தால், அவர்கள் ஏதோ ஒன்றைப் போல் நடித்துக் காண்பிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வீர்களாக. அசலாயிருக்கிற ஒன்றைப் போல போலியாக நடித்துக் காண்பிக்கவே அவர்கள் முயலுகிறார்கள். போலியான டாலர் கரன்சி நோட்டு ஒன்றை நீங்கள் காண்கையில், அது ஒரு அசலான டாலர் நோட்டைப் போல் அதன் நகலாக உண்டாக்கப்பட்டது என்பதை நினைவு கூருங்கள். பார்த்தீர்களா? போலியான ஒன்றை நீங்கள் காண்கையில், அது முற்றிலும் உண்மையாக இருக்கின்ற ஒன்றினைப் போலவே காணப்படுகிற அதன் போலிதான் அது. அதுதானே, அசலாக இருக்கின்ற ஒன்று போல உண்டாக்கப்பட்டதாகும். 58 நீங்கள் சாதாரணமாக செய்யமுடியாத காரியத்தைச் செய்யும்படியாக அது உங்களுக்குச் செய்கிறது என்பதைக் கவனியுங்கள். இந்த முற்றிலுமானதை, பரிபூரணமானதை நீங்கள் பெற்றுக் கொள்கையில், நீங்கள் நிச்சயமுடையவர்களாயிருக்கிறீர்கள்; மிகவும் நிச்சயமுடையவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் அதைக் குறித்து மாறாத தன்னம்பிக்கையுடைவர்களாயிருப்பீர்கள். இன்னொருவருடைய அனுபவத்தை நீங்கள் பின்பற்றுவதில்லை. எனவே தான், கிறிஸ்தவ ஜீவியமானது, பள்ளிப் பிள்ளைகளைப் போன்றதாக ஆகிவிட்டது. அவர்கள் மற்றொருவன் எழுதியதையே காப்பியடிக்கிறார்கள். அந்த நபர் தவறாயிருந்தால், காப்பியடித்தவனுடையது முழுவதும் தவறாக ஆகிவிடுகிறது. அறிந்து கொண்டீர்களா? அவர்கள் முழுவதுமே தவறாக ஆகிவிடுவார்கள். இன்னொருவரைப் போல் நீங்கள் ஆக வேண்டாம். நீங்களே நேரடியாக அவரைச் சந்தியுங்கள். 59 அங்கே பின்னால் நின்று கொண்டிருக்கிற எனது நல்ல நண்பன் சின்ன ஜிம் பூல் என்பவர் எனது நீண்ட வாழ்நாள் நண்பரின் மகனாவார். அவரது தந்தையும் நானும் பள்ளி நாட்களிலே ஒன்றாகவே வளர்ந்தோம். ஓ, அவர் என்னே, ஒரு அருமையான நபர்! சின்ன ஜிம்மும் நானும், பெரிய ஜிம் ஒரு கிறிஸ்தவராக, உண்மையான விசுவாசியாக ஆக வேண்டுமென அடிக்கடி சேர்ந்து ஜெபித்து வந்தோம். நேற்று நானும் சின்ன ஜிம்மும், காடுகளிலே தேவனைக் கண்டு கொண்டதைக் குறித்தும், இயற்கையிலே அவரைக் கண்டதைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். அங்கேதான் நீங்கள் அவரை காண்கிறீர்கள். ஏனெனில் அவர் சிருஷ்டிகராயிருக்கிறார், அவரை சிருஷ்டியிலே காணலாம். ஜிம்மும் நானும் வேட்டைக்குப் போக விரும்பி அதற்காகப் போவதுண்டு. இரவு நேரம் வருகையில், கீழிறங்கி வந்து, சைக்கிளை எடுத்துக் கொண்டு, இங்கே இத்தெரு வழியாக ஓட்டிக் கொண்டு வருவதுண்டு. இருட்டானதற்குப் பிறகு, அங்கே அந்த கல்லறைத் தோட்டத்தை கடந்து செல்ல மிகவும் பயமாக இருக்கும். நாங்கள் அவ்வாறு அங்கே போய் எங்களுக்கு கோன் ஐஸ்க்ரீம் வாங்கி சாப்பிட்டு வருவோம். 60 ஜிம்முக்கு பில்லியர்ட்ஸ் போன்ற விளையாட்டு விளையாடு வதென்றால் பிடிக்கும். அப்போது, நாங்கள் பத்து, பனிரெண்டு, பதினான்கு வயதுடையவர்களாயிருந்தோம். ஜிம் உட்கார்ந்து வேட்டையாடுதலைப் பற்றியும், கண்ணி வைத்தலைப் பற்றியதுமானது கதைப் புத்தகங்களை வாசிப்பான். நானோ உட்கார்ந்து சில காரியங்களைப் பற்றி பகற் கனவு காண்பேன். சில பையன்கள் நான் அவ்வாறு செய்வதை காண முடியும். எங்காவது ஒரு சிறு மரவீட்டை நான் கண்டால், “மலையின் மேல் குடியிருப்பதற்கு அந்த மரவீடு மிகவும் ஏற்றதாயிருக்கும்'' என்று நான் கூறுவதுண்டு. என்றாவது ஒரு நாள் மலைகளின் மேல் எனக்கொரு மர வீடும், சில வேட்டை நாய்களையும் சில துப்பாக்கிகளையும் உடையவனாய் இருக்க வேண்டும் என்று எப்போதும் நான் கனவு கண்டதுண்டு. நான் எப்போதும், 30க்கு 30 ரைபிள் ஒன்றை நான் சொந்தமாக கொண்டிருக்க வேண்டும், அதை எனக்கு சொந்தமாக கொண்டிருக்கக் கூடுமா என்று எண்ணியதுண்டு. அன்றொரு நாளிலே நான் எனது வீட்டுச் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த கிடைத்தவற்றிலேயே மிகச் சிறந்த ரைபிள்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ”ஆச்சர்யமான கிருபை“ என்று நான் எண்ணினேன். நன்றாக சுடுவதற்கு நான் பயிற்சி எடுத்துக் கொள்வேன் என்று நான் நினைத்தேன். அதன்பிறகு, நான் மலைகளின் மேல் பயணித்துப் போவேன், நல்ல வேட்டைக்காரனான ஒரு பணக்காரனானவர் எவராவது ஒருவர் என்னை அழைத்துச் செல்ல வேண்டும். நான் அவருக்கு ஒரு மெய்க்காப்பாளனாக, ஒருவேளை காட்டிலே திடீரென எதிர்பாராமல் தாக்க வரும் கரடியிடமிருந்து அவர் உயிரைக் காக்கும்படியாக நான் அவருக்கு தேவைப்படக் கூடும். என்றாவது ஒரு நாள் ஆப்பரிக்காவுக்கு வேட்டையாடுவதற்கும் மெய்க்காப்பாளனாகவும் இருப்பதற்கு செல்லுவேன் என்று நான் விரும்பினேன். அதற்காக நான் பயிற்சி எடுத்துக் கொண்டால் நல்லது என்றும் நினைத்தேன். குறி தவறாமல் நன்கு சுடுகிறவனாக இருக்க பயிற்சி எடுத்துக் கொள்வதொன்றே நான் செய்யக் கூடிய காரியமாக இருந்தது. நான் எனக்குள், ”ஓ, தேவனே, நான் உலகம் பூராவிலும் சென்று வேட்டையாட என்னை அனுமதித்தருளும். அது என்னே ஒரு அற்புதமான காரியம்'' என்று சிந்தித்தேன். ஜிம் அமர்ந்து புத்தகம் படிப்பது வழக்கம். ''ஜிம்'' என்று நான் அவனை அழைத்தேன். ''நான் அதைக் குறித்து படிக்கவே விரும்புகிறேன்'' என்று கூறினான். ''ஜிம், அதுதான் இன்னொருவர் செய்ய பார்த்தது. அதை நானே செய்து பார்க்க விரும்புகிறேன். அதைப் பற்றிய அனுபவத்தை அடைய நான் விரும்புகிறேன்“ என்று நான் கூறினேன். கிறிஸ்துவினிடத்தில் நான் வந்த போது வேறு ஒருவருடைய அனுபவத்தை நான் எடுத்துக் கொள்ள எனக்கு முடியவில்லை. நானே எனக்கென அனுபவத்தைப் பெற்றிருக்கவே விரும்பினேன். 61 “லோன் ஸ்டார் ரேஞ்ஜர்” என்ற கதையை ஜேன் க்ரே எழுதியுள்ளார். அதை நான் என் சிறு வயதில் படித்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. அம்மாவுடைய இரண்டு அல்லது மூன்று துடைப்பங்களை நான் கெடுத்துப் போட்டேன். ஏனெனில் அவைகளினால் உண்டாக்கிக் கொண்ட விளையாட்டுக் குதிரையிலே நான் வீட்டைச் சுற்றி அதில் சவாரி செய்து விளையாடினேன். நான் அந்தக் கதையைப் படித்தேன். அதில் வரும் கதாநாயகனான அந்த ஸ்டார் ரேஞ்ஜர் எவ்வாறு டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள பிக் பெண்ட் (Big Bend) பிராந்தியத்திற்கு நீதியை நிலைநாட்டினான் என்பதைப் பற்றி படித்தேன். பிறகு நான் எட்கார் ரைஸ்பர்ரோ என்பவர் எழுதிய “டார்ஜானும் குரங்குகளும்'' என்ற நாவலைப் படித்தேன். குளிர்ப்பிரதேச கடலில் வாழும் சீல் என்னும் கடல்நாய் விலங்கின மயிரினால் பின்னப்பட்ட தோல் விரிப்பு ஒன்றை கணப்பின் முன்னர் விரிக்கப்பட்டிருந்ததை திருமதி வேதன் என்பவர் என் தாயாருக்குக் கொடுத்திருந்தார்கள். அது என் தாயின் அறையில் விரிக்கப்பட்டிருந்தது. நான் அந்த விரிப்பை வெளியே கொண்டு வந்தேன். அதை காற்று ஒன்றும் அடித்துக் கொண்டு போய் விடவில்லை என்று என் தாயார் அறிந்தேயிருந்தார்கள். நான் அதை வெளியே எடுத்துக் கொண்டு வந்து, அதை வெட்டி எனக்கு டார்ஜான் ஆடையை தயாரித்துக் கொண்டேன். அந்த டார்ஜான் ஆடையை நான் அணிந்து கொண்டு, ஒரு மரத்திலேயே பாதி நாளை நான் கழித்தேன். ஏனெனில் அந்தக் கதையில் அவன் என்ன செய்தான் என்று கண்டு நானும் அவ்வாறே செய்ய வேண்டுமென விரும்பினேன். ஆனால் ஒரு நாளிலே தேவனுடைய கிருபையினாலே நான் உண்மையான புத்தகமாகிய பைபிளை கண்டு கொண்டேன். என்னுடைய பாடலும், என் கதையும், “இயேசுவைப் போல ஆக வேண்டும். இப்புவியில் அவரைப் போலவே நான் ஆகிவிட வேண்டும்'' என்பதாக இருந்தது. நான் பிஷப்பாகவோ, அல்லது சபையிலே ஒரு பெரிய ஆளாகவோ, அல்லது ஒரு போப்பாகவோ, அல்லது ஒரு பாதிரியாராகவோ ஆக வேண்டுமென்பதாக இருக்கவில்லை. நான் இயேசுவைப் போல ஆக வேண்டுமென்றே விரும்பினேன். 62 ஒரு முற்றிலுமானவரை நீங்கள் கொண்டிருந்தால் அது உங்களை வித்தியாசமானவராக ஆக்கிவிடும். உங்கள் உள்ளத்தில் ஏதோ ஒன்று உங்களை அவரைப் போல ஆக வேண்டுமென்று வாஞ்சிக்க வைத்துவிடும். நீங்கள் நிச்சயமாகவே... முற்றிலுமானவரைக் கொண்டிருக்கிற ஒரு கிறிஸ்தவனுக்கு அது நங்கூரமிடப்பட்ட கப்பலாக இருக்கும். ஆம், நீங்கள் உங்களுக்கு முற்றிலுமானவரை பெற்றவர்களாக இருக்க வேண்டும். கிறிஸ்துவானவர் உங்களுடைய முற்றிலுமானவராக இருப்பாரென்றால், கொந்தளிக்கும் கடலிலே மூழ்கப் போகும் கப்பலுக்கு ஒரே நம்பிக்கையாக நங்கூரமிடப்படுதல் எவ்வாறுள்ளதோ, அதேபோல, உங்கள் வாழ்க்கையில் கிறிஸ்து ஒரு நங்கூரமாக இருப்பார். கடலலைகளினால் கப்பலானது கவிழ்வது போன்ற நிலை ஏற்படும் போது, நங்கூரமானது அக்கப்பலை நிலைநிறுத்தி விடும். அதைப்பற்றி நமக்கொரு பாட்டொன்றுண்டு என்பது உங்களுக்குத் தெரியும். அதை எழுதியவர் பெயர் மறந்து போய் விட்டது. ''எனது நங்கூரம் பிடித்து நிறுத்துகிறது“ என்பதே அப்பாடலாகும். 63 இது எப்படியிருக்கிறதென்றால் பட்டம் பறக்கவிடுகிற ஒரு சிறுவனைப் போன்று இக்காரியம் உள்ளது. அநேக சமயங்களில் நாம் அவ்வாறு சிந்தித்துள்ளோம். பட்டம் பறந்து கொண்டிருக்கிற வேளையில் கையில் இருக்கிற நூலைத் தவிர வேறு ஒன்றும் கண்ணுக்குத் தெரிவதில்லை. பட்டம் பறக்க விட்டுக் கொண்டிருந்த சிறுவன் அருகில் ஒரு மனிதன் கடந்து சென்றான். அவன் அச்சிறுவனிடம் “மகனே, என்ன செய்து கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டான். ''நான் என் பட்டத்தை பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறேன்“ என்று கூறினான். ''உன் கையில் என்ன இருக்கிறது'' என்று கேட்டான். “நூல் உள்ளது'' என்றான். பட்டம் எங்கே? நான் அதைப் பார்க்கவே முடியவில்லையே, “நீ பட்டத்தை பறக்க விட்டுக் கொண்டிருக்கிறாய் என்பதை நீ எப்படி அறிவாய்?'' என்று அம்மனிதன் கேட்டான். “நூலானது இழுப்பதிலிருந்து அதை நான் உணர முடிகிறது'' என்று சிறுவன் கூறினான். பார்த்தீர்களா? அந்நூலின் முடிவிலே முற்றிலுமான ஒன்று இருக்கிறது. அச்சிறுவனது எளிய வழியிலே அந்தப் பட்டமே அவனது முற்றிலுமானதாக இருக்கிறது. அவனால் அது பறப்பதைக் காண முடியாவிட்டாலும், தான் ஒரு பட்டத்தை பறக்க விட்டுக்கொண்டிருப்பதாக கூற முடிந்தது. ஆனால் அவன் ஒன்றைப் பற்றிக் கொண்டிருக்கிறான். அவ்விதமாகவே, பரிசுத்த ஆவியினாலே மறுபடியும் பிறந்த ஒரு மனிதனுடைய காரியமும் இருக்கிறது. ஏனெனில் அவன் முற்றிலுமானதைப் பற்றிக் கொண்டிருக்கிறான், அது நங்கூரமிடப்பட்டதாக இருக்கிறது. ஆகவே புயல்கள் அவனை அசைப்பது இல்லை. அவன் தான் பத்திரமாக இருப்பதாக உணருகிறான். ஏனெனில் அவன் நங்கூரமிடப்பட்டிருக்கிறான். 64 நாம் நமது வாழ்க்கை என்னும் ஆரவாரமான ஆழ் கடலிலே நமது சிறிய வாழ்க்கைப் படகிலே பயணம் செய்வோமென்றால்... அதைப்பற்றி அந்த மகத்தான கவிஞன் கூறியது போல... ''வாழ்க்கை ஒரு வெற்றுக் கனவு அல்ல உறங்கும் ஆத்துமாவானது மரித்து இருக்கிறது அவர்கள் காண்பது போல் காரியங்கள் இல்லை வாழ்க்கை உண்மையானது! அது மெய் உறுதிப்பாடுடையது அதன் கல்லறையே அதன் இறுதி இலக்கல்ல நீ மண்ணாயிருக்கிறாய், ஆகவே மண்ணுக்கு திரும்புவாய் என்றியம்பியது ஆத்துமாவைப் பற்றிக் கூறப்பட்டதல்ல. “வாழ்வின் சங்கீதம்'' என்ற இப்பாடலை லாங்ஃபெல்லோ இயற்றினார். ஓ அது மிகவும் அழகாக இருக்கிறது என்று நான் கருதுகிறேன். வாழ்க்கையின் ஆனந்த அமைதியான கடலில் பயணிக்கையில் கைவிடப்பட்டு, கெட்டுப் போயிருக்கிற சகோதரனுக்கு அதைக் கண்டு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட முடியும். 65 நாம் வாழ்க்கை என்னும் அமைதியான ஆழ்கடலிலே பயணித்து வந்து இப்போது கரை சேர்ந்துவிட்டோம். கிறிஸ்துவானவர், காலமெனும் கொந்தளிப்புகளிலே... புயல்கள் கடுமையாக வீசும்போது, அவ்வேளையில் கப்பலானது நிலைகுலையாமல் ஸ்திரமாக நிற்கும்படி அதை நிலைநிறுத்தும் நங்கூரமொன்று எனக்குண்டாயிருப்பதால் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். அதனிடமிருந்து மரணம் கூட என்னைப் பிரிக்க முடியாது. உங்களுடைய முற்றிலுமானதோடு, நீங்கள் பிணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே நமது நங்கூரம். அவர் என்னவாயிருக்கிறார்? அவர் வார்த்தையாயிருக்கிறார். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி... நமக்குள்ளே வாசம் பண்ணினார். 66 நமது கிரியையானது வார்த்தையோடு சரியாக ஒத்து இருக்கிறது என்று நாம் அறியும் பொழுது, வார்த்தையோடு ஒன்றைக் கூட்டாமலும், ஒன்றைக் குறைக்காமலும் சரியாக வார்த்தையை மட்டுமே கொண்டதாக உள்ள போதனையை நாம் வார்த்தையின்படியே பூரணமாக நாம் கொடுக்கிறோம் என்பதை நாம் அறிந்திருக்கும் பொழுது, அதே விளைவுகளையே நாம் காண்கிறோம், அதே வார்த்தையில் நங்கூரமிட்டவர்கள் கண்ட அதே விளைவுகள் தான்; அது நமது வாழ்க்கையில் அவ்விதமாக நாம் வாழ்ந்தால் அப்போது நமது நங்கூரம் உறுதியாக நிலைத்திருக்கும். உங்கள் மூலமாக கிறிஸ்துவிலிருந்தது போலவே, கிறிஸ்துவின் ஜீவனானது திரும்ப உற்பத்தி செய்யப்பட்டு, அது ஏறத்தாழ அவதாரம் எடுத்தது போன்ற விதமாகவே இருக்கும், ஏனெனில் கிறிஸ்துவிலிருந்து தேவன் உலகத்தை கிறிஸ்துவின் மூலமாக ஒப்புரவாக்கிக் கொண்ட காரியம் அது. அப்போது உங்களிலே தானே தேவன் இருப்பதை நீங்களே காண்பீர்கள், அது வார்த்தையின் அடித்தளமாக அமைந்திடும், இயேசு செய்த அதே விதமாக இருக்கும், நீங்கள் அவரது ஜீவனை காண்கிறீர்கள். “நான் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்...'' ''...விசுவாசிக்கிறவன்...'' விசுவாசிப்பதாக பாவனை செய்பவன் அல்ல, தான் விசுவாசிப்பதாக எண்ணிக் கொள்பவன் அல்ல, ஆனால் விசுவாசிப்பவன் தான். ''...என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான்...'' ஏன்? அதே கன்மலையில் தான் அவனும் நங்கூரமிட்டுள்ளான். அந்தக் கன்மலையானது என்ன? அது வார்த்தையே. எப்போதும் அங்கே தான் நீங்கள் நங்கூரமிட்டுள்ளீர்கள். 67 நீங்கள் வாழ்க்கைக் கடலில் திசை கெட்டுப் போகையில் அதுதான் உங்களுக்கு திசை காட்டும் வடதிசை நட்சத்திரமாகும். (North Star) நமக்கு ஏராளமான நட்சத்திரங்கள் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் அங்கே ஒரேயொரு உண்மையான நட்சத்திரமானது உண்டு; அது இடம் பெயருவதில்லை. நீங்கள் பூமியின் பின்னால் இருந்தாலும் சரி, மேல் பக்கமாக இருந்தாலும் சரி, நீங்கள் எங்கிருந்தாலும் சரி, அந்த வடதிசை நட்சத்திரமோ, அதே இடத்தில்தான் இருக்கும். அது உங்களது வட திசை நட்சத்திரம். இப்பொழுது நீங்கள் கண்டுகொள்ளுங்கள். இடத்திற்கு இடம் மாறிக் கொண்டேயிருக்கும் ஏராளமான நட்சத்திரங்கள் உண்டு. ஆனால் நீங்கள் கடலில் பயணிக்கையில், ஏன் கப்பலில் பணி புரியும் எந்தவொரு கப்பலாளுங்கூட அல்லது காட்டிலே திரியும் எந்தவொரு வேட்டைக்காரனும் வடதிசை நட்சத்திரத்தைக் கொண்டு தான் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளுகிறான். அதுவே எல்லாமாயிருக்கிறது. அப்போது, அது உங்களுடைய திசை காட்டும் கருவியைப் போல் இருக்கிறது. உங்களுடைய திசை காட்டும் கருவியானது மார்ஸ், ஜூபிடர் அல்லது வேறு ஏதோ ஒரு இடத்தையோ சுட்டிக் காட்டாது. அது எப்போதும் வடக்குத் திசையைத் தான் சுட்டிக்காட்டும். ஏன்? ஏனெனில் அது தான் உங்களுடைய முற்றிலுமானதாக இருக்கிறது. 68 ஓ! உங்களுடைய முற்றிலுமானதை எல்லாவற்றிற்கும் எல்லாமானதை கவனியுங்கள். ஓ, நான் ஒன்றைக் கூறப் போகிறேன். அது வருவதை நான் உணருகிறேன். கவனியுங்கள், நான் மிகவும் பக்தி பரவசமான இந்தவேளையில் உணருகிறேன். ஏனெனில் இதுதான் உறுதியளித்தலாக இருக்கிறது. கவனியுங்கள், உங்களது திசைகாட்டும் கருவி எப்போதும் வடதிசை நட்சத்திரத்தையே சுட்டிக் காட்டமுடியும். அந்த ஒரு ஸ்தலத்தைத் தான் அதனால் சுட்டிக் காட்ட இயலும். அது ஒரு உண்மையான திசை காட்டும் கருவியாயிருப்பின் அது எப்போதும் வடதிசையைத் தான் சுட்டிக்காட்டும். அது சரிதானே? நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தால், அது வார்த்தையை மட்டுமே சுட்டிக் காட்ட முடியும். அது ஒரு போதும் ஒரு ஸ்தாபனத்தை சுட்டிக்காட்டாது. ஒருபோதும் அது ஒரு கோட்பாட்டை சுட்டிக் காட்டாது. அது ஒரு போதும் வேறு எதையாவது சுட்டிக் காட்டாது. அது எப்போதும் நேராக வார்த்தையைத் தான் சுட்டிக்காட்டும். (நான் ஆர்ப்பரிக்க வேண்டும் போல் உணருகிறேன்.) கவனியுங்கள். அது ஒரு மனிதனுக்குள் உயிர்த் துடிப்பாக இருந்து கொண்டிருக்கும் ஒன்றாகும். அதோ அங்கே நீங்கள் உங்களுடைய நட்சத்திரத்தை, இயேசு கிறிஸ்துவாகிய வார்த்தையைக் காணும்பொழுது அப்போது உங்களிலுள்ள ஆவியானவர் உங்களை வலதுபுறமோ, அல்லது இடது புறமோ அசையவிட மாட்டார். அவர் ஒருவர் மாத்திரமே... அவர் வந்து தேவனுடைய காரியங்களை எடுத்து, அவைகளைக் காண்பித்து, அவைகளை பிரத்தியட்சமாக்கிடுவார். ''நான் கூறுகிற காரியங்களை பிசகாமல் அப்படியே அவர் செய்திடுவார்'' என்று இயேசு கூறினார். வரப்போகிற காரியங்களை அவைகள் நிகழுவதற்கு முன்னரே உங்களுக்கு வெளிப்படுத்திக் காண்பிப்பார். பார்த்தீர்களா? அவர் என்னுடையதில் இருந்து எடுத்து உங்களுக்குக் காண்பிப்பார். வரப் போகிறவைகளை அவர் உங்களுக்கு காண்பிப்பார் (யோவான். 16:14). 69 அவர் காரியங்களை காண்பிப்பார் என்று நாம் காண்கிறோம். தேவனுடைய காரியங்களை எடுத்து அவர் உங்களுக்கு காண்பிப்பார். இயேசு கூறியவைகளை அவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார். அதாவது, அவர் யாவற்றையும் தெளிவுபடுத்தவார். இன்றிரவிலே அம்மூலையிலே அதை வைத்திடுங்கள். ஏனெனில் இன்னும் சிறிது வேளையில் நாம் அதை உபயோகிக்கப் போகிறோம். அதை நிச்சயப்படுத்திக் கொடுத்து, அதை தெளிவாக தெரியப்படுத்தி, நிஜமாக்கிவிடுவார். அப்பொழுது நீங்கள் உங்களது வடதிசை நட்சத்திரத்தை அறிந்து கொள்வீர்கள். அதுவே எந்தவொரு கிறிஸ்தவனுக்கும் வார்த்தையாயிருக்கிறது. வார்த்தைக்கு முரணாக இருப்பது எதுவும் பாருங்கள், நான் ஒன்றை உங்களுக்குக் கூறப் போகிறேன். இதை கவனமாகக் கேளுங்கள். இதுவே தேவனைப் பற்றிய முழுமையான தெய்வீக வெளிப்பாடாயிருக்கிறது. அவரது சித்தம், கிறிஸ்துவின் வருகை இன்னும் அனைத்துக் காரியங்களும் இந்தப் புத்தகத்திலேயே முழுமையாக இருக்கிறது. ஏதாவது உங்களை அதை விட்டு விலகச் செய்யுமெனில், அவ்விதமாக தவறாக வழி விலகச்செய்யும் திசைகாட்டியை தூக்கி எறிந்து விடுங்கள். ஏனெனில் அப்படிப்பட்ட ஒன்று நிச்சயமாக மதக்கோட்பாடாக மாத்திரமே இருக்கிறது. அது உங்கள் பாக்கெட்டில் மடித்து வைத்திருக்கும் வெற்றுக் காகிதம் மாத்திரமே, அது உங்கள் அறையில் ஃபிரேம் போட்டுத் தொங்க விட்டிருக்கும் ஒன்றாக மாத்திரமே இருக்கிறது. அது மதக் கோட்பாடு. வார்த்தைக்கு நேராக மாத்திரமே உங்களுக்கு வழி காட்டும் திசை காட்டும் கருவியை கண்டு கொள்ளுங்கள், மானிடரே. ஆமென். 70 இவ்வனுபவம் பவுலைத் தொட்டபோது, அவன் எகிப்திலும் அரேபியாவிலும் உள்ள எங்கோ ஓரிடத்திற்குச் சென்று, மூன்று ஆண்டுகள் ஆராய்ந்தான். மகிமை! தன்னம்பிக்கையுடையவனாக அவன் ஆக வேண்டியதாயிருந்தது. அவன் கண்ட போது, வார்த்தைக்கு வார்த்தை பரிசுத்த ஆவியானவர் அவனை வழி நடத்திய போது எபிரேயரின் புத்தகத்தை எழுதி அந்த யூதருக்கு அதைக் காண்பிக்க முடிந்தது. நிச்சயமாக! ஏன்? அவன் சரியாக நிலைப்படுத்தப்பட்டிருந்தான். பரிசுத்த ஆவியானவராகிய திசைகாட்டி அவனை சரியாக வடதிசை நட்சத்திரத்திற்கு நேராக நிலைப்படுத்தியிருந்தார். இப்போதும், உங்களை அதைவிட்டு அகலச் செய்வதாக ஏதோ ஒன்று உங்களுக்கு நேரிடுமானால், அதைவிட்டு நீங்கிவிடுவது உங்களுக்கு நல்லது. அதுதான் சரியானதாகும். அது வார்த்தையையே உங்களுக்கு சுட்டிக் காட்டும். அவருடைய வார்த்தையை மாத்திரமே சுட்டிக் காட்டும். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையை பிரத்தியட்சப்படுத்த அல்லது ரூபகாரப்படுத்தவே வந்தார். எந்த மதக்கோட்பாடும் அதைச் செய்ய முடியாது. ஒரு மதஸ்தாபனமும் அதை செய்ய முடியாது. எந்தவொரு வல்லமையும் அல்லது வேறெந்தவொன்றும் அதைச் செய்ய முடியாது. வார்த்தையைக் கொண்டு பரிசுத்த ஆவியானவரே செய்ய முடியும். அவரே தான் அந்த ஜீவனைப் பிறப்பிக்கும் மூலப் பொருளானவர். 71 இப்போது, நீங்கள் ஒரு கோதுமை மணியை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒரு நல்ல முதிர்ச்சியடைந்த கோதுமை மணியாயிருந்தாலும் அதனால் ஒன்றும் செய்ய முடியாது. அதன் கருப் பொருளான நுண்மமானது அதனுள் வரும் வரையிலும் அது செத்ததாகத்தான் இருக்கும். அது வந்த பிறகு, அது அநேகம் கோதுமை மணிகளை தன்னிலிருந்து உண்டாக்குகிறது. கிறிஸ்துவே அந்த ஜீவனாயிருக்கிறார். அந்த முற்றிலுமானவராக இருக்கிறார். அந்த கோதுமை மணிக்கு தன்னிலே தானே அந்த எல்லாவற்றிற்கும் எல்லாமுமாயிருப்பது இல்லாவிடில் அது ஒரு போதும் முளைத்தெழும்பாது. அந்த கோதுமை மணியானது வெளித் தோற்றத்தில் அது எவ்வளவு அழகாய் இருந்த போதிலும், தன்னுள்ளாக அந்த முற்றிலுமானதைப் பெற்றிராவிடில், அதனால் ஜீவிக்க முடியாது. ஏனெனில் அது ஜீவிப்பதற்குத் தேவையான ஒன்றும் அதனுள் இல்லை. ஆனால் அது அந்த முற்றிலுமானதை, பரிபூரணமானதைப் பெற்றிருந்தால், அப்போது, அது தன் பேரில் குற்றங்காண்போரை நோக்கி, ''நான் திரும்ப எழும்புவேன்“ என்று சொல்ல இயலும். ஏன்? ஏனெனில், அது தன்னகத்தே முற்றிலுமானதைப் பெற்றிருக்கிறது. அது அதனுள் இருக்கிறது. அது மீண்டும் எழும்பித்தான் ஆக வேண்டும். 72 அது அப்பொழுது... ''நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்'' (யோவான். 15:7). அதுதான் அந்த முற்றிலுமானது ஆகும். ஆனால் அதனோடே நீங்கள் மதக் கோட்பாடுகளையும் மற்றெல்லாற்றையும் சம்பந்தப்படுத்திப் போட்டீர்களென்றால்... உங்களாலே எண்ணெயும், தண்ணீரையும் கலக்க முடியாது. நீங்கள் அதை எடுத்து, நீங்கள் விரும்புகிறபடி எந்தவிதத்திலாகிலும் அதைப் பிளந்தாலும் அது ஒரு போதும் கலவாது, ஏனெனில் அவையிரண்டும் இரு வெவ்வேறு இரசாயனங்களாகும். நீங்கள் வேதத்திற்கு முரண்படுகிறதாயிருக்கிற மதக்கோட்பாட்டையும் வேதாகமத்தையும் ஒன்றோடொன்று கலக்கக்கூடாது. ஸ்தாபனத்தையும் சுயாதீனமாய் பிறக்கும் இரட்சிப்பையும் ஒன்றாகக் கலக்கக் கூடாது. ஏனெனில் நிச்சயமாக தேவன் இடைபடுவது இந்த ஒன்றோடு மாத்திரமே. நான் எப்படியாகிலும் அதைக் குறித்துச் சொல்லத்தான் போகிறேன். தேவன் ஒரு போதும் தம்முடைய திட்டத்தை குலைத்துப் போடுவதில்லை. அவரால் அதைச் செய்ய முடியாது. ஏனெனில் அவர் முடிவற்றவராக இருக்கிறார். எல்லையற்ற பரம்பொருளாக இருக்கிறார். இச்செய்தி அநேகம் மக்கள் மத்தியில் செல்லுகிறது என்பதை நான் உணருகிறேன். பார்த்தீர்களா? ஆனால் தேவனால் தமது திட்டத்தை மாற்ற முடியாது. ஒரு நாள் ஒன்றைச் செய்து விட்டு, இன்னொரு நாளிலே அதை அப்படியே மாற்றிவிட்டு ஒன்றை செய்து, தாம் முதலில் கூறியது, செய்தது தவறு என்று மாற்றிக் கூற முடியாது. 73 குழுவினராக மனிதரோடு தேவன் இடைபடுவதில்லை. தனிப்பட்ட நபரோடு மாத்திரமே தேவன் இடைபடுகிறார். ஏனெனில் மனிதனுக்கு வெவ்வேறு யோசனைகள் உண்டாயிருக்கிறது. வெவ்வேறு விதமாக இருக்கும்படியாக அவன் சுபாவத்திலேயே அவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறான். தேவன் அந்த மனிதனை கையிலெடுத்து, அசைத்து, அவனது சுயத்திலிருந்து அவனை வெளியே இழுத்து, அவனை தனது சுபாவத்தின்படி உள்ளவனாக இருக்கும் வரையிலும் கிரியை செய்கிறார். அப்பொழுது தேவன் அந்த நபரோடு இடைபடுகிறார். காலங்கள் தோறும் கவனித்துப் பாருங்கள். நோவா, மோசே என்ற தீர்க்கதரிசிகள் இருவரும் ஏக காலத்தில் இருக்கவில்லை. தொடர்ந்து காலங்கள் தோறும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. ஆகையால் அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் உலகம் உண்டாகும் என்று நீங்கள் கூறுவீர்களானால்... இதைக் கவனியுங்கள். 74 சமீபத்தில் தான் நான் இக்கூடாரத்தில் ஒரு காரியத்தைப் பற்றி பிரசங்கித்தேனே அதைப் போலத்தான் இது இருக்கிறது. அங்கே ஆகாபும், யோசபாத்தும் இருந்தனர். அவர்கள் ராமோத் கிலெயாத்துக்கு சென்று எதிரிகளை பின்னிட்டுப் போகச் செய்யும்படி போனார்கள். அடிப்படை ரீதியாக, அவர்களிருவரும் சரியாகத்தான் இருந்தனர். தேசமானது அவர்களுடையதாகத் தான் இருந்தது. தேவன் தங்களுக்குத் தந்த காணியாட்சியிலே விளைந்த கோதுமையை இஸ்ரவேலர் புசிக்க வேண்டியதாயிருக்க, அதை சீரியர் எடுத்து தங்கள் பிள்ளைகளின் வயிற்றை நிரப்பிக் கொண்டனர். ஆகவே, அடிப்படையாக அது நலமாகத்தான் தோன்றினது. ''என்னோடு சேர்ந்து வாரும், நாம் போய் அவர்களை தேசத்தை விட்டுத் துரத்திவிடுவோம்'' என்று கூறினான். நல்லது, அது மிகவும் நன்றாகத்தான் இருந்தது; அடிப்படையிலே அது சரியாகத்தான் இருந்தது. ஆனால் அது நிபந்தனையோடு கூடியதாக இருந்தது. யோசபாத் நல்ல மனிதனாக இருந்தபடியால், “நாம் கர்த்தரை விசாரித்தறிய வேண்டுமல்லவா?'' என்று கூறினான். அந்த பின்மாற்றக்காரனும், எல்லைக்கோட்டு விசுவாசியுமான ஆகாபும், அவ்வாறே, “நல்லது நிச்சயமாக செய்யவேண்டும்'' என்றான். அவன் கூறினான். ”ஓ, நிச்சயமாக, நானும் அதைப் பற்றி சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும். என்னிடம் நானூறு எபிரேய தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்கள் நானூறு பேரையும் நான் உணவளித்து ஆதரித்து வருகிறேன். தேசத்திலுள்ளவர்களிலேயே அவர்கள் மிகவும் தலை சிறந்தவர்களாவார்கள். நாம் அவர்களை கொண்டு வருவோம்''. அவர்கள் யாவரும் ஒருமனதுடையவர்களாய், “சென்று வாரும், கர்த்தர் உம்மோடிருக்கிறார்'' என்றார்கள். அடிப்படையாக அவர்கள் சரியாகத்தான் இருந்தனர். ஆனால் அவர்கள் அந்த முற்றிலுமானவரைப் பற்றிக் கொள்ளவில்லை. பிறகு அவன் “இவர்களன்றி இன்னும் வேறு யாரும் இல்லையா?'' என்று கேட்டான். அதற்கு அவன், “இன்னும் ஒருவன் இருக்கிறான், ஆனால் நான் அவனை வெறுக்கிறேன்'' என்றான். அவன் மேலும், ”அவன் எப்போதும் என்னைப் பற்றி தீமையாகவே கூறிக் கொண்டிருக்கிறான், எப்போதும் கூறிக்கொண்டிருக்கிறான்“ என்று கூறினான். 75 அவனைப் பற்றி அவன் எவ்வாறு நல்லவிதமாக தீர்க்கதரிசனம் கூற முடியும். முழு வார்த்தையுமே... அவனுக்கு முன்பாக இருந்தவனாகிய எலியா ஆகாபிடம், ''உன் இரத்தத்தை நாய்கள் நக்கும்...'' என்று கூறினான். இப்பொழுது, தேவனுடைய சித்தமில்லாத ஒரு விஷயத்தை ஒரு உறுதிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசயானவன் எவ்வாறு உரைக்க முடியும்? யேசபேலை நாய்கள் தின்னும் என்றும், இன்னது யேசபேலின் உடல் என்று கூற முடியாதபடி அவளது மாமிசம் சிதறிப் போகும் என்றும் உரைக்கப்பட்டிருந்தது. அவ்விதமான சாபம் ஒரு மனிதனின் மேல் கூறப்பட்டிருக்க, எவ்வாறு எந்தவொருவனும் வந்து அவனை ஆசீர்வதிக்க முடியும்? அவ்வாறு தான் இன்றும் உள்ளது. எல்லாக் காலத்திலும் தேவனை விட்டு மக்களை இன்னும் அதிகமதிகமாக விலகச் செய்யும் காரியங்களை ஒரு மனிதன் எவ்வாறு ஆசீர்வதிக்க முடியும்? செய்ய வேண்டியது ஒன்றேயொன்று தான். நீங்கள் உங்களைத் தானே முரண்படாமல் இருக்க வேண்டுமென்றால், கர்த்தருடைய நாமத்தினாலே தேவனை விட்டு விலகச் செய்யும் காரியங்களை சபியுங்கள். நீங்கள் முற்றிலுமானவராக இருக்கும் பொழுது அதனோடு நிலைத்திருங்கள். ''நல்லது சகோ. பிரன்ஹாம் அவர்களே, நீங்கள் உங்களை மக்கள் பகைக்கும்படியாக செய்கிறீர்கள்“ என்று நீங்கள் கூறுகிறீர்கள். தேவன் என்னை நேசிப்பார். அவரே எனது முற்றிலுமானவராக இருக்கிறார். மாமிச புயத்தின் மேல் இளைப்பாற முடியாது. நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று கூறினாரோ, அவருடைய வார்த்தையின் பேரில் இளைப்பாறிக் கொண்டிருங்கள். 76 மிகாயா தான் சரியாக இருப்பதாக எவ்வாறு அறிந்திருந்தான்? அவன் காத்திருந்தான். அவன் ஒரு தரிசனம் கண்டான், அவர்களுக்கும் ஒரு தரிசனம் கிடைத்தது. ஆனால் அத்தரிசனம் வார்த்தையோடு ஒத்திருக்கவில்லை. இன்றைக்கும் காரியம் அவ்வாறேயுள்ளது. மிகாயா தனது தரிசனத்தை வார்த்தையோடு ஒப்பிட்டுப் பார்த்தான். அதன்பிறகு, அவன் தானும் வார்த்தையும் ஒருமித்திருந்ததைக் கண்டு கொண்டான். இன்றைக்கு, உங்களுடைய தரிசனமானது வார்த்தைக்கு முரணாக இருக்குமென்றால், அதை விட்டு விடுங்கள். ஏனெனில் அது தவறான முற்றிலுமானதாக இருக்கிறது. மிகாயாவின் முற்றிலுமானது வார்த்தையோடு சரியாக அமைந்திருந்தது. எனவே அவன் நிலை நின்று, தான் என்ன கூறினானோ அதை விசுவாசித்தான். அவர்கள் அவனை அவனது கன்னத்தில் அறைந்து, ''தேவனுடைய ஆவி எங்களை விட்டு எந்த வழியாகப் போயிற்று'' என்று கேட்ட பொழுது, அவன் பிரதியுத்தரமாக, “...நீங்கள் ஒளித்துக் கொள்ள உள்ளறையிலே பதுங்கும் நாளிலே அதைக் காண்பீர்கள்...” என்று கூறினான். அதற்கு ஆகாப், ''...நான் சமாதானத்தோடு திரும்பி வருமளவும், அவனைச் சிறைச்சாலையிலே வைத்து...'' என்று கூறினான். நான் வந்து இவனைக் கவனித்துக் கொள்கிறேன் என்று கூறிப் போனான். “ஓ, இப்போதும், மிகாயாவே, அதைப் பற்றி என்ன? இராஜா திரும்பி வரும்போது உன் தலை துண்டிக்கப்படும்'' என்றார்கள். 77 மிகாயா அங்கே ஸ்தேவானைப் போல் உறுதியாக நின்றிருந்தான். ஆமென். மனப்பூர்வமாக எனது கர்த்தரும் சிலுவைக்குப் போனதை போல் அவன் நின்றிருந்தான். சிங்கக் கெபிக்கும் தானியேல் மிகவும் தைரியமாக போனதைப் போல் அவன் நின்றிருந்தான். ஷாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ அக்கினிச் சூளைக்குள் போனதைப் போல் அவன் நின்றிருந்தான். முற்றிலுமாக! அவன் நின்று அங்கே கூறினான், ''நீர் திரும்பி வருகிறது உண்டானால்?'' ஏன்? அவன் முற்றிலும் நிச்சயமுடையவனாய் இருந்தான். “...நீர் திரும்பி வருகிறது உண்டானால், தேவன் என்னிடம் பேசவில்லை என்றாகிவிடும். அப்போது நீர் என் தலையை கொய்து விடலாம்'' என்று கூறினான். அவன் தனக்கு ஒரு முற்றிலுமானதைக் கொண்டிருந்தான். அவன், தன்னை இத்தரிசனத்திற்கு வழி நடத்தின அத்திசை காட்டியானது சரியாக வடதிசை நட்சத்திரத்திற்கு சரியாக இருந்தது என்பதை அறிந்திருந்தான். ஆம் ஐயா! அவனது நங்கூரம் பற்றிக் கொண்டிருந்தது. ஆம், அது வார்த்தையாயிருக்கிறது; அது மாத்திரமே தான். உங்களுடைய பரிபூரணமான முற்றிலுமானவரை நீங்கள் உங்கள் வாழ்வில் உடையவராயிருந்தால்... 78 சமுதாயத்தில் பெரிய மனிதர்கள், மனிதர் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுங்கு ஆசார முறைமைகளுக்காக நடத்தை நெறிகளைக் கடைப்பிடித்தனர்; அதை மரபாக வைத்துக் கொண்டனர். அப்படிப்பட்ட சமுதாய ஆசார ஒழுங்குமுறை மரபுகளுக்கென ஒரு முற்றிலுமானது ஒரு காலத்தில் உண்டாயிருந்தது. அதற்குரிய ஒரு பெண்ணின் பெயர் எனக்கு நினைவில்லை. ஆனால் முழுத் தேசமும், அப்பெண் கூறியவைகளை அப்படியே நம்பினர். நான் அவளது பெயரை மறந்துவிட்டேன். அதைப் பற்றி ஒரு குறிப்பு இங்கே எழுதி வைத்திருந்தேன். அந்த ஸ்திரீயின் பெயர் எனக்கு நினைவில்லை. அது யார் என்று தெரியவில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பாக அவர்கள் பெற்றிருந்தனர். இந்த ஸ்திரீயானவள், அவள் என்ன கூறினாளோ... அவள் ஒருவேளை கத்தியை இடது கையில் தான் பிடிக்க வேண்டும் என்று கூறினால், அது தான் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறையாகும். அதுவே அவர்களுக்கு முற்றிலுமானதாக இருந்தது. அதுவே எல்லாவற்றிற்கும் உரிய விடையாக இருந்தது. முள்கரண்டியை நீங்கள் இடது கையில் பிடித்துக்கொண்டு சாப்பிட்டால் அப்போது நீங்கள் முழுவதுமாக தவறாக இருப்பீர்கள். அவளது பெயர் என்ன? (சபையார், ''எமிலி போஸ்ட்“ என்று பதிலளிக்கிறார்கள் - ஆசிரியர்) அவள்தான் அது. நிச்சயமாக. ஆம், அவள் தான் அது. இப்பொழுது, அப்பெண்மணிதானே, சமுதாய ஒழுங்கு ஆசார முறைமைகளை, நடத்தை நெறிகளை மரபாக ஏற்படுத்திக் கொண்டோரின் முற்றிலுமானதாக இருந்தாள். அவ்விதமாகத் தான் அது இருக்கவேண்டும். அநேக காரியங்களைக் குறித்து நாம் இவ்வாறு தான் காண்கிறோம். ஆனால், இப்பொழுது, அவ்வொழுங்காசார முறைகளெல்லாம், மரபுகளெல்லாம் போய்விட்டன. நீங்கள் விரும்புகிற விதத்திலே நீங்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆம் ஐயா அது சரிதான். ஆனால் அது சமுதாயத்தின் நடத்தை நெறிகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு முற்றிலுமானதாக இருந்துவந்தது. நீங்கள் அம்மரபுகளை விட்டுவிடாமல் அப்படியே கடைப்பிடிக்க வேண்டியதாயிருந்தது. 79 ஜெர்மனியின் முற்றிலுமானவனாக அடால்ஃப் ஹிட்லர் இருந்த காலம் ஒன்று இருந்தது. அவன் என்ன கூறினானோ... ''குதியுங்கள்'' என்று அவன் கூறினால் அவர்கள் குதித்திடுவார்கள். அவன் “கொலை செய்க'' என்றால் அப்படியே அவர்கள் கொன்றார்கள். இலட்சக்கணக்கான யூதர்களின் தலைகளை அவன் கொய்து போட்டான். அவ்விதமான முற்றிலுமானதற்கு என்ன நேரிட்டது என்பதைக் கவனித்தீர்களா? அது ஒரு வல்லமையைப் போல் தோற்றமளித்தது. ஆனால் அது வார்த்தைக்கு முரணானதாக இருந்தது. வார்த்தைக்கு முரணானது என்று எங்ஙனம் அறிவீர்கள்? தேவன் கூறினார். இஸ்ரவேலரை இழிவாக நோக்கி, அவர்களை சபிக்க முயற்சித்தது பிலேயாம் அல்லவா? ஆனால் அவன் ''...நான் அவனை காண்டாமிருகத்தைப் போல் காண்கிறேன்'' என்றான். உனது கூடாரங்கள் எவ்வளவு நீதியுள்ளவைகளாயிருக்கிறது என்றான். ''உங்களை சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன், உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்'' என்று கூறினான். ஹிட்லர் அதைக் கண்டிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. அந்த ஜெர்மானிய கிறிஸ்தவர்கள் அதைக் கண்டிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. பார்த்தீர்களா? அந்த முற்றிலுமானது. அது அந்த திருவசனத்திற்கு முழுவதுமான முரண்பட்டதாக இருக்கிறது. நீங்கள் அறிவீர்களா? ''தேவன் மனிதனை உண்டாக்கினார். ஆனால் மனிதன் தான் அடிமைகளை ஏற்படுத்தினான்“ என்ற கூற்றைப் போல் இருக்கிறது. ஒருவன் இன்னாருவன் மேல் ஆதிக்கம் செலுத்தி ஆளப்பார்க்கிறான். நமக்கு ஒரு ஆளுகிறவர் உண்டு, அவர்தான் தேவன். ஆனால் ஹிட்லர் தான் ஜெர்மனியின் முற்றிலுமானவனாகத் திகழ்ந்தான். இப்பொழுது கவனியுங்கள், என்ன நேரிட்டது என்று. அது தானே ஒரு தவறான முற்றிலுமானதாக இருந்தது. ஏன்? அது தேவ வார்த்தைக்கு முரணாக இருந்தது. இப்பொழுது அவை யாவற்றுக்கும் என்ன நேர்ந்தது என்பதை நீங்கள் கவனியுங்கள். அவமானகரமானதாக ஆகிவிட்டது. 80 உங்களுடைய எல்லாவற்றுக்கும் எல்லாமானது இயேசு கிறிஸ்துவானவராக இல்லாது ஒரு ஸ்தாபனமாக இருப்பின், அல்லது ஒருவெறும் உணர்ச்சிவசப்படுதலாக இருப்பின், அல்லது வேறு ஒன்றாக இருப்பின், மேற்சொன்ன விதமாக வெட்கத்துக்குட்பட்டவர்களாக ஆவீர்கள். இன்னும் மோசமாகக் கூட ஆவீர்கள். கவனித்தீர்களா? உங்களுடைய முற்றிலுமானவர் கிறிஸ்துவாக இல்லாவிடில், அவரே மானிட வாழ்வின் நடுநாயகமாக திகழ்கிறார்; கிறிஸ்து வார்த்தையானவராக இருக்கிறார், உங்களுடைய சபையல்ல, உங்களுடைய வார்த்தையல்ல, அவர் வார்த்தையானவராக இருக்கிறார். பார்த்தீர்களா? ''...இந்த முற்றிலுமானவர் மேல் நான் என்னுடைய சபையைக் கட்டுவேன்''- கிறிஸ்துவின் மேல் வார்த்தையானவர் மேல் என்பதாக அது இருக்கிறது. 81 ரோமாபுரியின் முற்றிலுமானவனாக முசோலினி கருதப்பட்ட காலம் ஒன்றுண்டு. முசோலினியை யாரோ ஒருவர் ஒருசமயம் பேட்டி கண்டபோது, இவ்வாறு கூறினானாம். இதைக் குறித்து நான் ஒரு கட்டுரை வடிவத்தில் படித்தேனோ அல்லது ஒரு புத்தகத்தில் படித்தேனோ, அல்லது யாராவது எனக்கு கூறினார்களோ எனக்கு நினைவில்லை. அவன் கூறினதாவது: தான் உலகிலேயே ரோமாபுரியை அத்லெடிக் போட்டிகளில் தலைசிறந்த ஒரு நாடாகக் கொண்டு வரவேண்டும் என்று விரும்பினானாம். ஆகவே அத்லெடிக்கை அவனோடு சம்மந்தப்படுத்தி அவனது பெரிய சிலையொன்று அங்கே உள்ளது. அதெல்லாம் சரிதான். அநேக ஆண்டுகளுக்கு முன்பாக கிரீஸ் நாட்டுக்கு அதைப் பற்றிய யோசனை உண்டாயிருந்தது. ரோமாபுரி எப்போதும் அதற்காக முயன்று கொண்டிருந்தது. அத்லெடிக் எல்லாம் சரிதான். ஆனால் அத்லெடிக் விளையாட்டானது கிறிஸ்துவின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு பெலமுள்ளவர்களாயினும் அது ஒரு பொருட்டல்ல. அவரே சர்வ வல்லமையுள்ளவராயிருக்கிறார். 82 அவன் ரோமாபுரியை எதன் மேல் கட்ட வேண்டுமென்று முயற்சி செய்தான் என்பதைக் கவனியுங்கள். அவன்தானே ஒரு முற்றிலுமானவன் என்று கருதி அந்த முற்றிலுமானதின் பேரில் ரோமாபுரியைக் கட்ட வேண்டுமென முயற்சி செய்தான். ஒரு நாள் அவன் தன் காரோட்டி உரிய வேளைக்கு ஒரு நிமிடத்திற்கு முன்பாகவே வந்துவிட்டான் என்பதற்காக அவனை சுட்டுக் கொன்றான் என்று அவர்கள் கூறுகிறார்கள். ''நான் அவனை ஒன்பது மணியாக ஒரு நிமிடம் முன்பாக வந்து விடவேண்டும்“ என்று கூறவேயில்லை. ஒன்பது மணிக்குத் தான் வரவேண்டும் என்று கூறினேன் என்று கூறினான். நாசமுண்டாக்குகிறவன் அவன்! அவனைக் கொன்று போட்டான். ''நான் ஒன்பது மணிக்கு ஒரு நிமிடம் முன்பாக இங்கே வரச் சொல்லவில்லை. ஒன்பது மணிக்கே வரும்படியாகக் கூறினேன்”, என்றான். பார்த்தீர்களா? அவன் தன்னை எந்த அளவுக்கு முற்றிலுமானவன் என்பதாக ஆக்கிக் கொள்ளப் பார்த்தான் என்பதைக் கவனித்தீர்களா? ஆனால் அது என்ன ஆயிற்று என்பதைக் கவனித்தீர்களா? 83 இங்கேயுள்ள முன் காலத்தவர்களுக்கு, ராய் ஸ்லாட்டர் போன்ற பழங்காலத்தவர்களுக்கு நினைவிருக்கும். நான் அப்போது ஒரு தீர்க்கதரிசனம் கூறினது ஞாபகமிருக்கும். 'ஆட் ஃபெல்லோஸ் பில்டிங்' (Odd Fellow's Building) என்ற இடத்தில் அதாவது நாம் இங்கே வருவதற்கு முன்பாக இருந்த இடத்தில், நான் கூறினேன். ''முசோலினி அவமானகரமான முடிவை அடைவான்“ மேலும் நான், ”அவனது முதலாவது படையெடுப்பில், அவன் எத்தியோப்பியாவுக்குப் போவான், எத்தியோப்பியா அவனது காலடியில் விழும். அவனுக்கு ஒருவரும் உதவி செய்ய மாட்டார்கள். கனவீனத்தோடு அவன் அடக்கம் பண்ணப்படுவான்'' என்றும் கூறினேன். அவ்வாறே அவனுக்கும் நேர்ந்தது. “நாஜிக் கொள்கை, பாஸிஸக் கொள்கை, கம்யூனிசக் கொள்கைகள்'' என்று மூன்று விதமான 'இஸம்' கள் எழும்பியிருக்கின்றன. அந்த இஸம்கள் சுழன்று சேர்ந்து வந்து ஒன்றில் போய் முடியும். அதுதான் கம்யூனிஸமாக இருக்கும். கவனியுங்கள் கம்யூனிஸம் ரோமாபுரியை சுட்டெரிக்கும் என்று கூறினேன். பார்த்தீர்களா? அதை நீங்கள் கவனியுங்கள். அது தேவனுடைய கரங்களில் ஒரு கருவியாக உள்ளது. கம்யூனிஸம் தேவனுக்கெதிரானது என்று அவர்கள் கருதுகிறார்கள். எனவே அதற்கெதிராக எப்போதும் கிரியை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அது என்னவென்று தெரியவில்லை. அவர் நெபுகாத்நேச்சார், இன்னும் வேறு அநேகரை எவ்வாறு உபயோகித்தாரோ, அதே போல் தமது கையில் ஒரு கருவியாகத்தான் அவர்களையும் உபயோகித்துக் கொண்டிருக்கிறார். 84 இப்பொழுது கவனியுங்கள். எகிப்தின் முற்றிலுமானவனாக பார்வோன் இருந்த காலமொன்று உண்டாயிருந்தது. ஆனால் இப்பொழுது அது என்னவாயிற்று என்பதைப் பாருங்கள். அவையாவும் ஒழிந்து போகும் என்பதைக் கவனியுங்கள். ஓ, அது தவறான விதத்தில் உள்ளது. எனவே அவையாவும் எப்போதும் ஒழிந்தே தான் போகும். அவைகள் எல்லாம் மனிதனால் உண்டாக்கப்பட்ட முற்றிலுமானவைகளாக உள்ளன. மனிதனால் உண்டாக்கப்பட்ட முற்றிலுமானவைகளை நீங்கள் எடுத்துக் கொள்ள முடியாது. காலங்கள்தோறும் மேற்சொன்ன விதமான முற்றிலுமானவைகள் எல்லாம் அவ்வாறு அழிந்தொழிந்து போயிற்றே அதே விதமாகத்தான், அது ஒரு ஜனாதிபதியானாலும் சரி, ஒரு சர்வாதிகாரியானாலும் சரி, ஒரு இராஜாவானாலும் சரி, ஒரு சபையானாலும் சரி, ஒரு ஸ்தாபனமானாலும் சரி, ஒரு மதக்கோட்பாடானாலும் சரி, அப்படிப்பட்ட எந்தவொரு காரியமும் அழிந்தொழிந்தே போகும். அவைகளை நான் ஒரு பொருட்டாக எண்ணுகிறதில்லை. நாம் முற்காலங்களை திரும்பிப் பார்க்க முடியும். திரும்பிப் பாருங்கள். சக்ரவர்த்திகளை நம்பியிருந்த மனிதனைப் பாருங்கள். சர்வாதிகாரிகளை நம்பியிருந்த மனிதனைக் கவனியுங்கள். அந்த விதமான முற்றிலுமானவைகளின் பேரில் தங்கள் நம்பிக்கைகளை வைத்திருந்த மனிதரைப் பாருங்கள். அவர்களின் கதியை இன்று நோக்கிப் பாருங்கள். 85 நாம் இப்பொழுது முற்றிலுமாக நம்மையே திருப்பிக் கொண்டு, வேதாகமத்தின் பேரில் தங்கள் நம்பிக்கைகளை வைத்திருந்த, தேவனுடைய வார்த்தையின் பேரில் நம்பிக்கை கொண்டிருந்தவர்களை, அதையே தங்களுடைய முற்றிலுமானதாகக் கொண்டிருந்த மனிதரை நோக்கிப் பார்ப்போம். இப்பொழுது அவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்பதைக் காணுவோம். அவர்களைப் பற்றிய ஒரு சுருக்கமான விவரத்தை எபிரேயருக்கு எழுதின நிரூபம் 11-ம் அதிகாரத்தில் பவுல் உங்களுக்கு தருகிறார். அவர்கள் என்ன செய்தார்கள், எவ்வாறு இராஜ்யங்களைக் கீழ்ப்படுத்தினார்கள். நீதியை அடைந்தார்கள் என்றும், அவர்கள் ஆட்டுத்தோலையும், வெள்ளாட்டுத் தோலையும் போர்த்திக் கொண்டு அலைந்து திரிந்தார்கள் என்றும், உலகம் அவர்களுக்கு பாத்திரமாயிருக்கவில்லையென்றும் மகத்தான மகிமையான உயிர்த்தெழுதலுக்காக அவர்கள் காத்திருந்தார்கள் என்றும் கூறுகிறான். அவர்களில் சிலர் இந்த அற்புதங்களை எதிர்பார்த்து, தங்கள் சரீரங்களை சாகக் கொடுத்தார்கள். தங்கள் ஜீவனை இழப்பதைப் பற்றி அவர்கள் கவலை கொள்ளவில்லை. அவர்கள் இப்படியாக தொடர்ச்சியாக தங்களை தியாகபலியாக ஒப்புக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள், உயிர்த்தெழுதல் பெறும்படியாக. அதைத்தான் செய்தார்கள். 86 இப்பொழுது முற்றிலுமானவைகள்... நாம் முற்றிலுமானவைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். நமது சுப்ரீம் கோர்ட்டானது ஒரு முற்றிலுமானதாக இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது முற்றிலுமானதாக இருக்கிறது. இந்த தேசத்தில் எல்லா சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய அமைப்பாக அது இருக்கிறது. அது சரிதான். ஓ, சில சமயங்களில் நாம் அதை விரும்புவது இல்லை, என்றாலும் அதுவே முற்றிலுமானதாக இருக்கிறது. ஆம் ஐயா, அதை நாம் கொண்டிருக்கவில்லையெனில் என்னவாகும்? ஆனால் அது ஒரு முற்றிலுமானதாக இருக்கிறது. நிச்சயமாக இருக்கிறது. ஏன்? ஏனெனில் நமது தேசமானது அதில்தான் பிணைக்கப்பட்டுள்ளது. அந்த சுப்ரீம் கோர்ட்டானது எந்தவொரு விஷயத்திலும் இறுதியாக ஒரு இறுதி தீர்ப்பை வழங்கும்போது, அதுவே எல்லாமாயிருக்கிறது. அதற்கு மேல் ஒன்றுமில்லை. அதைத் தாண்டி ஒரு தீர்ப்பை நாடி வேறு எங்கே நீங்கள் போகிறீர்கள்? நீங்கள் அவர்களது தீர்ப்பையே பின்பற்றப் போகிறவர்களாயிருக்கிறீர்கள். அவ்வளவுதான். நீங்கள் அப்படித்தான் செய்தாக வேண்டும். அவர்களது தீர்ப்பே இறுதியானது; அவர்களே 'ஆமென்' ஆக இருக்கிறார்கள். நீங்கள் உள்ளூர் நீதிமன்றங்களில் அதைக் குறித்து முயற்சி செய்யலாம். மாஜிஸ்திரேட்டிடம் விசாரிக்கச் செய்யலாம். அதன் பிறகு சமஷ்டி நீதிமன்றத்திற்குப் போகலாம்; ஆனால் சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தபிறகு, அதுவே இறுதியானது. அது சரிதான். சில சமயங்களில் நாம், ''நல்லது, அவர்களது தீர்ப்பை நான் விரும்புவில்லை'' என்று கூறி, அதை நாம் விரும்புவதில்லை. ஆனால் அதை விட்டு நாம் விலகிச் செல்ல முயல முடியாது. அதுவே தேசத்தின் முற்றிலுமானதாக இருக்கிறது. அதை நாம் பெற்றிருக்காவிடில் என்ன ஆகும்? ஆம். நாம் ஒரு முற்றிலுமானதை உடையவர்களாக இருக்கத்தான் வேண்டும். முன்பு சொன்னவைகளை மீண்டும் திரும்பிப் பார்த்து, முற்றிலுமானவைகள் என்றால் என்னவென்பதை உங்களுக்குக் காண்பிக்க வேண்டுமென்று தான் நான் சொல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது, தேசத்தின் சுப்ரீம் கோர்ட்டானது, இத்தேசத்தின் முற்றிலுமானதாக இருக்கிறது. எல்லாவித தாவாக்களுக்கும், அதுவே இறுதியான தீர்ப்புக் கூறும் அமைப்பாக உள்ளது. அதுவே இறுதியானது. அவர்கள் என்ன கூறுகிறார்களோ அதுவே இறுதித் தீர்ப்பு. 87 பந்து விளையாட்டில் கூட ஒரு முற்றிலுமானது உள்ளது. அதுதான் அவ்விளையாட்டின் நடுவராவார் (அம்பயர்). ஓ, ஆம், சில சமயங்களில் நாம் அவரது தீர்ப்பை விரும்புகிறதில்லை. என்றாலும் அதுவே முடிவானது. நடுவரின் முடிவே இறுதியான வார்த்தையாகும். அது சரிதான். மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது ஒரு பொருட்டல்ல. நடுவர் பந்து சரியாக வீசப்பட்டுள்ளது என்று கூறினால் அது சரியாக வீசப்பட்டது என்றுதான் முடிவாகும். அது சரிதான். நிச்சயமாகவே மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது ஒரு பொருட்டல்ல, அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. அதைக் குறித்து நாம் எண்ணிப் பார்ப்போமாக. நீங்கள் ஒருவேளை... (நான் பந்து விளையாட்டுக்களுக்குச் செல்வதில்லை. ஆனால் அதைக் குறித்து உதாரணத்திற்காக குறிப்பிடுகிறேன்). பந்து விளையாட்டில் அதன் நடுவர் தான் அதனுடைய முற்றிலுமானவராக இருக்கிறார். விளையாடுகிறவர்களில் ஒருவர், ''அது சரியான பந்து“ என்று கூறுகிறார். இன்னொருவர் கூறுவார், “நீ ஒரு பொய்யன்” என்று இவர் கூறுவார்: ''அது அவ்விதமாக இல்லை. அவர் இந்த விதமாகத்தான் இருக்க வேண்டும்'' என்று நடுவர் கூறுகிறார், “அது சரியாக வீசப்பட்டுள்ள பந்து” பார்த்தீர்களா? அப்போது மற்றவர்கள் மேற்கொண்டு பேச முடியாமல் அப்படியே அமர்ந்து விடுகிறார்கள். அவர்கள் எரிச்சலடைகிறார்கள். அவர்களில் சிலர்... ஆனால்... அவர்கள் தங்கள் உள்ளத்திற்குள்ளாக நடுவர் தீர்ப்பை அங்கீகரிக்காமற் போவார்கள் என்று நான் யோசிக்கிறேன். ஆனால் சரியாக வீசப்பட்ட பந்து என்று அவர் கூறினால் அதுதான் இறுதிப் தீர்ப்பு. ஏன், அவருடைய வார்த்தைதான் இறுதியானது. முதலாவது போஸில் பீல்டிங் செய்யும் பேஸ்மேன் கூறினான், ''அது கடந்து சென்றுவிட்டது என்று உனக்குத் தெரியுமா?'' மற்றவனோ, ''அது தவறு என்று உனக்குத் தெரியுமா?'' என்றான். ஆனால் அவனோ (நடுவரோ) ''அது சரியாக வீசப்பட்ட பந்து தான், நீ உன் வாயை மூடிக் கொண்டு நீ பேட் செய்கிற இடத்திற்குப் போ'' என்று சொல்லுவார். அதுவே இறுதித் தீர்ப்பாயிருக்கிறது. 88 அப்பந்து விளையாட்டிற்கு ஒரு நடுவர் இல்லாமற் போனால் எவ்வாறிருக்கும்? ஓ அப்போது அது எந்தவிதமான விளையாட்டாக இருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்கக் கூடுமா? அவர்களில் ஒருவன் கூறுவான், ''அது சரியாக வீசப்பட்ட பந்து வீச்சுதான்'' என்று. வேறொருவன், இப்படி என்பான். மற்றவன், இல்லை அது அப்படித்தான் என்பான். இன்னொருவர், “நீ ஒரு பொய்யன்” என்பான். இவ்வாறு வீணாக சர்ச்சை செய்து சண்டை போட்டுக் கொள்வார்கள். நல்ல பந்து விளையாட்டு விளையாட வேண்டுமென்றால் அதற்கென்று உங்களுக்கு ஒரு முற்றிலுமானது வேண்டும். அவன் அங்கே (நடுவர் - அம்பயர்) அங்கே நடந்து வந்து, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், எவ்வாறாயினும் அவனே முற்றிலுமானவனாக இருக்கிறான். அவனே எல்லையற்ற அதிகாரமும் தன்னிலேதானே பூரணம் கொண்டவனாயிருக்கிறான். அவனது வாக்கே இறுதியானதாகும். அதைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல. அது அந்த விதமாகத்தான் இருக்கிறது. இப்பொழுது அவர்களுக்கு அது இல்லாவிடில் அவ்விளையாட்டு முழுவதும் குழப்பத்தில் ஆகிவிடும். அது சரிதானே? 89 சமஷ்டி நீதிமன்றமானது இல்லாவிடில் தேசமானது என்ன ஆகும்? இத்தேசத்தில் சுப்ரீம் கோர்ட் இல்லாவிடில், அது எங்கே கொண்டு போய்விடும், அது என்னவாயிருக்கும்? தேசமே குழப்பத்தில் ஆழ்ந்துவிடும். பந்து விளையாட்டொன்றில், ஒரு அம்பயர் (நடுவர்) இல்லாவிடில் ஆட்டமே கலைந்துவிடும். முதல் பந்து வீச்சே வீச முடியாதபடி யாராவது சர்ச்சை செய்து கொண்டிருப்பார்கள். பந்து உண்மையிலேயே பிட்சை நோக்கி வீசப்பட்டிருக்கும் பொழுது, யாராவது ஒருவர் அங்கே நின்று கொண்டு, ஓ இல்லை, இல்லை அவ்வாறு வீசப்படவில்லை என்பார். அதனால் நீங்கள் போய் விடுவீர்கள். முதல் பந்து வீச்சிலேயே அவர்கள் வாக்குவாதம் பண்ணத் துவக்குவார்கள். ஒருவர் “அது சரியாக வீசப்பட்ட பந்துதான்'' என்பார். மற்றவர்கள், ''அது சரியாக வீசப்படாத பந்து“ என்பார்கள். பார்த்தீர்களா? ஆகவே அவ்விளையாட்டானது ஒன்றுடன் பிணைக்கப்பட்டதாயிருக்க வேண்டும். அதுதான் அந்த நடுவர் ஆவார். அவர் பந்து சரியாக வீசப்பட்டது என்று கூறினால், அது தான் செல்லுபடியாகும். வீசப்படவில்லை என்று கூறினால், அது அவ்வாறே உள்ளது. அவர் என்ன கூறுகிறாரோ அதுதான் செல்லுபடியாகும். அதுதான் முடிவானது. அந்நடுவரை நீங்கள் கொண்டிருக்காவிடில், உங்களுக்கு விளையாடவே முடியாது. 90 இன்னொரு பூரணமானதை (அல்லது முற்றிலுமானதை) நான் உங்களுக்கு காண்பிப்பேனாக. அங்கே ஒரு போக்குவரத்து சமிக்ஞையாகிய சிவப்பு விளக்கு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு சிவப்பு விளக்கானது வாகனத்தை நிறுத்து என்று கூறினால், நிறுத்த வேண்டும் என்று தான் அதற்கு அர்த்தம். அதையும் மீறி, நீங்கள் தொடர்ந்து ஓட்டிக் கொண்டே சென்றால், நீங்கள் அதற்குரிய அபராதத்தை செலுத்தித்தான் தீர வேண்டும். ஆனால் இந்நகரத்தில் அவ்விதமான போக்குவரத்தை கட்டுப்படுத்தி நிறுத்தும் விளக்குகள் இல்லாமற் போனால், இந்நகரம் எப்படிப்பட்ட நகரமாக இருக்கும்? அதற்கு ஒரு முற்றிலுமானது இருந்தாக வேண்டும். போலீஸ்காரர் அல்லது அங்கே நின்று கொண்டிருக்கும் ஒருவர் என்று கூறுகிறார் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல, அவர்கள் கூறுவது இரண்டாம் பட்சமானது தான். யாராவது ஒருவர் நீங்கள் பச்சை விளக்கினூடே கடந்து சென்றீர்கள் என்று நிரூபிக்கக் கூடுமானால், அதைப் பற்றி போலீஸ்காரர் என்ன கூறினார் என்பது எனக்கு அக்கறையல்ல, அவர்கள் தவறாயிருக்கிறார்கள். அவ்விளக்கு போகலாம் என்றால், போகலாம் என்றுதான் அர்த்தம். அதுவே முற்றிலுமானதாக இருக்கிறது. நீங்கள் அந்த விளக்கு போகலாம் என்று கூறியது என்று நிரூபிக்க முடியும். அங்கே எங்காவது போலீஸ்காரரோ, அல்லது அந்நகர மேயரோ நின்று கொண்டிருக்கக் கூடும். அது ஒரு துளி வித்தியாசத்தையும் இது விஷயத்தில் ஏற்படுத்தி விட முடியாது. ''போகலாம் என்ற சமிக்ஞை உங்களுக்கு கிடைத்ததைப் பற்றிய நிரூபணம் உங்களுக்கு இருந்து நீங்கள் கடந்து சென்றால், அவ்வேளையில் யாராவது உங்களை இடித்துவிட்டால், அது அவர்களுடைய தவறாகும். நீங்கள் அதை நிரூபிக்க முடியும். அது அப்படித்தான். நாம் என்ன பேசுகிறோமோ அதை நம்மால் நிரூபிக்க முடியும். அது சரிதான். இப்பொழுது அங்கே சிவப்பு விளக்கே இல்லாமற் போனால் என்னவாகும்? ஒருவர் ஒரு கிராஸிங்குக்கு ஓடிப் போவார். அது எப்படியிருக்கும் என்பதைப் பாருங்கள். ஒருவர், ''ஹேய், வழியை விட்டு விலகு, நான் அவசர நிமித்தமாக இருக்கிறேன், நான் வேலைக்குப் போக வேண்டும், எனக்கு தாமதமாகிவிட்டது. ஆகவே நான் கடந்து செல்லத்தான் போகிறேன்'' என்பார். இன்னொருவர், ''நீங்கள் தான் முதலில் போக வேண்டும் என்று எண்ணுகிறீர்கள், ஏனெனில் நான் தான் முதலில் இருந்தேன்“ என்பார். இப்படிப்பட்ட வேளையில் ஒரு ஸ்திரீ தன் தலைமுடியை சிங்காரிக்க வெளியே வருகிறதை, என்னால் காண முடிகிறது. ஆகவே வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்தி நிறுத்தும் சிவப்பு விளக்கு இல்லாமற் போனால் என்னவாகும்? அங்கே ஒருபோக்குவரத்து நெரிசல் ஏற்படாதா? 91 சபைகளோடு உள்ள காரியம் இவ்வாறுதான் உள்ளது. கவனித்தீர்களா? அது சரிதான். எனவே தான் அவர்களுக்கு அப்படிப்பட்டதான ஒரு ஸ்தாபன நெரிசல் உண்டாயிருக்கிறது. அது மிகவும் சரியாயிருக்கிறது. ஒருவரும் கடந்து செல்ல முடியாதபடி அவர்கள் அங்கேயே நின்றுகொண்டு, சர்ச்சை செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கே தேவனுடைய வெளிச்சம் உள்ளது. அது “போகலாம்'' என்று கூறினால் நீங்கள் போகலாம். அது ”நில்'' இதற்கு மேல் “போகக் கூடாது'' என்று கூறினால் அத்தோடு நின்றுவிட வேண்டும். அதுதான் சரியானதாகும். அங்கேதான் நாம் அந்த வார்த்தையில் தான் ஆதாரப்படுத்திக் கொண்டுள்ளோம். ஒரு குழுவினரான மனிதர், அல்லது இன்னொரு குழுவினரான மனிதர் என்ன சொன்னார்கள் என்பது பற்றி நமக்கு அக்கறை இல்லை. “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன'' என்று இயேசு கூறினார். நாம் போவோமாக. ”உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' என்றார். நாம் போவோம். 92 கல்வியானது எந்த அளவுக்கு சிறந்ததாயிருந்தாலும், இயேசுவுக்கு அது அவசியமில்லை. அது சரிதான். எந்த அளவுக்கு சபைகள் சிறந்தததாயிருந்தாலும், கட்டிடங்களும் அப்படியிருந்தாலும், அவருக்கு அதெல்லாம் அவசியமில்லை. மருத்துவமனைகள் எந்த அளவுக்கு சிறந்ததாயிருந்தாலும் சபைகள், மருத்துவமனைகளைக் கட்டுகிறார்கள். அதெல்லாம் சரிதான், நாம் அதை மெச்சுகிறோம். ஆனால் அவருக்கு அதெல்லாம் தேவையில்லை. ''சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' என்று அவர் சபைக்குக் சுவிசேஷமானது வெறும் வசனத்தோடு மாத்திரமல்ல, அது வல்லமையோடும், வார்த்தை பிரத்தியட்சமாகுதலோடும் கூட வந்தது. பவுல் இவ்வாறு கூறினான், போய் சுவிசேஷத்தை பிரத்தியட்சமாக்குங்கள். 93 நமக்கு இதுவரை உண்டாயிராத அளவுக்கு மிகச் சிறந்த மருத்துவர்களை நாம் கொண்டவர்களாக இருக்கிற காலத்தில் தான் இன்றைக்கு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சிகிச்சைக்கென தலைசிறந்த மருந்துகளை நாம் கொண்டிருக்கிறோம். அதை நீங்கள் அறிவீர்கள். அம்மனிதரை நாம் வாழ்த்துகிறோம். அவர்களுக்காக நாம் ஜெபிக்கிறோம். நான் அவ்வாறு செய்கிறேன். நீங்கள் அவ்வாறு செய்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். தங்களுடைய புலன்களின் உணர்வினால் அறிந்து கொள்ளுகிறவர்களான அம்மனிதர்களுக்கு, இரண்டு புலன்கள் அவர்களுடைய பணிக்காக உபயோகப்படுத்துகிறார்கள். அவையாவன, காணுதலும், உணருதலம் ஆகும். கேட்டலும் உண்டு. அவர்கள் இருதயத்தின் ஓசையைக் கொண்டு கிரியை புரிகிறார்கள். ஒரு கட்டி இருப்பதை தொட்டுணருகிறார்கள்; அல்லது ஏதோ ஒன்றை அவர்களால் காணக் கூடியதாக இருப்பதைக் கண்டு உணருகிறார்கள். சரீரத்தின் மேல் காணப்பட கூடியதான ஒன்றின் மூலம் பரவி வரும் வியாதியைக் காண்கிறார்கள். இவைகளின் பேரில் அவர்கள் கிரியை புரிகிறார்கள். ஏனெனில் அது... அவர்கள் அவ்வியாதியை கொல்லக் கூடிய அளவுக்கு போதுமான மருந்துகளைக் கொடுத்து உங்களை வியாதி கொல்லாதபடி செய்கிறார்கள். அவர்கள். அவ்விதமாக கிரியை செய்யும்படியாக அது அவர்களுடைய அலுவலாயிருக்கிறது. நாம் அதை மெச்சுகிறோம். அது அருமையாக இருக்கிறது. ஆனால் நமக்கோ மிகச் சிறந்த மருத்துவர்கள் உண்டு, மிகச் சிறந்த மருந்து உண்டு, மிகச் சிறந்த மருத்துவமனைகள் உள்ளன. இவையெல்லாம் இருந்துங் கூட, இன்னும் அதிகமதிகமாக நோய்கள் நமக்கு இதுவரையில்லாத அளவுக்கு இருந்து கொண்டேயிருக்கின்றன. இதுவரையில்லாத அளவுக்கு நம்மிடையே அவிசுவாசம் அதிகமதிகமாக இருக்கிறது. ஆம் ஐயா, அது மிகவும் சரியாயிருக்கிறது. 94 ஊழியக்காரர்கள் தங்களை ஸ்தாபனமாக ஆக்கிக் கொண்டுவிட்டார்கள். அவர்களுக்கு பெரிய ஸ்தாபனங்கள் இருக்கின்றன. அவர்கள் எதையெல்லாமோ ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள். எப்படியிருந்தாலும் சரி, ஒரு நபரை சபை அங்கத்தினராக ஆக்கிவிடுகின்றனர். முட்டையிலிருந்து குஞ்சு பொறிக்க வைக்கும் இயந்திர சாதனத்தின் மூலம் வெளிவந்த கோழிக் குஞ்சைப் போல் அவர்கள் இருந்து, ஏதாவதொரு வேதக் கல்லூரியினால் பயிற்றுவிக்கப்பட்டு வெளியே வருகிறார்கள். அந்நிலையில் அவர்களுடைய நிலையானது எப்படியிருக்கிறதென்றால், ஒரு ஹாட்டன்டாட் எப்படி எகிப்திய இரவுகள் என்ற கதையை அறிந்திருக்க மாட்டானோ அதே போல் இவர்களும் தேவனைக் குறித்து அறியாதிருக்கிறார்கள். அவ்வாறு தான் அவர்களும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். நமது சபைகளிலே நமக்கு தேவையானது என்னவெனில், தன்னிடம் அந்த முற்றிலுமானவரைக் கொண்ட ஒரு மனிதனே. மெத்தடிஸ்ட் சபையிலும், பாப்டிஸ்டு சபையிலும், பெந்தெகொஸ்தே சபையிலும், ப்ரெஸ்பிட்டேரின் சபையிலும் தேவைப்படுகிற காரியம் என்னவெனில், முற்றிலுமானவரைக் கொண்டிருந்து, தேவனுடைய வார்த்தைக்கும், கிறிஸ்துவுக்கும் தன்னைப் பிணைத்துக் கொண்டு நிற்கும் ஒரு தேவனுடைய மனிதனே. அவன் தன் சபையின் ஒவ்வொரு அங்கத்தினரையும் இந்த வார்த்தையின் நிலையோடு நடக்கும் சூழ்நிலைக்குக் கீழாக கொண்டு வந்து, அந்த வார்த்தையானது பிரத்தியட்சமாகிறதைக் கண்டு பின்பற்றும் படியாகச் செய்கிறான். உலக முழுவதிலும், “...விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன...'' என்பதை பின்பற்றுவார்கள். ''அது முடிந்து போய்விட்டது'' என்று அவர்கள் கூறினார்கள். இயேசு கூறினார், ''...உலகமெங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்...“ என்று. இன்னமும் நாம் உலகமெங்கிலும் இன்னும் போய்ச் சேரவில்லை; ஒவ்வொரு சிருஷ்டியினிடமும் போய்ச் சேர இன்னும் தொலைதூரம் உள்ளது. எவ்வளவு தூரம்? உலகம் முழுவதிலும், யாருக்கு? சர்வ சிருஷ்டிக்கும். என்ன ஏற்படும்? “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளை பேசுவார்கள். சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள். அதுவே முற்றிலுமானதாக இருந்து வடதிசை நட்சத்திரமாக இருக்கும் அந்த வார்த்தையானவரை பற்றிக் கொண்டிருக்கிறதாக இருக்கிறது. அதுவே திசைகாட்டும் கருவியாக இருந்து அதோடு நிலைத்திருக்கிறதாக அது இருக்கிறது. அதுவே நமக்கு அவசியமாயுள்ளது. 95 ஆனால் நாமோ புறப்பட்டுச் சென்று கல்வி நிலையங்களைக் கட்டியெழுப்பி, மக்களை மதமாக ஸ்தாபித்து, அதற்குள் உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டு, பாப்டிஸ்டுகளோடு வீணான சர்ச்சையில் ஈடுபட்டு, மெத்தடிஸ்டுகளோடும் அவ்வாறு செய்து குழப்புகிறோம். ஏனெனில் அவர்களெல்லாம் இவர்கள் விசுவாசிப்பது போல் விசுவாசிப்பதில்லையாம். இவ்வாறாக நாம் பெரிய வேதக் கல்லூரிகளை பிறப்பித்துக் கொண்டோம். பெரிய பெரிய சபைகளை கட்டிக் கொண்டோம். அங்கே ஏனையவற்றைவிடச் சிறந்த மெத்தென்ற பூம்பட்டு கொண்டு செய்யப்பட்ட சாய்மான இருக்கைகள், சிறந்த ஆர்கன், இன்ன பிறவற்றையும், சிறப்பாக உடுத்திய கூட்டம், இவைகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நகரத் தலைவர் (மேயர்) இன்னும் இப்படிப்பட்ட ஒவ்வொருவரையும் சபையில் தங்களிடம் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் இருந்தும் நமக்குக் கிடைத்ததுதான் என்ன? ஒரு மரணத்தின் கூட்டம்; அது மதவாத ஸ்தாபன முற்றிலுமானதோடு பிணைக்கப்பட்டதாயுள்ளது. அது மரணமாயுள்ளது. ஓ, “இப்படி ஆகாமல் இருக்கட்டும்.'' 96 நான் என் பாதைகளில் மரிப்பேனானால், எனது முற்றிலுமானவர் இயேசு கிறிஸ்துவே ஆவார்; அவர் மேல் நான் விசுவாசங் கொண்டுள்ளேன். எல்லோரும் வெளிநடப்புச் செய்தாலும்... ஒருவர் கூறினார், டாக்டர் டேவிஸ் என்னிடம் கூறினார், “பில்லி, நீர் எப்படிப்பட்ட காரியத்தைப் பிரசங்கிக்கிறீரென்றால், சபையின் தூண்களுக்குத்தான் நீர் வார்த்தையைப் பிரசங்கிப்பதாக அது இருக்கிறது. ''அப்படியென்றால், நான் தூண்களுக்கு தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பேன். ஏனெனில், தேவன் இந்தத் தூண்களைக் கொண்டு ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார் என்று பதிலளித்தேன்“. அது சரிதான். தேவனுடைய வார்த்தை உண்மையாயிருக்கிறது. ''அவர்கள் நீர் கூறுவதை விசுவாசிப்பார்கள் என்றா எண்ணுகிறீர்கள்?'' என்று கேட்டார். “அது என் வேலையல்ல, அந்த வார்த்தையோடு உத்தமமாக நிலைத்திருப்பதே எனது கிரியையாயிருக்கிறது'' என்று நான் கூறினேன். அது சரிதான். அவர் மேலும், ''தெய்வீக சுகமளித்தல் என்ற உபதேசத்தோடு இந்த கல்வியறிவு நிறைந்த இவ்வுலகை சந்திக்கமுடியும் என்று எண்ணுகிறீர்களா?“ என்று கேட்டார். ''அது என்னுடைய தெய்வீக சுகமளித்தல் அல்ல, அது அவருடைய வாக்குத்தத்தமாகும். அவரே அந்தக் கட்டளையைக் கொடுத்தவர்“ என்று பதிலளித்தேன். 97 ஓ, 1933-ம் ஆண்டில் ஜூன் மாதத்தில் அந்த நதியில் அப்பெரிய ஒளியினுள்ளே அவர் தீவிரமாக வந்திறங்கி நின்று, ''கிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன்பாக யோவான் ஸ்நானன் அனுப்பப்பட்டு, முன்னோடினது போல, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக போகும்படி, நான் உன்னை ஒரு செய்தியோடு அனுப்புகிறேன்'' என்று கூறியதை நான் நினைவு கூறுகிறேன். அவ்வாறே உலகமெங்கிலும் செய்தியானது புறப்பட்டு போய்விட்டது, அதினால் எழுப்புதல் அக்கினியானது கடந்த பதினைந்து ஆண்டுக் காலமாக ஏறத்தாழ ஒவ்வொரு மலையின் மேலும் நிலைபெற்றுள்ளது. தேசங்கள்தோறும் தெய்வீக சுகமளித்தலும், வல்லமையும், திரும்ப அளிக்கப்படுதலும் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பொழுது அது இறுதியான உச்சக் கட்டத்தை பளீரென அளிக்க ஆயத்தமாயுள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன்; அவ்வாறு ஆகும்பொழுது, சபையை மகிமையில் எடுத்துக் கொள்வதற்கான விசுவாசத்தை அது கொண்டு வரும். அவள் தானே இந்த செய்திகளில் தங்கியிருக்கிறாள். நாம் உண்மையாகவே கடைசி காலத்தில் இருக்கிறோம். அவைகள் யாவையும் குறித்து நாம் பேசியிருக்கிறோம், ஆனால் அக்காரியமானது இப்போது நம் மேல் அசைந்து வந்துள்ளது. இங்கே ஒருவர் இருக்கிறார், ஆம் ஐயா, அவருக்கு செவி கொடுங்கள். அது சரிதான். 98 நான் சிவப்பு விளக்கைக் குறித்து கூறினேனே, அதுவே காரியத்தின் தீர்வாயிருக்கிறது. அதுவேதான் காரியம். சிவப்பு விளக்கானது யார் போவது என்று உங்களுக்குக் கூறுகிறது. யார் என்ன கூறினபோதிலும், அதைப் பற்றி அக்கறையில்லை. சிவப்பு விளக்கு என்ன கூறுகிறதோ அதுவே காரியம். நீங்கள் சிவப்பு விளக்கை பொருட்படுத்தாவிடில் உங்களுக்கு உண்மையிலேயே ஒரு போக்குவரத்து நெரிசல் உண்டாகிவிட முடியும். அங்கே ஒரு முற்றிலுமானது இருந்தாகவேண்டும். ஆம் ஐயா. அதைப் போலவே, சபைக்கும் ஒரு முற்றிலுமானவர் அவசிமாயுள்ளது. சபையிலே இருக்கிற ஜனங்களே, உங்களுக்கு ஒரு முற்றிலுமானவர் அவசியமாயிருக்கிறார். ஆனால் இன்றோ ஒவ்வொரு சபையும் தமக்கென பிரத்தியேகமான முற்றிலுமானதைக் கொண்டிருக்கிறார்கள். பார்த்தீர்களா? அவர்கள் முயலுகிறதில்லை... ''பாப்டிஸ்ட்டுகளாகிய நாங்கள் இதை விசுவாசிக்கிறோம்“, “மெத்தடிஸ்டுகளாகிய நாங்கள் இதை விசுவாசிக்கிறோம்”, “ப்ரெஸ்பிடேரியன்களாகிய நாங்கள் இன்னதை விசுவாசிக்கிறோம்”, “பெந்தெகொஸ்தேயினராகிய நாங்கள் இன்னதை விசுவாசிக்கிறோம்'' என்றெல்லாம் கூறுகிறார்கள். அதெல்லாம் சரிதான். ஆனால் அவர்களோ வார்த்தையின் இன்னமுள்ள காரியங்களையெல்லாம் எடுத்துக் கொள்கிறதில்லை. இன்னும் இருக்கின்ற யாவையும் என்பதினுடைய காரியமானது என்ன? “பாப்டிஸ்டுகளாகிய நாங்கள் முழுக்கு ஞானஸ்நானத்தை விசுவாசிக்கிறோம்'' என்கிறார்கள். அது நல்லதுதான். பரிசுத்தஆவியின் அபிஷேகத்தைக் குறித்து என்ன? அன்னிய பாஷைகளில் பேசும் காரியத்தைக் குறித்து என்ன? சுகமளித்தலின் வரங்களை குறித்து என்ன? தீர்க்க தரிசனம் உரைத்தலைக்குறித்து என்ன?'' என்று கேட்டால். “ஓ, இல்லை. நாங்கள் அதை விசுவாசிப்பதில்லை. அது வேறொரு காலத்திற்குரியது'', என்கிறார்கள். 99 பெந்தெகொஸ்தேயினராகிய நீங்களோ, ''நல்லது, நாங்கள் அன்னிய பாஷைகளில் பேசுவதை அடையாளமாக விசுவாசிக்கிறோம்“ என்கிறீர்கள். நிச்சயமாக. அன்னியபாஷைகளில் பேசுவது சரிதான். ஆனால் அதுவே அடையாளமாக இல்லை. அநேகர் அன்னிய பாஷைகளில் பேசுகிறார்கள், அது உண்மைதான். ஆனால் அது எது வரைக்கும் உள்ளதோ அது மட்டும்தான். இருக்கின்ற எந்த ஒரு வரத்தையும் போலியாக நடித்துக் காட்ட பிசாசினால் முடியும். வேதாகமத்திலுள்ள எந்தவொரு வரத்தையும் அவன் நடித்துக் காட்ட முடியும். ''நான் மனுஷர் பாஷைகளையும் பேசினாலும், தூதர் பாஷைகளையும் பேசினாலும்... என் சரீரத்தை சுட்டெரிக்கக் கொடுத்தாலும், எனக்கு உண்டானது யாவற்றையும் விற்று தரித்திரருக்கு உணவளித்தாலும், மலைகளைப் பெயர்க்கத் தக்க விசுவாசம் எனக்கிருந்தாலும், நான் வேதக் கல்லூரிக்குப் போனாலும், கற்றுக் கொள்ள வேண்டிய எல்லா அறிவையும் நான் கற்றுத் தேர்ந்த போதிலும், நான் அப்போதும் ஒன்றுமில்லை'' என்று பவுல் கூறினான். 100 தேவையானது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் நபரே. அவருடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளாமல் நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ள முடியாது. வார்த்தையானது முதலில் வந்தாக வேண்டும். பிறகு ஜீவனானது அந்த வார்த்தைக்குள் வந்து அந்த வார்த்தையை பிரத்தியட்சமாக்குகிறது. “...நான் என் பிதாவின் கிரியைகளை செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை'' என்று இயேசு கூறவில்லையா? அங்கே பிரத்தியட்சமாகத் தோன்றியது தேவனுடைய வார்த்தையே. தேவன் கிறிஸ்துவிலே இருந்து கொண்டு, உலகை தம்மோடு ஒப்புரவாக்கிக் கொண்டு, தாம் யார் என்பதை உலகுக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரே அந்த முற்றிலுமானவராவார். அவரே நித்தியமான முற்றிலுமானவராக இருக்கிறார். “அவர் நித்தியமானவரா சகோதரர் பிரான்ஹாம் அவர்களே?”, என்று நீங்கள் அப்போது கேட்கிறீர்கள். அப்படித்தான் அது இருந்தது. அப்படியாயின் இன்று எப்படியுள்ளது? இயேசு கூறினார், “...என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்...'' அதே முற்றிலுமானது தான் அவர். அது அப்படித்தான். 101 ஒவ்வொருவருக்குத் தத்தமது சொந்த முற்றிலுமானது இருக்கிறது. ஓ, என்னே நியாயாதிபதிகளின் நாட்களில் இருந்தது போல் அக்காரியம் உள்ளது. “அவனவன் தன் தன் பார்வைக்கு சரியானபடி செய்து வந்தான். நியாயாதிபதிகளின் நாட்களிலே, ஒவ்வொரு மனிதனும் தனது பார்வைக்கு செம்மையானது எதுவோ, அதையே செய்து வந்தான். நியாயாதிபதிகளின் நாட்களிலே, ஒவ்வொரு மனிதனும், தனக்கே உரிய தன் சொந்த முற்றிலுமானதைக் கொண்டிருந்தான். அவனவன் தனக்கு இஷ்டமானபடியெல்லாம் செய்தார்கள். இப்பொழுதும் அவ்வாறு தான் உள்ளது. ஒவ்வொரு மனிதனும் தனது பார்வைக்கு சரியானபடி செய்தான். இப்பொழுது, நியாயாதிபதிகளின் நாட்களில் அவர்கள் அவ்வாறு செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? சொல்லப் போகும் விஷயம் சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கக் கூடும். நியாயாதிபதிகளின் நாட்களில் அவர்கள் அவ்வாறு செய்ததன் காரணம் என்னவெனில், அந்நாட்களில் கர்த்தருடைய வார்த்தை தன்னிடம் வரப் பெற்றுக் கொள்ளக் கூடிய தீர்க்கதரிசி ஒருவரும் இல்லை. எனவே ஒவ்வொரு மனிதனும் தன் பார்வைக்கு சரியானதை செய்யத் தக்கதாக இருந்தது. இன்றைக்கும் சரியாக அதேகாரியம் தான் சம்பவித்துள்ளது. இந்த மத ஸ்தாபன நாட்களில் நமக்கு தீர்க்கதரிசி இருக்கவில்லை. ஆனால் தேவனோ நமக்கு ஒரு தீர்க்கதரிசியை அளிப்பதாக வாக்கு உரைத்திருக்கிறார். பார்த்தீர்களா? அவர் அதைச் செய்தார். கடைசி நாட்களில் எலியாவை மீண்டும் காட்சியில் தோன்றப் பண்ணி அனுப்புவார். அவன் தானே பிள்ளைகளுடைய இருதயத்தை பிதாக்களிடத்திற்கு, மூல பெந்தெகொஸ்தேக்கு திருப்புவான். அவர் அவ்வாறு கூறியுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 102 மத்தேயு 11-ம் அதிகாரம் 6-ம் வசனத்தில் யோவானைப் பற்றி இயேசு குறிப்பிட்ட அவ்வசனத்தை நீங்கள் குறிப்பிடுவீர்கள் என்பதை நான் அறிவேன். அதுதான் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் கூறியபொழுது, “யோவானாகிய இந்த மனிதனைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டார். ''...இதோ நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்பு கிறேன்... என்ற வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான். ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால்... இவனைக் குறித்துத்தான் சொல்லப்பட்டது...'' என்று இயேசு கூறினார். அது மல்கியா 3-ம் அதிகாரமாகும். மல்கியா 4-ம் அதிகாரம் அல்ல. ஆனால் மல்கியா 4-ம் அதிகாரமாயிருக்கிறதென்றால், அப்போது வார்த்தை பிழையுள்ளதாக ஆகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் சரியாக இந்த சமயத்தில் முழு உலகமும் அக்கினியால் சுட்டெரிக்கப்படும் என்றும், நீதிமான்கள் துன்மார்க்கரின் சாம்பலின் மேல் நடப்பார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். சகோதரரே, வார்த்தை கலப்படம் செய்யாதீர்கள். அது என்ன கூறுகிறதோ அதை கூறிடுங்கள். அதுதான் சரியானது. அதை அவர் கடைசி நாட்களுக்கென வாக்குத்தத்தம் செய்திருக்கிறார், அது இப்போதே ஏற்பட்டிருக்க வேண்டும். 103 நியாயாதிபதிகளின் நாட்களிலே ஓவ்வொரு மனிதனும் தன் தன் மனம் போனபடியெல்லாம் செய்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அக்காலத்தில் ஒரு மனிதனும் இல்லை, வார்த்தையை ஜீவிக்கும்படி செய்திருக்க ஒரு மனிதனும் இல்லை. ஒரு தீர்க்கதரிசியும் இல்லை. கர்த்தருடைய வார்த்தையானது எப்போதுமே ஒரு தீர்க்கதரிசிக்கு வருகின்றது. அவன் எப்போதுமே வெறுக்கப்படுகிறான். ஒரு சிறு குழு மாத்திரம் அவனை நேசிக்கிறது. பாருங்கள். ஆனால் நான் என்ன கூறுகிறேனென்றால், அவ்விதமான காரியம் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. தேவன் தமது கொள்கையை மாற்றிக் கொள்வதேயில்லை. அவர் தேவனாயிருந்து கொண்டு அவரால் மாறமுடியாது. தேவன் எப்போதாவது எதையாகிலும் கூறி, எதையாகிலும் செய்தால், அடுத்த தடவையும் அவர் அவ்வாறே செய்யவேண்டும். அந்த பிரச்சினையானது வரும்போது, முதல் தடவை அவர் என்ன செய்தாரோ அதேவிதமாக அவர் இரண்டாவது செயல்படாவிட்டால், அவர் முதல் தடவை தவறாக செயல்பட்டார் என்று ஆகிவிடும். தேவன் தவறிழைத்தார் என்று யார் அவர் மேல் குற்றஞ் சுமத்தமுடியும்? தேவன் மேல் பாவத்தை சுமத்த யாரால் முடியும்? ''...என்னில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்... என்று இயேசு அதைத்தான் கூறினார். பாவமானது என்ன? அது அவிசுவாசமாகும். ''...விசுவாசியாதவனோ, ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று“ மேசியா செய்ய வேண்டுவதெல்லாவற்றையும் நான் நிறைவேற்றவில்லை என்று யார் என்னைக் குறித்து குற்றஞ் சாட்ட முடியும். பார்த்தீர்களா? ஒருவரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. மேசியா ஒரு தீர்க்கதரிசியாயிருந்தார். அவர்தாமே அவர் என்பதை நிரூபித்திருந்தார். மல்கியாவிலிருந்து அநேக நூற்றாண்டுகளாக அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியும் இருக்கவில்லை. இங்கே இச்சமயத்தில் அவர் அங்கே காட்சியில் தோன்றினார். அவர் ஜனங்களுக்கு புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மர்மமாக இருந்தார், அவர்களுடைய சபைக்கு அவர் இடறுதலின் கல்லாக இருந்தார். ஏனெனில், தேவன் கூறினார்: ''இதோ, விலையேறப்பெற்றதும், பரீட்சிக்கப்பட்டதுமான ஒரு மூலைக் கல்லை நான் சீயோனில் வைக்கிறேன்... அது இடறுதற்கேதுவான கல்... அதின் மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை...'' என்று கூறினார். அது சரிதான். அதின்படியே அவர் அங்கே இருந்தார். அவர்கள்... வேத வாக்கியங்களை அப்படியே சரியாக நிறைவேற்றினார். ஆனால் அவரை விசுவாசித்தவர்களுக்கோ, ஒரு முற்றிலுமானது பரிபூரணமானது உண்டாயிருந்தது. 104 எளிய மார்த்தா, லாசரு கல்லறையிலிருந்து எழுந்து வருவதைக் கண்டபோது, அவர் யார் என்பதை அவள் அறிந்துகொண்டாள். அவர் அதைச் செய்வதற்கு முன்னரே, “...நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன்...'' என்று அறிந்து கொள்ளத் தக்கதான முற்றிலுமானதை, பரிபூரணத்தை அவள் தன்னில் கொண்டிருந்தாள். ”இப்பொழுது என் சகோதரன் மரித்திருந்த போதிலும், ஒரு வார்த்தையை மாத்திரம் கூறும், தேவன் அதைச் செய்வார்'', என்று அவள் கூறினாள். ஆமென். அவள் முற்றிலுமாக தன்னம்பிக்கை கொண்டவளாக இருந்தாள். அது சரியானதாகும். அவள் அதைக் கூறியபொழுது, இருதயத்திலும், அவள் அவ்வாறே நம்பிக்கை கொண்டிருந்து, அதை இருதயத்திலிருந்து கூறினபோது, ''...அவனை எங்கே வைத்தீர்கள்'', என்றார். “...வந்து பாரும்...'' என்றார்கள். அங்கே அவர் ஒரு தரிசனத்தோடு நின்றார். ஏனெனில், “பிதாவானவர் எனக்கு முந்தி காண்பிக்கிறவரையிலும் நான் ஒன்றும் செய்ய மாட்டேன்'', என்று அவர் கூறியிருந்தார். அவர் லாசருவின் வீட்டை கடந்து போனார். அவர் வந்து அவனுக்காக ஜெபிக்கும்படியாக அவரை அழைத்தனுப்பினார்கள். லாசரு மரிக்கப் போகிறான் என்பதை முந்தியே அறிந்திருந்தார். அந்த வேளை வந்தபோது, ''...நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான்...'' என்று அவர் கூறினார். ''அவன் சுகமடைவான்'' என்று அவர்கள் கூறினார்கள். அவன் “...மரித்துப் போனான்...'' என்றார். ''நான் அங்கே இராததினால்... உங்கள் நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்...” என்று அவர் கூறினார். அவனுக்காக ஜெபம் பண்ணும்படி அவரை அவர்கள் கேட்டிருந்தார்கள். பிறகு அவர் திரும்பி வந்து, “...நான் அவனை எழுப்பப் போகிறேன்...'' என்று அவர் கூறினார். ''நான் போய் என்னால் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்கிறேன் என்று அவர் கூறவில்லை”. ''நான் போய் அவனை எழுப்புவேன்'' என்றார். ஏன்? ஏனெனில் என்ன செய்ய வேண்டுமென்பதை பிதாவானவர் ஏற்கனவே அவருக்குக் காண்பித்துவிட்டார். 105 அவர் கல்லறையண்டையில் சென்றார். அங்கே ஒரு மனிதன் நின்றார். அங்கே தேவன் மாம்சத்தில் நின்றார். அவரால் அந்தக் கல்லைப் பார்த்து, “நீங்கிப் போ'' என்று சொல்லியிருக்க முடியும். ஆனால் அவரோ அந்த எளிய ஸ்திரீகளிடம் கூறினதென்னவெனில், ”...கல்லை எடுத்துப் போடுங்கள் என்றார்...'' நீங்களும் கூட ஒன்றைச் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். கவனித்தீர்களா? அவர்கள் அந்தக் கல்லை எடுத்துப் போட்டார்கள். அவ்வாறு செய்தது அவர்களுக்கு குமட்டலெடுத்தது. ஏனெனில், அவன் (லாசரு) மிகவும் நாறிப் போய் இருந்தான். அவர் அங்கே நின்றிருந்தார். ஓ, அவர் தமது அந்த நலிந்த மெலிந்த சரீரத்தை நேராக்கிக் கொள்வதை என்னால் காண முடிகிறது. ஏனெனில் அவருக்கு நாம் விரும்பத்தக்க அளவுக்கு செளந்தர்யம் இல்லை என்று வேதம் கூறுகிறது. விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. பார்த்தீர்களா? 106 தாவீதைப் போல, அவன் ஒரு சிவந்த நிறமுடைய ஒரு பையனாக இருந்த போது, அவன் இராஜாவாக இருக்கும்படி தெரிந்து கொள்ளப்பட்டான். பார்த்தீர்களா? அந்த பெரிய ஆட்களெல்லாம், ''அவன் தலையின் மேல் ஒரு கிரீடம் வைக்கப்பட்டால் அவன் அழகாக தோற்றமளிக்க கூடுமோ?'' என்றார்கள். “மூத்தவனை தெரிந்து கொள்ளும்” என்று ஈசாய் கூறினான். ''தேவன் அவனைப் புறக்கணித்தார்“ என்று சாமுவேல் கூறினான். அவன் தனது குமாரர்களையெல்லாம் ஒவ்வொருவராகக் கொண்டுவந்து நிறுத்தினான். ''உன் பிள்ளைகள் இவ்வளவுதானா...'' என்று கேட்டான். இன்னும் ஒருவன் இருக்கிறான். ஆனால் அவனோ இராஜாவுக்குரிய விதமாக தோற்றமளிக்க மாட்டான். ஏனெனில் “அவன் சரிந்த தோள்களையுடைய சிவந்த மேனியையுடைய ஒரு இளைஞன்தான்'', என்றார்கள். “...ஆள் அனுப்பி அவனை அழைப்பி...” என்றான். அத்தீர்க்கதரிசியின் முன்பாக அவன் வந்த மாத்திரத்திலேயே, ஆவியானவர் அவன் மேல் இறங்கினார். அவன் அபிஷேக தைலத்தை எடுத்து, தாவீதின் சிரசின் மேல் ஊற்றி இவனே உங்களுடைய இராஜா என்று கூறினான். அதுவே உறுதியாயிருக்கிறது. ஆம் ஐயா!. 107 அங்கே இயேசுவானவரும் சரிந்த தோள்களையுடையவராய் நின்றிருந்தார். அவர் முப்பது வயது ஆகாத போதிலும், ஒரு வேளை அவரில் நரைமுடி தோன்றியிருக்கக் கூடும். நாற்பது வயதை அடைந்தவரைப் போல் அவர் காணப்பட்டார் என்று வேதத்திலிருந்து தெரிய வருகிறது. யூதர்கள் அவரிடம், ''நீர் இன்னும் ஐம்பது வயதைத் தாண்டியவரல்ல, ஆபிரகாமைக் கண்டேன் என்று நீர் கூறுகிறீரே'' என்றார்கள். “...ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்...'' என்று அவர் கூறினார். ஓ, பரிசுத்த யோவான் எழுதின சுவிசேஷம் 6-ம் அதிகாரம். பிறகு அவர் கல்லறையண்டையில் வந்து நின்றார் என்று நாம் காண்கிறோம். அவர் தனக்கு அதைப் பற்றி தரிசனம் உண்டாக வேண்டும் என்றும் அது அவ்வாறே இருக்க வேண்டும் என்றும் அறிந்திருந்தார். “...கல்லை எடுத்துப் போடுங்கள்...'' அவன் மரித்து நாலு நாளாயிற்று; அவன் பிரேதக் கல்லறைக்குரிய துணிகளால் சுற்றப்பட்டு, நாற்றமெடுத்துக் கொண்டிருந்தான். நாட்களானதால் அவன் மூக்கு கூட அழுகி விழுந்து போய்விட்டது. 108 அவர் அங்கே நின்றிருந்து, தனது சரீரத்தை நிமிர்த்திக் கொண்டு, “...என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்” என்றார். அவ்விதமான அறிக்கையை உரைக்க கூடிய ஒரு மனிதனை எனக்குக் கூறுங்கள் பார்க்கலாம். “உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான், இதை விசுவாசிக்கிறாயா என்றார்” “அதற்கு அவள், ”ஆம், ஆண்டவரே...'' என்றாள். அவள் அவரை ஜெபிக்க வரும்படி அழைத்தபோது, அவர் வரவில்லை. மீண்டும் அழைத்தாள், அவர் போகவில்லை. அதைப் பார்க்கும் போது அவளை கைவிட்டுவிட்டது போலத்தான் தோன்றுகிறது. ஆனால் அவளோ, “நீர் உலகத்தில் வருகிறவரான... கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன்'', என்றாள். “...லாசருவே வெளியே வா என்று...'' அவர் சொன்னார். மரித்து நான்கு நாட்களாகிவிட்ட ஒரு மனிதன் அவன்... ஏன்? என்ன? கிறிஸ்துவிடம் அந்த முற்றிலுமானது இருந்தது. அவர் அதைக் குறித்த தரிசனத்தை முந்தி பார்த்துவிட்டார். அது தவறாகப் போக முடியாது. அது சரிதான். அது தவறிழைக்க முடியாது. அது முற்றிலுமாக நிச்சயமானதாக இருக்கிறது. மார்த்தாளும் முற்றிலும் நிச்சயமுடையவளாக இருந்தாள். அவர் எப்படிப்பட்டவர் என்று விசுவாசித்தாளோ அதை அவர் கண்டு கொள்ளும்படியாகச் செய்ய அவளால் கூடுமானால் அப்பொழுது அவள் தான் கேட்டதை பெற்றுக் கொள்வது நிச்சயம். அங்கே அந்த முற்றிலுமானவர் இருந்தார். அது வார்த்தையோடு பிணைக்கப்பட்டதாக இருந்தது, அதுவே எல்லாமுமாயிருக்கிறது 109 ஒவ்வொரு மனிதனும் இன்றைக்கு தன் பார்வைக்கு செம்மையானபடியெல்லாம் செய்கிறான். ஏனெனில் ஒரு தீர்க்கதரிசி இருக்கவில்லை. நியாயதிபதிகளின் நாட்களில் நடந்ததைப் பாருங்கள். அதைக் கவனியுங்கள். எலியா அல்லது எலிசாவின் நாட்களில் என்று நான் நம்புகிறேன், அப்போது அந்த மரித்த பிள்ளையானவனை... அந்த சூனேம் ஊராளாகிய அந்த ஸ்திரீயானவள் செய்ததென்னவெனில்.... எலியா அந்த நாளுக்குரிய தேவனுடைய மனிதனாயிருந்தான். அவன் ஏதோ ஒரு புத்தி சாதுரியமிக்க போதகனல்ல. ஏன்?அவன் தானே அங்கே நடந்து திரிந்து ஒரு வயது சென்ற மனிதனாயிருந்தான். அவன் இன்று உங்கள் வாசலண்டையில் வந்தால் ஒரு வேளை அவனை நீங்கள் துரத்திவிடக் கூடும். முழுத் தேசமும் அவனை பகைத்தது. யேசபேலும், மற்றெல்லோரும் அவனைப் பகைத்தனர். ஏனெனில் அவள் அங்கே வெள்ளை மாளிகையில் வீற்றிருந்தாள். அவள் தான் செய்கிறது போலவே எல்லா ஸ்திரீகளும் செய்யும்படி செய்தாள். அவளது பாணியையே யாவரும் பின்பற்றினர். ஆகாபும் கூட அவளது அதிகாரத்தால் கெட்டுப் போய்விட்டான். அதைப் போலொத்த நிலையை இன்றைக்கும் நாம் கொஞ்சம் கூட பிசகாமல் அப்படியே பெற்றுள்ளோம். அதே விதமாகத்தான் உள்ளது. அதை அப்படியே நீங்கள் காணலாம். அவர்கள் அங்கே பெருமையினால் நிறைந்திருந்தார்கள். 110 ஆனால் இந்த எளிய வயதான சூனேம் ஊராளாகிய அப்பெண், எலியாவின் மேல் இருந்த வல்லமையை கண்டபோது, இவர் ஒரு பரிசுத்தவான் என்று காண்கிறேன் என்று கூறினாள். அவளது பிள்ளை மரித்துக் கிடக்கையில், கழுதையின் மேல் சேணம் வைத்து ஏறி புறப்பட்டு, வழியில் எங்கும் நிறுத்தக் கூடாது என்று கூறினாள். அவள் அங்கே சென்றாள். அதுவே அவளது முற்றிலும் சார்ந்து கொள்ளக்கூடிய பிணைப்பாக இருந்தது. எலியா கூறினான், “இதோ இந்த சூனமித்தியாள் வருகிறாள், அவள் துக்கமாயிருக்கிறாள். அவளுக்கு என்ன கேடு நேரிட்டது என்பது எனக்குத் தெரியாது'', என்று கூறினான். (பாருங்கள், தேவன் தமது ஊழியக்காரர்களுக்கு சகலத்தையும் காண்பிப்பதில்லை, அவர்கள் எதை அறிந்து கொள்ள வேண்டுமோ அதை மாத்திரமே காண்பிக்கிறார்) ”...அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறது...“ ஆனால் அது இன்னதென்று நான் அறியேன் என்றான். கேயாசியே நீ ஓடிப் போய் அவளுக்கு என்ன நேர்ந்தது என்று கேள் என்றான். “...நீ சுகமாயிருக்கிறாயா? உன் புருஷன் சுகமாயிருக்கிறானா? அந்தப் பிள்ளை சுகமாயிருக்கிறதா...'' என்று அவன் கேட்டான். அவளைக் கவனியுங்கள். ஓ, இதுவே நாம் பார்க்கத்தக்க விஷயம். யாவரும், “...சுகந்தான்...'' என்று அவள் கூறினாள். ஏன்? ஏனெனில் அவள் தனது முற்றிலுமானதிடம் வந்துவிட்டாள். எனவே யாவரும் சுகந்தான் என்று கூறினாள். அவனுடைய பாதத்தில் அவள் விழுந்தாள். கேயாசி அவளை எழுப்பினான். அவனது எஜமானுக்கு முன்பில் அது சரியல்ல, எனவே அவளை எழுப்பினான். அவள் அவனிடம் விபரம் கூற ஆரம்பித்தாள். 111 இப்பொழுது, அவனிடம் முற்றிலுமானது இல்லை. அவளுக்கு குழந்தை கொடுக்கும்படியான வல்லமையைத் தான் பெற்றிருந்தோம் என்று தரிசனத்தின் மூலம் அவனுக்கு தெரியும். ஆனால் இப்பொழுது அவன் என்ன செய்யமுடியும்? அவன் தனது கோலை எடுத்துக் கொண்டு போய், அறைக்குள் சென்று எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு, கதவுகளையெல்லாம் சாத்திக் கொண்டான். அறைக்குள் முன்னும் பின்னுமாக நடந்தான். ஓ! நேரடியாக ஏதோ ஒன்று அவனைத் தொடுவதை உணர்ந்தான். பிள்ளையின் மேல் தன்னை கிடத்திக் கொண்டான். பிறகு, எழுந்துவிட்டான். பிள்ளை அசைந்தது, உடல் சூடடைந்தது. அவன் அறை வீட்டில் அங்கும் இங்கும் உலாவினான். ஏனெனில் அவனுக்கு இன்னும் அந்த முற்றிலுமானவரோடு சரியான தொடர்பு கிடைக்காதிருந்தது. அது என்ன கர்த்தாவே? நீர் என்ன செய்யச் சொல்லுகிறீர் என்று கேட்டிருப்பான். அவன் திரும்பிய பொழுது, சந்தேகத்துக்கிடமின்றி அவனுக்கு நிச்சயமாகவே ஒரு தரிசனம் உண்டாயிருந்திருக்க வேண்டும். அவன் அந்தப் பிள்ளையாண்டான் விளையாடுவதையும் கயிறு தாண்டுவதையும் கண்டிருக்க வேண்டும். மீண்டும் இப்பொழுது அவன் அப்பிள்ளையின் மேல் தன்னைக் கிடத்திக் கொண்டான். அவனுடைய மூக்குக்கு மேலே தனது மூக்கையும், அவனது உதடுகளுக்கு மேலே தனது உதடுகளையும் வைத்தான். தேவனுடைய வல்லமையானது அப்பிள்ளையை உயிரோடு எழுப்பியது. அது என்னவாக இருந்தது? அந்த ஸ்திரீயின் முற்றிலுமானது ஒரு தீர்க்கதரிசியாக இருந்தது. தீர்க்கதரிசியின் முற்றிலுமானது தேவனாயிருந்தது. ''நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன்...'' அந்த சிருஷ்டிகரின், தேவனுடைய வல்லமையாயிருக்கிறேன், என்ற வார்த்தையோடு உள்ளதாகும். அவள் தன் குழந்தையை திரும்ப உயிரோடு பெற்றுக் கொண்டாள். 112 நிச்சயமாகவே, ஒவ்வொரு மனிதனும் தன் தன் பார்வைக்கு சரிப்போனபடி செய்தான், ஏனெனில் வார்த்தை தன்னிடத்தே வரப் பெற்றுக் கொள்ளும் ஒரு தீர்க்கதரிசி அக்காலத்தில் இருக்கவில்லை. அந்நாளிலே, வார்த்தையும் தீர்க்கதரிசியும் இல்லாமல் இருந்தன. நாம் வாழ்கிற இக்காலத்தில், என்னுடைய குணப்படுதலின் போது, நான் இந்நிலையைக் கண்டேன். சபையானது என்னைப் பற்றிக்கொள்ளு முன்னர் தேவன் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டார். அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த சர்வ குழப்பங்களினால் நான் ஒருவேளை தேவனற்றவனாக ஆகியிருப்பேன். ஆம் ஐயா. ''நல்லது, வந்து எங்களோடு சேர்ந்து கொள்ளுங்கள். இல்லையெனில், உங்கள் கடிதத்தை எடுத்துக் கொண்டு மற்றதை சேர்ந்து கொள்ளும்'' என்று கூறினர். ''நீ உனது கடிதத்தைக் கொண்டு வந்து ஐக்கியத்தில் சேர்ந்து கொள்ளுகிறதில்லையா?“, என்றனர். ஒரேயொரு எழுத்துத்தான் உண்டு, அது கிறிஸ்து உங்களுடைய பெயரை ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் எழுதும் போது உள்ளதாகும். அது ஒன்று தான் உள்ளது. 113 நான் இந்த மத ஸ்தாபனங்களையெல்லாம் காண்கையில்... ஐரிஷ் குடும்பப் பின்னணியை உடைய நாங்கள் முன்பு கத்தோலிக்கராயிருந்தோம். அதுதானே, ஊழலுள்ளதாயும், நாற்றமெடுத்ததாயும் இருந்தது. இந்நகரத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட ஸ்தாபன சபைக்கு நான் சென்றிருந்தேன். அவர்கள், ''நாங்களே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறோம். எங்களிடம் அதன் யாவும் உள்ளது“ என்றனர். நியூ ஆல்பனியிலுள்ள மற்றொரு சபைக்குச் சென்றேன். அவர்களோ, “அங்கிருக்கிறவர்களுக்கு தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதே அறியார்கள்'' என்று கூறினார்கள். கத்தோலிக்கரோ, “நீங்களெல்லாருமே தவறாயிருக்கிறீர்கள்'' என்றனர். நான், ''இது என்ன இப்படியிருக்கிறது'' என்று எண்ணினேன். நான் ஜெர்மன் லூத்தரன் சபையைச் சேர்ந்த ஒரு பையனுடன் விளையாடுவதுண்டு. அவனிடம், ''நீ எந்த சபைக்குப் போகிறாய்?'', என்று கேட்டேன். ''நான் இன்ன சபைக்குப் போகிறேன்“, என்று கூறினான். நான் அந்த சபைக்கும் சென்றேன். அவர்களும் தாங்கள் தான் வழி என்று கூறக் கேட்டேன். இம்மானுவேல் பாப்டிஸ்ட் சர்ச் அல்லது முதல் பாப்டிஸ்ட் சபையைச் சேர்ந்த சகோ. டேல் அவர்களிடம் சென்றேன். ''இதுதான் வழி“ என்று அவர்கள் கூறினர். நான் பிறகு, ஐரிஷ் சபைக்குச் சென்றேன். ஆனால் அவர்களும், ''இதுவே மார்க்கம்'' என்று கூறினர். “ஓ நான் மிகவும் குழப்பமடைந்து போயிருக்கிறேன், என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் சரியானபடி ஆகவேண்டும் என்று நான் நம்புகிறேன்'', என்றேன். 114 என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை; எப்படி மனந்திரும்புவது என்றே எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு கடிதம் எழுதினேன். அக்கடிதத்தில் நான் எழுதினதாவது: அன்புள்ள ஐயா, இந்த வழியாக நீர் கடந்து செல்லுகிறீர் என்பதை நான் அறிவேன். ஏனெனில் நான் இங்கே தான் அணில் வேட்டைக்காக அமர்ந்திருப்பதுண்டு. நீர் அருகில் வருகிறீர் என்றும், நீர் இங்கே இருக்கிறீர் என்றும் நான் அறிவேன். நான் உம்மிடம் ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். நான் நினைத்தேன், “இப்பொழுது ஒரு நிமிடம் பொறு, நான் பேச விரும்புகிற எவரையும் நான் காணவில்லை. நான் அவரிடம் பேச விரும்புகிறேன். நல்லது, இப்பொழுது, அதை எப்படிச் செய்வது என்று தான் எனக்குத் தெரியவில்லை”, என்று எண்ணினேன். 115 நான் அங்கிருந்த ஒரு கொட்டகைக்குச் சென்றேன். அங்கே சேதமுற்ற ஒரு பழைய மோட்டார் வாகனம் நின்றிருந்தது. அந்த இடம் தண்ணீரால் ஈரமாயிருந்தது. “நான் ஒரு படத்தைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் தங்கள் கரங்களை இவ்வாறு வைத்திருக்கிறார்கள் என்று நம்புகிறேன்” என்றேன். நான் கீழே இறங்கினேன். இப்பொழுது நான் கூறப் போகிறேன். நீர் இதைச் செய்வதற்கான ஏதோ ஒரு வழியுள்ளது. எனக்கு அது தெரியாது. ஒவ்வொன்றையும் அணுகுவதற்கு ஒரு மார்க்கம் உண்டு என்று நான் அறிவேன் என்றேன். நான் எனது கைகளை இவ்வாறு வைத்துக் கொண்டு, அன்புள்ள ஐயா, ஒரு க்ஷணப் பொழுது நீர் என்னிடம் வந்து பேச வேண்டுமென நான் வாஞ்சிக்கிறேன். நான் எவ்வளவு மோசமாயிருக்கிறேன் என்பதை உமக்கு கூற வேண்டுமென நான் விரும்புகிறேன். என் கைகளை இந்த விதமாக வைத்துக் கொண்டேன். நான் செவி கொடுத்தேன். மக்கள் தேவன் தன்னோடு பேசியதாகக் கூறினர். அவர் பேசுகிறார் என்பதை நானும் அறிவேன், ஏனெனில், நான் சிறுவனாக இருந்த போது, அவர் என்னிடம், மது குடிக்காதே, என்றெல்லாம் கூறியிருக்கிறார். அவர் இத்தடவை என் வேண்டுதலுக்கு பதிலளிக்கவில்லை. ஒருவேளை நான் எனது கரங்களை இந்த விதமாக வைத்துக் கொள்ள வேண்டுமோ? என்று எண்ணினேன். எனவே, நான் ''அன்புள்ள ஐயா, சரியாக எவ்விதம் இதைச் செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. நீர் எனக்கு உதவி செய்வீர் என்று நான் நம்புகிறேன்“, என்று கூறினேன். 116 ஒவ்வொரு பிரசங்கியும் தங்களுடையதை வந்து சேர்ந்து கொள்ளுமாறும், எழுந்து நின்று, இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதாகவும், இயேசு தேவ குமாரன் என்று விசுவாசிப்பதாகவும் அறிக்கையிட வேண்டுமென்று என்னிடம் கூறிக் கொண்டிருந்தனர். பிசாசுகளும் அவ்வாறே விசுவாசிக்கின்றனவே. எனவே நான் எனக்குள் இவ்வாறு சிந்தித்தேன். இதைவிட மேலான ஒன்றை நான் பெற்று கொள்ளவேண்டும் என்று, எனவே நான் இந்த விதமாக வாஞ்சித்துக் காத்திருந்தேன். அலங்கார வாசலிலே, பேதுருவும், யோவானும் கடந்து செல்லுகையில், அங்கே தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய் பிறந்து வளர்ந்த ஒரு மனிதன் இருந்தான். அவர்கள் அவனிடம், “வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை...'' என்று கூறினர். நான் அதைப் பெற்றிருக்கவில்லை என்று அறிந்திருந்தேன். எனவே, அதை எவ்வாறு செய்வது என்பதை கண்டு பிடிக்க முயன்று கொண்டிருந்தேன். எவ்வாறு ஜெபிப்பது என்பதை நான் அறியவில்லை. நான் என் கைகளை விரித்தேன், பிறகு, நான் இவ்வாறு கிடந்தேன். வாஸ்தவமாகவே, சாத்தான் அப்பொழுது காட்சியில் தோன்றினான். ''நீ பார்த்தாயா? நீ அதிக நேரம் காத்திருந்துவிட்டாய், நீ ஏற்கனவே இருபது வயதை அடைந்துவிட்டாய். அதை இப்பொழுது முயற்சி செய்வதற்கு அவசியமில்லை. நீ செய்துவிட்டாய்...'' என்று கூறினான். 117 நான் அப்பொழுது மனமுடைந்து அழ ஆரம்பித்தேன். பிறகு, நான் என் இருதயம் உண்மையிலேயே உடைந்த போது, நான் இவ்வாறு கூறினேன், ''நான் பேசப் போகிறேன். நீர் என்னிடம் பேசாவிடில், நான் எப்படியாயினும் உம்மிடம் பேசப் போகிறேன்''. எனவே நான் சொன்னேன், “நான் நல்லவனல்ல, நான் என்னைக் குறித்தே வெட்கப்படுகிறேன். திருவாளர் தேவனே, எங்கிருந்தோ நீர் என் பேச்சை கேட்கிறீர் என்பதை நான் அறிவேன். நான் பேசுவது உமக்குக் கேட்கிறதா? நான் என்னைப் பற்றியே வெட்கமடைகிறேன். உம்மை நான் அசட்டை செய்துவிட்டேன் என்பதினால் நான் வெட்கமடைகிறேன்'', என்று பேசினேன். ஏறக்குறைய அவ்வேளையில் நான் ஏறிட்டுப் பார்த்தேன். விசித்திரமான ஒரு உணர்வானது என்னைப் பற்றிக் கொண்டது. ஒரு ஒளியானது அவ்வறைக்குள்ளாக அசைந்து வந்து, ஒரு சிலுவையைப் போல் தோற்றத்தை உருவாக்கியது; என் வாழ்க்கையிலேயே நான் கேட்டிரா ஒரு சப்தம் என்னோடு பேசியது. நான் அதை உற்று நோக்கினேன். முழுவதும் குளிர்ந்து போனதாக இருந்தது. நான் பயந்தேன், என்னால் அசைய முடியவில்லை. நின்று அதை உற்று நோக்கினேன். அது கடந்து சென்றுவிட்டது. 118 ''ஐயா, உமது பாஷையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீர் என்னுடைய மொழியில் பேசாவிடில் என்னால் உம்முடையதை புரிந்து கொள்ளவில்லை. நீர் என்னை மன்னித்தீரென்றால், சிலுவையில் என் கணக்குத் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் அறிவேன். என் பாவங்கள் அங்கே சுமத்தப்பட்டிருக்கத்தான் வேண்டும். நீர் என்னை மன்னிப்பீரென்றால், திரும்ப வந்து என்னோடு உமது சொந்த பாஷையிலே பேசும். எனது பாஷையில் உம்மால் பேச இயலாவிடில் அதைக் கொண்டு நான் புரிந்து கொள்வேன். அது மீண்டும் திரும்ப வரச் செய்தருளும்'' என்று நான் கேட்டேன். அது மீண்டும் தோன்றியது. ஓ, அது மிகவும் நன்றாயிருந்தது. அங்கேதான் என்னுடைய முற்றிலுமானதைப் பெற்றுக் கொண்டேன். ஆமென். ஆம் ஐயா. எனது தோள்களை விட்டு நாற்பது டன் எடையளவுக்கு பாரம் நீங்கினதாக உணர்ந்தேன். அங்கேயிருந்த மர நடைபாதையில் நடந்தேன். என்னால் நிலத்தைத் தொடக் கூட முடியவில்லை. 119 என் தாயார், ''பில்லி நீ உணர்ச்சிவசப்பட்டிருக்கிறாய் என்றார்கள். ''இல்லை, அம்மா, என்ன நேர்ந்ததோ எனக்குத் தெரியாது'' என்றேன் நான். அங்கே பின்னால் ஒரு ரயில்பாதை உண்டாயிருந்தது. என்னால் இயன்ற அளவு உயரமாக அந்த ரயில் பாதையில் குதித்து ஓடினேன். எனது உணர்ச்சிகளை எவ்விதமாக வெளிப்படுத்துவது என்றே எனக்குத் தெரியவில்லை. எவ்வாறு ஆர்ப்பரிக்க வேண்டும் என்று எனக்கு மட்டும் தெரிந்திருந்தால் எப்படியிருக்கும். நான் ஆர்ப்பரித்தேன். ஆனால் நான் எனக்குத் தெரிந்த முறையில் அதைச் செய்தேன். நீங்கள் கவனித்தீர்களா? அது என்னவாயிருந்தது, இளைப்பாறுதலின் துறைமுகத்தில் என் ஆத்துமாவை நங்கூரமிட்டுக் கொண்டுவிட்டேன். நான் அத்தோடு யாவும் சரிப்படுத்தப்பட்டது. அதுவே எனது முற்றிலுமானதாக இருந்தது. அங்கே நான் ஏதோ ஒரு கட்டுக் கதையையல்ல, ஏதோ சில கொள்கைகளையல்ல கண்டு கொண்டது. நான் அந்த மனிதனோடு பேசினேன். நான் சிறுவனாயிருந்த போது, நீ மது அருந்தக் கூடாது, புகைக்கக் கூடாது, ஸ்திரீகளினால் உன்னைக் கறைப்படுத்திக் கொள்ளாதே என்றும், நீ பெரியவனாகும் போது, நீ எனக்காக செய்ய வேண்டிய வேலை ஒன்று இருக்கிறது என்று கூறினாரே அந்த மனிதனோடு பேசினேன். நான் அவரைத் தொடர்பு கொண்டேன். அவரேதான். ஆம் ஐயா, அவரே அந்த ஒருவர். 120 வெகு காலத்திற்கு முன்பு, முதலாம் உலக யுத்தம் முடிந்த பிறகு கிவானிஸ் என்ற இடத்திலே ஒரு நபர் கூறினதென்னவென்றால், சகோதரன் ஃபங்க் அங்கே பின்னால் நின்று கொண்டிருக்கிறார் - அவருங் கூட ஒரு இராணுவ வீரர்தான். அந்த நபர் கூறியது ஒரு தமாஷ் போல் இருக்கும். இந்த இடம் ஜோக் அடிப்பதற்குரிய இடமல்ல. ஆனால் அந்த ஆள் சொன்னது இது தான். அவர் நியூஆல்பனியில் இருந்தார். அவர் கூறியதாவது: “கேப்டன் என்னை வெளியே அழைத்து,'' முழுத் தேசமும் ஜப்பானியர்களால் நிறைந்திருக்கிறது. நாளை, வாலிபரே, நாம் யுத்தத்திற்கு போகிறோம். நாம் அவர்களைப் பிடித்தாக வேண்டும். வாலிபரே, இன்றைக்கு நாம் இங்கே நின்று கொண்டிருக்கிறோமே இதில் அநேகர் நாளை இருக்கமாட்டார்கள். நாம் உள்ளே போகப் போகிறோம் நாளைக் காலையிலே. எனவே ஒவ்வொருவரும் தன் தன் மதத்தைப் பற்றிக் கொள்ளுங்கள் என்றார். இந்த ஆள் கூறினார்: “எனக்கு என்று ஒரு மதமும் இல்லையே” என்று. இவர் மேலும் என்னிடம் கூறினார்: ''நான் அங்கே நின்றிருந்தேன். அப்போது, அங்கே ஒரு சபை பாதிரியார் வந்தார். அவர் அந்த வழியாகப் போனார். ஒரு ப்ராடெஸ்டெண்ட் வந்தார், அவர் இன்னொரு வழியாகப் போனார். யூதர் தன் வழியே போனார். கத்தோலிக்கர் தங்களது மதகுருவின் பின்னால் சென்றார்கள். நான் மட்டும் தனியே அங்கே நின்றேன்'', என்று அவர் கூறினார். 121 கமாண்டிங் ஆபீசர் என்னிடம், ''நீ உனது மத வழிபாட்டிற்குச் செல்“ என்று கூறினார். எனக்கென எந்த மதமும் இல்லை என்று இந்த ஆள் கூறினார். “ஏதாவது ஒரு மார்க்கத்தை தேடிக்கொள்”. ஏனெனில், “இப்பொழுது உனக்கு ஒன்று தேவைப்படுகிறது என்பதைப் பற்றி நான் நிச்சயமாக இருக்கிறேன்” என்று கேப்டன் கூறினாராம். அந்த சமயத்தில் அங்கே ஒரு கூட்டம் கத்தோலிக்கர் சென்றார்களாம். இந்த நபர் அக்கூட்டத்தில் இருந்த மதகுருவிடம் சென்று, “எனக்கு ஏதாவது ஒரு மார்க்கத்தை அளிக்க உங்களால் இயலுமா?'' என்று கேட்டாராம். “சரி வாருங்கள்” என்று மதகுரு பதிலளித்தாராம். ''அவர் உள்ளே சென்று என்னை முழுவதுமாக ஒரு கத்தோலிக்கனாக மாற்றினார்'' என்று கூறினார். நியூ ஆல்பனியில் இந்த நபர் இந்த சம்பவங்களை விவரித்துக் கொண்டிருந்த போது, ஜான் ஹோவர்ட் மற்றும் உள்ள உண்மையான கனம் பொருந்திய கத்தோலிக்கர்கள் அங்கே உட்கார்ந்திருந்தனர். அவர் மேலும் என்னிடம் கூறினார், ''அடுத்த நாள் யுத்தத்திலே, அவர் யுத்தம் எப்படி நடந்தது என்பதைப் பற்றியெல்லாம் விவரித்துக் கொண்டேயிருந்தார். அவர் ஒரு உடலமைப்பில் ஒரு பெரிய உடல் கட்டான ஆள். அவர்கள் யுத்தத்திலே கைகளினால் சண்டை போடும் நிலை ஏற்பட்டது என்று கூறினார். கத்திகளால் ஒருவரையொருவர் குத்தினார்களாம். அதினால் வெட்டும் குத்தும் ஏற்பட்டு அலறல்கள் ஏற்பட்டன. அணிகள் ஒன்றோடொன்று மோதும் போது, அணிகள் கலைந்து ஒருவர் அணிக்குள் மற்றவர் உள்ளே நுழைந்து தாக்கிக் கொண்டனராம். ஜப்பானியர்கள் மெல்ல தங்கள் அணிக்குள் இவர்களை உள்ளே நுழைய விடுவது போல் விட்டு, அதன் பிறகு அந்த பழைய பெரிய இயந்திர துப்பாக்கிகளினால் இருமருங்கிலும் இருந்து துளைத்தெடுத்துக் கொண்டிருந்தாராம். கைக்கு கை சண்டையாக இது இருந்ததாம். 122 அவர் தொடர்ந்து விவரித்தார்: ''நான் நேரிடியாக இவ்விதமாக நிறுத்தினேன். எங்கு பார்த்தாலும் அலறல்கள், நீங்கள் பேசுவதே உங்களுக்குக் கேட்க இயலாத அளவுக்கு அதிகமாய் இருந்தன. எங்கும் இரத்தம். நான் பார்த்தேன், எனக்கும் இரத்தம் வந்து கொண்டிருந்தது. அது என்னுடைய இரத்தமாயிருந்தது. நான் எனது விலாவைப் பார்த்தேன். அங்கே ஒரு துளை உண்டாயிருந்தது. அது எனது இரத்தமாயிருந்தது என்று இவ்வாறு அவர் கூறினார். இப்போது நான் கூறப் போவதை ஒரு தமாஷக்காக கூறப் போகிறேன். அங்கே நின்று கொண்டிருந்த ஒரு உண்மையான கத்தோலிக்க நண்பர், அந்த ஆளிடம் அப்போது நீர் “மரியே வாழ்க” என்று கூறவில்லையா என்று கேட்டார். அதற்கு இந்த அள்; “இல்லை ஐயா, அது எனது இரத்தமாயிருந்தது. எனக்கு அப்போது செயலாளர்கள் யாரும் தேவையில்லை. நான் பிரதானமாக மனிதனிடத்திலேயே பேச விரும்புகிறேன். அது என்னுடைய இரத்தமாயிருக்கிறது'' என்று கூறினாராம். காரியமானது அவ்வாறே இருக்கிறது என்று நானும் எண்ணுகிறேன். ஆம் ஐயா! அவ்விதமாகத்தான் இருக்கின்றது. நமக்கு ஒரு பிணையாளி தேவை. ஒரு முற்றிலுமானவர் மட்டுமே தேவை. “எனக்கு செயலாளர்களிடம் போவதற்கு நேரம் போதாது. நான் அவரிடமே பேச விரும்புகிறேன்” என்று அந்த நபர் கூறினாராம். சகோதரனே அவ்வாறுதான் காரியமானது இருக்கிறது. ஒரு மனிதன் கிறிஸ்துவண்டையிலே வரும் போது, நீங்கள் ஏதோ ஒரு பிரசங்கியின் வார்த்தையை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏதோ ஒரு செயலாளரின் வார்த்தையை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ப்ராடெஸ்டெண்டுகளாகிய நீங்கள் இது, அது, இன்னொன்று என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் புதிய பிறப்பினால் நங்கூரமிடப்படுகிற வரையிலும், மறு பிறப்படைகிற வரையிலும், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிற வரையிலும் நீங்கள் அந்த முற்றிலுமானவரிடம் போய்விடுங்கள். அப்போது, வேதாகமமானது எளிமையான முறையிலும் அன்பிலும் உங்கள் ஜீவியத்தின் மூலமாக பிரத்தியட்சமாக்கப்பட்டுவிடும். ஓ, அப்போது, அதுதான் உங்களது முற்றிலுமானதாக இருக்கும். ஆம் ஐயா. 123 அவர் வார்த்தையாயிருக்கிறார் என்பதை நான் வார்த்தையிலே வாசித்திருக்கிறேன். ஜெர்மானிய சபையானது, ''இதுவே வழி என்று கூறியபோது, மெத்தடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், கத்தோலிக்கர் ஆகிய இவர்கள் யாவரும் இவ்வாறு இதுவே வழி என்று கூறிய போது“... ஆனால் நான் வார்த்தையிலோ அவர் கூறியதை வாசித்தேன். ”...இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை...'' என்றார். இப்பொழுது இதை மிகவும் கவனமாகக் கேளுங்கள்; இப்பொழுது பிராடெஸ்டெண்டுகள் கூறுகிறார்கள்... கத்தோலிக்கர் கூறுகிறார், அவர் சபையை பேதுருவின் மேல் கட்டினார் என்று. “...நீ பேதுருவாய் இருக்கிறாய்... இந்தக் கல்லின்மேல்...'' இல்லை அப்படி ஒருபோதும் இல்லை. அப்படியிருக்குமாயின், அவன் அப்போதே பின்மாற்றமடைந்தானே. அவர்கள் ஒரு மனிதனின் மேல் கட்டினார்கள். அவன் என்ன செய்தான்? ப்ராடெஸ்டெண்டுகள், கூறுவதென்னவெனில், அவர் தன் மேலேயே சபையைக் கட்டினார் என்று. அவர் என்ன செய்தார்? “...மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்? என்று கேட்டார்'' (மத்.16:13). அதந்கு அவர்கள்: சிலர் உம்மை சிலர் எலியா என்றும் மேசசோ என்றும் சொல்லுகிறார்கள். “...நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்? என்று கேட்டார்''. “...பேதுரு பிரதியுத்தரமாக நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்''. 124 இப்பொழுது இவ்வார்த்தைகளைக் கவனியுங்கள்; “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்'' நீர் இதை ஒரு மத குருவினிடத்தினின்று கற்றுக் கொள்ளவில்லை. ஒரு வேதக் கல்லூரியில் நீ இதை கற்கவில்லை என்றார். ”...இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்“. அது தான் வார்த்தையைப் பற்றிய ஆவிக்குரிய வெளிப்பாடாகும். ”பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை''. ''ஆண்டவரே இப்படித்தான் இது இருக்கிறது'' என்று எண்ணினேன். நான் புத்தகத்திலே வெளிப்படுத்தின விசேஷம் 22-ம் அதிகாரத்திலே இவ்வாறு படித்தேன். இதனோடு ஒன்றை யாராவது கூட்டினால், (ஏனெனில் இது (வார்த்தை) பூர்த்தியானதாக இருக்கிறது); இதனிடமிருந்து யாராவது ஒன்றை எடுத்துப் போட்டால், (அதை மறுதலித்தால்), இதை இன்னும் சிறப்பாக ஆக்கும்படி செய்வேன் என்றால், அதை காலத்திற்கு ஏற்றவாறு சிறிது பாலிஷ் செய்தால், இதனோடு ஒன்றைக் கூட்டினால், அல்லது இதிலிருந்து ஒன்றை எடுத்துப் போட்டால், ஜீவ புத்தகத்தில் உள்ள அவனது பங்கை அவர் எடுத்துப் போட்டுவிடுவார். நான் சொன்னேன்: ''அப்படியென்றால், அவையாவும் எனக்குத் தேவை கர்த்தாவே. நான் இதில் விசுவாசம் கொள்ள, இன்னதில், சிலுவையில், கிறிஸ்து வந்தார் என்பதிலும் நம்பிக்கை கொள்ள அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் முற்றிலும் பரிபூரணமாக இருக்கிறது'' இப்புத்தகத்தை இந்தக் கையிலும் வரலாற்றை அடுத்த கையிலும் வைத்துக் கொள்ளுங்கள். அது பரிபூரணமானது என்பது கடைசி வரையிலும் உறுதிப்படுத்தப்படும். பிறகு, நான், “கர்த்தாவே என்னை ஏற்றுக் கொள்ளும்'' என்று கேட்டேன். அவ்வாறு நான் செய்த பொழுது, கிறிஸ்துவாகிய பரிசுத்த ஆவியானவரை ஏற்றுக் கொண்டேன். அவரே எனது முற்றிலுமானவராக இருக்கிறார். அது நானல்ல. 125 ஒரு சமயம், நான் என் மனைவியையும் என் மகளையும் இழந்த பொழுது, நான் வியாதிப்பட்டிருந்தேன். நான் எனது தகப்பனை இழந்தேன்; எனது சகோதரனை இழந்தேன்; எனது மைத்துனியை இழந்தேன். பில்லி மரித்துக் கொண்டிருக்கிற நிலையில் இருந்தான். எல்லாம் போய்விட்டது போன்ற நிலை எனக்கு ஏற்பட்ட போது, நான் சாலையில் அழுது கொண்டே போய்க் கொண்டிருந்தேன். நான் என் மனைவியின் கல்லறைக்குப் போனேன். அவளும் குழந்தையும் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்குப் போனேன். என் மனைவியின் கரங்களில் குழந்தை வைக்கப்பட்டிருந்தாள். நான் நடந்து கொண்டேயிருந்தேன். இந்தியானா மாநிலத்தின் செனட்டராக இருந்த திரு. ஐஸ்லர் எனக்கு சாலையில் எதிர்ப்பட்டார். அவர் இங்கு வந்து இசை இசைப்பதுண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் இரைக்க இரைக்க ஓடி வந்து என்னை நிறுத்தினார். தன் கரங்களை என் மேல் சுற்றிப் போட்டு, பில்லி, நீர் எங்கே போய் கொண்டிருக்கிறீர்?'' என்று கேட்டார். “அங்கே தான் போகிறீரா?'' என்றார். (இது 1937-ம் ஆண்டு வெள்ளத்திற்குப் பிறகு நடந்ததாகும்). நான் ''ஆம்'' என்றேன். ''அங்கே போய் என்ன செய்யப்போகிறீர்?' என்று கேட்டார். “அங்கேயுள்ள ஒரு பழைய புறா பாடுவதைக் கேட்பேன். நான் என் மகள், மனைவியின் கல்லறையருகே அமர்ந்திருப்பேன். அந்த வயதான புறா அங்கு வந்து என்னோடு பேசும்'' என்று நான் கூறினேன். ''ஓ அப்படியா பில்லி?'' என்று கேட்டார். ''ஆம். இலைகள் இசைக்கையில்அவைகள் என் காதில் மெதுவாக தொனிப்பதை நான் கேட்கிறேன். அது எனக்காக இசை இசைக்கும்“ என்றேன். “என்னவிதமான இசையை அது இசைக்கும்'' என்று திரு. ஐஸ்லர் கேட்டார். நான் கூறினேன். நதிக்கு அப்பால் ஓர் தேசமுண்டு. அது எப்போதும் இனிமையானது என்கின்றனர் விசுவாசத்தினால் மாத்திரமே அதன் கரைகளை நாம் சென்றடைய முடியும். அங்கேயுள்ள அழிவில்லாதவரோடு நான் வாழ்ந்திட நாம் ஒருவர் ஒருவராக அந்நுழைவாயிலில் நாம் போய்ச் சேர்வோம். என்றாவது ஒரு நாள் உனக்காகவும் எனக்காகவும் அவர்கள் அதற்காக பொன் மணியோசையை தொனிப்பர். 126 அதற்கு அவர், ''பில்லி உம்மிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். இப்பொழுது கிறிஸ்து உமக்கு எப்படிப்பட்டவராயிருக்கிறார்?'' என்று கேட்டார். ''அவரே எனது ஜீவன், எல்லாவற்றிற்கும் எல்லாமாய் இருக்கிறார், திரு. ஐஸ்லர் அவர்களே, அவரே எனது முற்றிலுமானவராயிருக்கிறார். நான் பற்றிக் கொள்ள வேண்டிய சர்வமுமாயிருக்கிறார்“ என்றேன். ஏன்? ஏனெனில் ஏதோ ஒன்று சம்பவித்திருக்கிறது. இந்தக் கல்லின் மேல்... அவர் மேலும், ''நீர் அந்த மூலையில் நின்று கொண்டு மரித்துப் போகிறவர் போலக் காணப்படும்படி நிறைய மணி நேரங்கள் பிரசங்கித்துக் கொண்டேயிருப்பதை நான் கண்டிருக்கிறேன். இரவில் மணிக்கணக்கில் உம்மை வியாதியஸ்தருக்காக ஜெபிக்க அழைக்கும்போது அங்குமிங்கும் போய்க் கொண்டு வந்து கொண்டிருப்பீரே, ஆனால் தேவன் உமது மனைவியையும், உமது சொந்தக் குழந்தையையும் எடுத்துக் கொண்ட பிறகுங்கூட இன்னமும் அவரை சேவிக்கிறீரே'' என்று கேட்டார். “அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்” என்று பதிலளித்தேன். ஏன்? எனது நங்கூரம் சரியாக உள்ளது. வார்த்தையாகிய முற்றிலுமானவரோட என்னை நான் பிணைத்துக் கொண்டுள்ளேன். வார்த்தையே என்னைப் பற்றிக் கொண்டிருக்கிறது. அவரே எனது முற்றிலுமானவராக இருக்கிறார். மற்றெல்லாம் கைவிடும். ஆனால் கிறிஸ்துவோ கைவிடவே மாட்டார். 127 கத்தோலிக்க சபையானது தனது முற்றிலுமானதாக போப்பைக் கொண்டிருக்கிறது. ப்ராடெஸ்டெண்டுகள் பிஷப்புகளையும், மதச் சட்டங்களையும், பொதுக் கண்காணிகளையும் தங்களுக்குக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நானோ, பவுலைப் போல... உங்களுடைய எழுதுகோல்களை வைத்திருக்கிறீர்களா? ஒன்றைக் குறித்துக் கொள்ளுங்கள். பவுல் அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்திலே 20-ம் அதிகாரம் 24-ம் வசனத்தில் இவ்வாறு கூறுகிறார்: “...அவைகளில் ஒன்றையுங் குறித்துக் கவலைப்படேன்.'' ஓ, அவர்களுக்கு மார்க்கச் சட்டங்கள், கோட்பாடுகள் இருக்கலாம்; உங்களுக்கு எது அவசியமோ, அவைகளையெல்லாம் வைத்துக் கொள்ளலாம், ஆனால் அவைகள் ஒன்றினாலும் நான் அசைக்கப்படேன். இளைப்பாறுதலின் துறைமுகத்தில் என் ஆத்துமாவை நான் நங்கூரமிட்டுள்ளேன். இனியும் கொந்தளிக்கும் கடலில் நான் பயணிக்க வேண்டுவதில்லை. (நீங்கள் இந்த வழியிலோ அந்த வழியிலோ எங்கேயிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது). கொந்தளிக்கும் ஆழத்திலே புயல் வந்து மோதினாலும் (எல்லோரும் கைவிடக்கூடும்) ஆனால் இயேசுவிலே நான் என்றும் பத்திரமாயிருப்பேன். ஆம், இவைகள் ஒன்றும் என்னை அசைக்கமாட்டாது. ஏனெனில் நான் நங்கூரத்தில் பிணைக்கப்பட்டுள்ளேன். ''நான் அந்த சாலையிலே அவரை சந்தித்த நாள் முதலாய், நான் ஒரு நங்கூரத்தோடு பிணைக்கப்பட்டுள்ளேன். அவர் என்னை மாற்றினார். அவர் சரியான பாதைக்கு திருப்பிவிட்டார்“ என்று பவுல் கூறினான். பவுலுங்கூட தேசத்திலேயே மிகப் பெரிதான ஒரு மதஸ்தாபனத்தைச் சார்ந்திருந்தான் என்பது உங்களுக்கு நினைவிருக்கும், ஆனால் அவனோ முற்றிலுமானவரோடு பிணைக்கப்பட்டான். 128 செவிகொடுங்கள்! ஒரு காரியத்தை கூற நான் விரும்புகிறேன். என்னை அவர் இரட்சித்ததினாலே ஒரு நோக்கம் அவருக்கு உண்டு. உங்களை இரட்சித்ததினாலே அவருக்கு ஒரு நோக்கம் உண்டு. ஆகவே, அவருடைய சித்தத்தின்படி, அந்நோக்கத்தை நிறைவேற்ற வேண்டுமென்று நான் உறுதியாக தீர்மானித்துள்ளேன். அந்த நோக்கத்தோடு எதையும் கூட்டவோ, அதிலிருந்து எதையும் எடுத்துப் போடவோ அல்ல. வெளி. 22:19-ஐ நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால் குறித்துக் கொள்ளுங்கள். அது சரிதான். “...ஒருவன்... எடுத்துப் போட்டால்...'' நான் சபையை விட்டு புறப்பட்டுப் போக இருக்கின்றேன், அதை நீங்கள் அறிவீர்கள். நான் தீர்மானமாயுள்ளேன். தேவனுடைய உதவியைக் கொண்டு, நான் உயிர்வாழுகிற வரையிலும், இந்த சுவிசேஷத்தோடு நிலைத்திருக்க உறுதியாக தீர்மானித்துள்ளேன். நினைவிருக்கட்டும், இங்கே கிருபையுள்ளது. கோடிக்கணக்கானோர் பாவத்தில் மரித்துக் கொண்டிருக்கையில், அவர் என்னை இரட்சித்தால். அவர் என்னை இரட்சிப்பதற்கு நான் எம்மாத்திரம்? என்னை இரட்சிப்பதிலே அவருக்கு ஒரு நோக்கம் உண்டாயிருந்தது. அந்நோக்கத்தை நிறைவேற்ற நான் உறுதியாக தீர்மானித்துள்ளேன். நான் எதைக் குறித்தும் கவலைப்படேன்; இப்பொழுது வெகுவிரைவில் அது என்னுடைய முடிவாய் இருக்கக் கூடும்; ஆனால் அது என்னவாயிருந்த போதிலும், நான் இன்னமும் நங்கூரமிடப்பட்டுள்ளேன். ஒருபோதும் அதை மாற்றினதில்லை. 129 திரு. ஐஸ்லர் அவர்கள், என்னிடம், “பில்லி, இந்த எல்லா துன்பங்களிலும் நீர் உமது தேவ பக்தியை இன்னமும் கைக் கொண்டிருக்கிறீரே?'' என்றார். நான் அவரிடம், ''இல்லை ஐயா, அது என்னைக் காத்துக் கொண்டது. அந்த நங்கூரமே என்னை பற்றிக் கொண்டது. பார்த்தீர்களா? நான் அதை காத்துக் கொள்ளவில்லை. அதுவே என்னைக் காத்துக் கொண்டது. அதுதான் சரியானது. அதை நிறைவேற்ற என்னிடம் ஒன்றுமில்லை. ஆனால் அது என்னைக் காத்துக் கொண்டது. அதுதான். என்னை இரட்சிப்பதிலே அவருக்கு ஒரு நோக்கம் உண்டாயிருந்தது. நான் அவரிடம் வந்தபொழுது, கோடிக்கணக்கானோர் பாவத்தில் இருந்தனர். ஆனால் அவரோ என்னை இரட்சித்தார். அவ்வாறு செய்வதிலே அவருக்கு ஒரு நோக்கம் உண்டு. அதைக் குறித்து பயப்படுவதற்கு கிறிஸ்துவின் மரணமானது ஒரு முற்றிலுமானதாக இருக்கிறது. 130 கிறிஸ்துவின் மரணமே எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வாயிருக்கிறது. மரணமாகிய அந்த விஷத்தேனீ அவரை கொட்டிய போது, அந்தக் கொடுக்கு அவரில் நங்கூரமிட்டது. தேனீயானது அது ஒரு பூச்சி வகையாகும், அதற்கு ஒரு கொடுக்கு உண்டு, கொட்டும் போது ஆழமாகப் பதித்துவிட்டால் அது வெளியே கொடுக்கை இழுக்கும் போது, அக்கொடுக்கு உள்ளே தங்கிவிடும். மரணத்திற்கும் ஒரு கொடுக்கு உண்டு. மரணத்திற்கு எப்போதும் ஒரு கொடுக்கு உண்டு. ஒரு நாளிலே, கல்வாரியில், அது ஏறிச் சென்றபோது, அப்பாறைகளின் முகட்டிலே இரத்தமானது பாறைகளின் மேல் சிதறித் தெளித்த போது, கல்வாரி மாமலை மேல் அது தூசியைப் போய் அடைந்த போது, கொல்கொதாவுக்குப் போகையிலே, அந்த நலிந்த சரீரத்தில் அவரது முதுகில் சிலுவையானது சுமந்து கொண்டு சென்ற பொழுது, அவரது இரத்தம்படிந்த கால் தடங்கள் அவரை சாட்டையினால் அடித்து அவரை காயப்படுத்துகையில் அவர் அங்கே ஏறிச் சென்றார். ஆனால் அவரோ தன்னில் முற்றிலுமானதைக் கொண்டிருந்தார். அவர் தாம் எங்கே நிற்கிறோம் என்பதை அறிந்திருந்தார். ஏனெனில் தாவீதின் மூலம் தேவனுடைய வார்த்தையானது, “என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்'' என்று கூறியுள்ளதை அவர் அறிந்திருந்தார். எழுபத்தியிரண்டு மணிநேரத்தில் அழிவானது வந்து ஏற்பட்டுவிடும் என்று அறிந்திருந்தார். ''...இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்'', என்றார். அவரிடம் ஒரு முற்றிலுமானது இருந்தது. அவர் பரியாசத்தோடு துப்பப்பட்டவராய் மலையின் மேல் ஏறிச் சென்றார். குடித்து வெறித்திருந்த போர்ச்சேவகர்களினால் காறி உமிழப்பட்டவராய் இருந்தார். அவர்கள் அவர் முகத்தின் மேல் துணியைப் போட்டு மூடினார்கள். முகத்தில் குத்தினார்கள்; தலையில் அடித்தார்கள். ''நீர் தான் தீர்க்கதரிசியாயிற்றே, உம்மை குத்தியது யார் என்று சொல்லும்'' என்றார்கள். அந்த மலையின் மேல் அவமானத்தோடும், நிந்தையோடும் ஏறிச் சென்றார். அவரைவிட்டு அவரது ஆடைகள் உறிந்து போடப்பட்டன. அவமானத்தை அவர் எண்ணாமல் ஜனங்களின் முன்னால் அந்தக் கோலத்தில் சிலுவையின் மேல் நிர்வாணமாய் தொங்கிக் கொண்டிருந்தார். அந்தக் கேடடைந்தவராய், எந்தத் தவறும் செய்யாத நிலையில் ரோம அரசின் மிகக் கொடூரமான தண்டனையை பெற்றவராய் அவர் மரித்துக் கொண்டிருந்தார். 131 மகதலேனா மரியாளைப் பற்றி ஒரு சிறு கதை வழங்குகிறது. அவள் ஓடிப் போய், “அவர் என்ன பிழை செய்தார்? உங்கள் பிணியாளிகளை சொஸ்தமாக்கினார், மரித்தோரை உயிரோடு எழுப்பினார், சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கினார். அவர் என்ன பிழை செய்தார்?'' என்றாளாம். அப்போது ஒரு ஆசாரியன் அவள் வாயில் பளீரென அடித்தானாம். அதினால் வாயிலிருந்து இரத்தம் ஓடி வந்தது. அப்பொழுது அவ்வாசாரியன் ''நீங்கள் இவளுக்கு செவி கொடுப்பீர்களா? அல்லது உங்களது பிரதான ஆசாரியன் கூறுவதைக் கேட்பீர்களா?'' என்று கேட்டானாம். ஓ, அது மத ஸ்தாபன உலகாயுள்ளது. எல்லாவற்றையும் விட அது சாபம் நிறைந்ததாயிருந்தது. அது அவ்வாறே உள்ளது. 132 அவர்கள் அவரை கொண்டு போனார்கள். ஆனால் அவர் இழுத்துக் கொண்டே சிலுவை சுமந்து மலையின் மேல் ஏறிச் செல்லுகையில்... பிசாசு எப்போதும் அதைக் குறித்து அவர் என்னவாயிருந்தோரோ அதை சந்தேகித்தே வந்தான். அவன், ''நீர் தேவனுடைய குமாரனேயானால் இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். நீர் அற்புதங்களைச் செய்ய முடியும் என்று கூறிக் கொள்ளுகிறீர். நீர் தேவனுடைய குமாரனேயானால் இந்தக் கல்லுகளை அப்பங்களாகும்படி செய்யும் என்றான். அதே பழைய பிசாசானவன் இன்றைக்கும் ஜீவிக்கிறான். அது சரிதான். ''நீர் தெய்வீக சுகமளிப்பவரானால், இதோ இங்கே இந்த வயதான ஜான், இந்த மூலையில் அமர்ந்திருக்கிறார், அவர் சப்பாணியாயிருக்கிறார், அவரை குணமாக்கும், என்று கூறுகிறான். இது அதே பழைய பிசாசுதான் என்பது உங்களுக்குத் தெரியாதா? இயேசு, “நான் செய்வதென்னவென்றால்...'' பாருங்கள். அவர் பெதஸ்தா குளத்தண்டையிலே சென்றார், அங்கே ஆயிரக் கணக்கானவர்கள், நொண்டியும், குருடும், சப்பாணியும், அங்கவீனருமாகக் கிடந்தனர். அவரோ நடக்க முடிந்த ஒரு மனிதனிடமே போனார். அவனால் நகர முடியும். அவனுக்கு ஒருவேளை உடல் பெலவீனமடைந்தவனாய் இருந்திருக்கக் கூடும். அது என்னவாயிருந்த போதிலும், அவனுக்கு அவ்வியாதி முப்பத்தியெட்டு ஆண்டுகளாக இருந்து வந்தது. அவன் கூறினான். ''நான் குளத்தண்டை வருகையில், வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான்'', என்றான். அவனால் நடக்க முடிந்தது. அங்கிருக்கிற மற்ற எல்லாரையும் விட்டுவிட்டு, இயேசு அவனண்டையில் தான் போய் அவனை குணமாக்கினார். ஏன்? அவன் அந்த நிலையில் இருந்தான் என்பது அவருக்குத் தெரியும் என்று அவர் கூறினார். அப்பொழுது அவர்கள் அவரிடம் கேட்டனர், அவரைக் கண்ட போது அவரை கேள்வி கேட்டனர் “...மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்...'' அங்கே அவருடைய முற்றிலுமானது அவருக்கு இருந்தது. அதுவே எப்போதும் முற்றிலுமானதாக இருக்கிறது. 133 பின்லாந்து தேசத்தில் அங்கே நின்று கொண்டிருக்கையில், அங்கே அச்சிறுவன் மரித்தவனாய் கிடக்கையில் நான் அவனைச் சுற்றி நடந்து சென்றேன். அவன் மரித்து அரைமணி நேரமாகிவிட்டது. அதைப் பற்றி நீங்கள் புத்தகத்தில் வாசித்திருக்கிறீர்கள். நான் அவ்விடத்தை விட்டு கடந்து போக ஆரம்பித்தேன். ஏதோ ஒன்று என் மேல் தன் கரங்களை வைத்தது. நான் திரும்பினேன். ''அது என்ன? என்று எனக்குள் சிந்தித்தேன். எனது வேதாகமத்தின் கடைசியில் உள்ள வெள்ளைத் தாளில், ''இந்தக் காரியமானது வந்து சம்பவிக்கப் போகிறது. என்னவென்றால், ஒன்பது வயதுடைய ஒரு சிறுவன் மோட்டார் வாகன விபத்தில் கொல்லப்படுவான். அந்த இடத்தில் ஆண்டு முழுவதும் பசுமையாகவே இருக்கும்; அந்த மோட்டார் வாகனமானது சாலைக்கு அப்பால் சேதமடைந்து இருக்கும். அச்சிறுவன் ஸ்டாக்கிங்ஸ் அணிந்திருப்பான், கிராப் செய்து முடி வெட்டியிருப்பான்; அவனது சிறிய கண்கள் பின்னாக திரும்பியிருக்கும், அவனது சரீரத்தின் எலும்புகள் நொறுங்கிப் போயிருக்கும், என்று எழுதப்பட்டிருந்தது. நான் அவனைக் கவனித்தேன். “ஓ தேவனே'' என்று எண்ணினேன். “யாவரும் அமைதியாக எழுந்து நில்லுங்கள்'' என்றேன். அங்கே அந்நகர மேயர் கூட நின்று கொண்டிருந்தார். நான் கூறினேன். இந்தச் சிறுவன் இப்பொழுதிலிருந்து இன்னும் இரண்டு நிமிடங்களுக்குள் உயிரோடு எழுந்து தன் கால் ஊன்றி நிற்காவிடில், நான் ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாக இருப்பேன். என்னை ஃபின்லாந்து தேசத்தை விட்டு துரத்திவிடுங்கள்'' என்றேன். நிச்சயமாகவே ஆனால் அவன் அப்பொழுது எழுந்து நின்றுவிட்டான் என்றால், கிறிஸ்துவுக்கு உங்கள் ஜீவியங்கள் கடன்பட்டுள்ளன என்று கூறினேன். அவர்கள் யாவரும் அமைதியாக நின்றார்கள். நான், “பரம பிதாவே, இக்கடலுக்கு அப்பால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தப் பையன் இங்கே இவ்வாறு மரித்துக் கிடப்பான் என்பதைக் கூறினீர்” என்றேன். 134 அங்கே சகோதரன் மூர் அவர்களும், சகோதரன் லிண்ட்சே அவர்களும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். எங்கும் யாவரும், தேசமெங்கிலும் ஆயிரக்கணக்கான வேதாகமங்களில் இந்த விஷயத்தை எழுதி வைத்திருந்தனர். அது என்னவாயிருந்தது? ஒரு முற்றிலுமானதாகும் அது. பிதாவானவர் என்ன சம்பவிக்கும் என்பதை முன்கூட்டியே காண்பித்திருந்தார். அங்கே முற்றிலுமானவர் இருந்தபடியால், அங்கே நின்று கொண்டிருக்கையில் பயமேதும் இருக்கவில்லை. நிச்சயம் அவர் அவனை எழுப்புவார் என்று இருந்தது. அந்த ஃபின்லாந்து தேசத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் இரவில் கூட்டங்களுக்கு வந்தனர். உள்ளே உட்கார இடம் போதவில்லை. வெளியே நின்றவர்களை உள்ளே உட்கார வைப்பதற்காக இருந்தவர்கள் வெளியே போய் நின்று கொண்டனர். அவன் அங்கே நின்றிருந்தான். ஜனங்கள் யாவரும் என்னை நேசித்தார்கள். வியாதிகள் குணமாகுதலை அவர்கள் கண்டனர். ஆனால் இங்கே இச்சிறுவன் மரித்தவனாய் கிடந்தான். எது முற்றிலுமானதாக இருந்தது? அத்தரிசனம். ''பிதாவானவர் செய்யக் கூறுவதெதுவோ அதையே நான் செய்கிறேன்... என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்த கிரியைகளை தானும் செய்வான்“ என்றார். அங்கே தான் உங்களுடைய முற்றிலுமானது இருக்கிறது. நான், “மரணமே, இனிமேலும் நீ இவனை பற்றிக் கொண்டிருக்க முடியாது. தேவன் பேசியிருக்கிறார், மீண்டும் உயிரடைய. மரணமே அவனை விட்டு நீங்கிப் போ” என்று கூறினேன். அச்சிறுவன் எழுந்து நின்று சுற்றிலும் பார்த்தான். மக்கள் மயக்கமடையவும் செய்தனர். 135 அந்த காரியமானது அந்நகர மேயரால் எழுதப்பட்டு, நோட்டரி பப்ளிக்கால் சான்றளிக்கப்பட்டுள்ளது. அது சரிதான். அது என்னவாயிருக்கிறது? ஒரு முற்றிலுமானது. இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். நாயீனூர் ஸ்திரீ மரித்த தன் மகனை கொண்டு செல்லுகையில் இயேசு பாடையைத் தொட்டு அவனை உயிரோடெழுப்பினாரே, அதே தேவனாக அவர் இன்றும் இருக்கிறார். அந்நாட்களில் யாராவது மரித்துப் போனால் உடனே அவர்கள் அந்த நபரை கல்லறையில் அடக்கம் பண்ணினார்கள். அவர்களை அப்படியே கிடத்தி வைத்திருக்கவில்லை. அவர்கள் அந்த நபரை கல்லறையில் இட்டார்கள். நேற்றும், இன்றும், என்றும் மாறாத அதே இயேசுதான் இருக்கிறார். ஆம். 136 மெக்சிகோவில் நடந்ததைப் பாருங்கள். அங்கே அச்சிறு குழந்தை (இங்கேயிருக்கிற சிலர் அங்கேயிருந்தீர்கள்) காலையில் ஒன்பது மணிக்கு மரித்துப் போய்விட்டதாக மருத்துவர் ஒரு அறிக்கையை கையொப்பமிட்டு அளித்திருந்தார். அதைப் பற்றி கிறிஸ்டியன் பிசினஸ்மென் என்ற பத்திரிகையிலும் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் இக்கூட்டத்திற்கோ அக்குழந்தை இரவு பத்து மணிக்கு கொண்டு வரப்பட்டது. அவ்வெளிய பெண்மணி சற்றும் ஆறுதலடையவில்லை. அங்கே நின்றுகொண்டிருந்த என் மகன் பில்லி அவளை பின்னால் நிறுத்த முயன்று கொண்டிருந்தான். அங்கே இருநூறு வாயிற்காப்போர்கள் நின்று கொண்டிருந்தார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்களையும் தாண்டிக் கொண்டு உள்ளே வந்துவிட்டாள். அதற்கு முந்தின இரவுதான் ஒரு குருடன் பார்வையடைந்தான். அதை அவளும் அறிந்திருந்தாள். அவள் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவளாயிருந்தாள். ஆனால் முடிவிலே, நான், “போங்கள், சகோதரன் மூர் அவர்களே, அவளுக்காக ஜெபிக்கவும், ஏனெனில் அக்குழந்தை... அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அன்று அதிகாலையிலிருந்து மக்கள் அங்கே அந்த மாட்டுச் சண்டை நடக்கும் மைதானத்தில் நின்று கொண்டிருந்தார்கள். அங்கே மூன்று இரவுகள் கூட்டங்கள் நடைபெற்றன. நான் அந்த இடத்திற்குப் போய் அடைவதற்காக கயிற்றின் மூலம் கீழே இறக்கிவிட்டார்கள். நான் அங்கே நின்று கொண்டு, பிரசங்கித்துக் கொண்டிருக்கையில் நான் தரிசனம் பார்த்தேன். அதில் ஒரு சிறு குழந்தை, எனக்கு முன்னால் இருந்தது, அது ஒரு மெக்சிகோ தேசத்துக் குழந்தை; அதற்கு இன்னும் பல் முளைக்கவில்லை, அங்கே உட்கார்ந்து கொண்டு என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது, சரியாக எனக்கு நேர் முன்பாக அது இருந்தது. இவ்வாறு கண்டேன். ஒரு நிமிடம் பொறுங்கள், சகோதரன் மூர் அவர்களே, அவளை இங்கே கொண்டு வாருங்கள்'' என்று நான் கூறினேன். ஓ முற்றிலுமானவர். வாயிற்காப்போர்கள், பாதையை விலக்கிக் கொடுத்தனர். இதோ அவள் இங்கே வந்து சேர்ந்தாள்; அவள் தாழவிழுந்து, ''தந்தையே தந்தையே“ என்றாள். “எழுந்து நில்'' என்றேன் நான். சகோதரன் எஸ்பினோசா ஸ்பானிய பாஷையில் அவளிடம் “எழுந்து நில்” என்று கூறினார். அவள் எழுந்து நின்றாள். “பரம பிதாவே, நான் இந்த மழையில் நின்று கொண்டிருக்கிறேன்'' என்று கூறினேன். 137 இருபத்தி மூன்று வயதுடைய அந்த அழகான இளம் பெண் தன் தலைகேசம் தன் முகத்தில் தொங்கிக் கொண்டிருக்க மேலே நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள். எதிர்பார்ப்பு அவளது கண்களிலே காணப்பட்டது. முந்தின இரவில் நாற்பது ஆண்டுக் காலமாக முழுவதும் குருடனாயிருந்த அம்மனிதன் மேடையின் மேல் வந்து தன் குருட்டுத்தனம் நீங்கிப் பார்வையடைந்ததை அவள் கண்டிருந்தாள். குருடான கண்களை தேவன் திறக்கக் கூடுமானால், தன் குழந்தையையும் தேவன் உயிரோடெழுப்ப முடியும் என்று அவள் நம்பினாள். ஒரு போர்வைக்குள்ளாக அக்குழந்தையானது விரைத்துப் போன நிலையில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. அப்பெண் அன்று காலையும் மதியமும் கூட அங்கேதான் நின்று கொண்டிருந்தாள். அப்போது இரவு பதினொரு மணி ஆகிவிட்டது. அவள் தன் குழந்தையை கையில் ஏந்திக் கொண்டிருந்தாள். (இவ்விஷயங்கள் யாவும் கிறிஸ்ட்டியன் பிசினஸ்மேன் என்ற பத்திரிக்கையில் கட்டுரையாக வெளியாகியுள்ளது). நான் இவ்வாறு ஜெபித்தேன்: “பரம தந்தையே, இதன் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியாது. நான் உம்முடைய ஊழியக்காரன் மாத்திரமே. ஆனால் அக்குழந்தை உயிருடன் நின்று கொண்டிருந்ததை நான் கண்டேன். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே எனது கரங்களை அதன் மேல் வைக்கிறேன்” என்றேன். “'வா'' என்று அது கத்த ஆரம்பித்தது. தாயார் குழந்தையைப் பற்றிக் கொண்டு, அலற ஆரம்பித்தாள். மக்களும் கத்த ஆரம்பித்தார்கள். பெண்கள் மயக்கமடைந்தனர். நான் கூறினேன்: நீங்கள் குழந்தையையும், தாயாரையும் அந்த மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு, கூடவே ஒரு செய்தியாளனையும் கூட்டிக் கொண்டு போங்கள். அவரிடம் ஒன்று சொல்ல வேண்டும். அக்குழந்தை நிமோனியா ஜுரத்தினால் காலையில் ஒன்பது மணிக்கு மரித்துப் போயிற்று என்பதை எழுதி அவரை கையொப்பமிடச் செய்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன். மருத்துவரும் தன் கையொப்பமிட்டு அவ்வறிக்கையை அளித்துள்ளார். அந்த டாக்டருடைய அலுவலகத்தில் காலையிலேயே அக்குழந்தை மரித்துப் போயிற்று என்று அறிவித்துவிட்டிருந்தார்கள். தாயார் அக்குழந்தையை சுற்றி எடுத்துக் கொண்டு நாள் முழுவதும் அங்கே காத்திருந்தாள். அது என்னவாயிருந்தது? ஒரு முற்றிலுமானதாகும் அது. அது என்னவாயிருந்தது? தேவன் குருடனுடைய கண்களை திறக்கக் கூடுமானால் மரித்தவரையும் எழுப்ப தேவனால் கூடும் என்று விசுவாசித்தாள். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். நான் தரிசனத்தில் காணும் வரையிலும் நான் நிச்சயமுடையவனாயிருக்கவில்லை. நான் அறிந்திருக்கவில்லை. நான் குழந்தையை உயிரோடு கண்டபோது, அதுவே முற்றிலுமானதாக இருந்தது. அது முற்றிலும் சரியாக இருக்கிறது. மரணமானது தன்னால் காயம்பட்டவரை விடுவித்து விடத்தான் வேண்டும். 138 தேவனுடைய குமாரன் இங்கே போனார். மரணத் தேனீயானது அவரைச் சுற்றி ரீங்காரமிட ஆரம்பித்தது. “ஆ, ஆ, அவர் எங்ஙனம் ஒரு தீர்க்கதரியாக இருக்க முடியும்? தன் முகத்தில் துப்பும்படி அவர் எங்ஙனம் அனுமதிக்க முடியும்? அவர் எங்ஙனம் அங்கே அவர்கள் தன்னை பரிகசிக்கவும், அதற்கு அவர் பதிலடி கொடுக்காமல் இருக்கவும் முடியும்? அது இம்மானுவேல் அல்ல. அது வெறும் ஒரு சாதாரண மனிதன் தான். மது அருந்திய போர்ச் சேவகர்களிடம் இருந்து வரும் எச்சிலை அவர் மேல் பாருங்கள். அவரது முகம் இரத்தம் சொட்ட இருப்பதைப் பாருங்கள்'' என்று கூறியிருக்கக் கூடும். பிசாசு சொன்னான்: ''நான் அவரைப் பிடித்துவிடுவேன், பிடித்துவிடுவேன்“ என்றான். இங்கே அவன் ஒரு விஷத் தேனீயைப்போல், மரணக் கொடுக்கையுடையவனாய், அவரைச் சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டு வருகிறான். ஆனால் சகோதரனே, அந்த மரணத் தேனீ, அந்த இம்மானுவேலுக்குள்ளாக தனது கொடுக்கை ஆழமாக பதித்த பொழுதோ, கொட்டிவிட்டு கொடுக்கை வெளியே இழுத்த பொழுது, கொடுக்கு உள்ளே மாட்டிக் கொண்டுவிட்டது, அது மரணமாகிய தனது கொடுக்கை இழந்தேவிட்டது. “மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்'' என்று பவுல் பின்னால் மரணத்தின் முகத்தைப் பார்த்ததும் இவ்வாறு எழுதியதில் ஆச்சரியமில்லை. மரணத்திற்கு பயந்த ஒவ்வொரு மனிதனுக்கும், கிறிஸ்துவின் மரணமானது முற்றிலுமானதாக இருக்கிறது. அவரது புத்தகத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் எனது இருதயம் “ஆமென்” என்று கூறுகிறது. இப்பொழுது நிச்சயமாகவே நான் முடிக்கிறேன். இதை இத்தோடு நான் நிறுத்திக் கொண்டாக வேண்டும். 139 எனவேதான், பரிசுத்த ஆவியானவர் என்னை வழி நடத்துகிற எனது திசை காட்டும் கருவியாக இருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன். இந்த வார்த்தையானது சத்தியமாயிருக்கிறது என்பதை நான் அறிந்து கொள்ளும்படி செய்கிறவரும் அவரே. அவரே எனது முற்றிலுமானவராக இருக்கிறார். அவரே எனது சூரிய பிரகாசம். அவரே எனது ஜீவன்; அவரே எனது ஆத்தும நங்கூரமாயிருக்கிறார். தொல்லைகள் என்னை சூழும்போது அவரே எனது வடதிசை நட்சத்திரமாயிருக்கிறார். நான் காணாமற்போகும் போது, பரிசுத்த ஆவியானவர் எனது திசை காட்டும் கருவியாக இருந்து உரிய ஸ்தலத்திற்கு திரும்பி வரும்படி என்னை வழி நடத்துகிறவராயிருக்கிறார். மத ஸ்தாபனங்கள் ஏனைய நட்சத்திரங்களைப் போல் இருக்கிறார்கள். அவர்கள் உலகத்தோடு சேர்ந்து கொண்டு இடம் மாறுகிறார்கள். ஆனால் வட திசை நட்சத்திரமோ அப்படியல்ல. உலகமானது அது விரும்புகிற இடத்திற்கு இடம் பெயர்ந்திட முடியும். ஆனால் அதுவோ நிலைத்திருக்கிறது. ஓ, வடதிசை நட்சத்திரமானது நிலையாக நங்கூரமிடப்பட்டுள்ளது. ஏனைய நட்சத்திரங்கள் இடம் பெயர்கின்றன. நீங்கள் அவைகளை இங்கும் அங்குமாக எங்கும் நகரக் காணலாம். அதேவிதமாகத்தான் மத ஸ்தாபன சபைகளின் நிலையும் உள்ளது. ஆனால் கிறிஸ்துவோ முற்றிலுமானவராக இருக்கிறார். உங்களுடைய நம்பிக்கையை வைக்கத் தக்கதானவராக அவரே இருக்கிறார். மத ஸ்தாபனங்களெல்லாம் உங்களை திருத்தி முறுக்கி வைக்கும் பொழுது, நீங்கள் அப்போது வட திசை நட்சத்திரத்தை உற்று நோக்குங்கள். பரிசுத்த ஆவியானவரே உங்களது திசை காட்டும் கருவியாக இருக்கிறார். 140 அவர் எப்போதும் தமது வார்த்தைக்கு உண்மையுள்ளவராய் இருக்கிறார். இந்த நவீன காலத்தில் இப்படிப்பட்டதான காரியம் நடக்க இயலாதவை என்று என்னிடம் அவர்கள் கூறியபொழுது, தேவன் ஒருவர் இல்லாதிருந்தால், அப்பொழுது, புசித்து, குடித்து, மகிழ்ச்சியாயிருக்கலாம். தேவன் ஒருவர் இருந்தால், நாம் அவரை சேவிப்போமாக என்பதை நான் அறிந்திருந்தேன். அவர் இந்தப் பூமியில் இருந்த போது மரித்தோரை எழுப்புவது உட்பட செய்த அனைத்து செயல்களையும் அவர் இப்போது செய்வதை காண நான் இந்நாளில் உயிர் வாழ்ந்துள்ளேன். ஆதாரப் பூர்வமான தஸ்தா வேஜுகளின் மூலம் அது சத்தியம் என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆம் ஐயா, அவரே எனது முற்றிலுமானவராக இருக்கிறார். இப்பொழுது அவரை உங்களது முற்றிலுமானவராக ஆக்கிக் கொள்ளுங்கள். எனது துன்ப வேளைகளிலே நான் அவரைப் பற்றிக் கொண்டபோது அவர் எப்போதும் எனது முற்றிலுமானவராக இருந்திருக்கிறார். இப்பொழுது கவனியுங்கள். தேவனுடைய கிருபையினாலே, (இப்பொழுது நான் இத்தோடு முடித்துவிடுவேனாக. நேரமாகிவிட்டது. நல்லது இங்கே பாருங்கள். நான் இப்போது பதினொரு மணி என்று நினைத்தேன். இப்போது நேரம் 12:30 ஆகிறது). 141 சிநேகிதரே, நாள் முழுவதும், இராமுழுவதும், வருடம் முழுவதும், நித்திய காலமெல்லாம் அதைப் பற்றி பேசி முடியாது. அதை உருவகப்படுத்திட முடியும் என்று முயற்சிக்காதீர்கள். உங்களால் முடியாது. அதைத் தீர்க்கதரிசனமாக கண்டுபிடிக்க வழியே இல்லை. நீங்கள் ஓ, “சகோதரன். பிரன்ஹாமே'' என்று கூறுவீர்கள். எனக்குத் தெரியாது. நான் அப்படியே விசுவாசிக்கிறேன். நான் அது என்ன என்று கண்டுபிடிக்க முயலுவதை விட்டுவிட்டேன். நான் அப்படியே விசுவாசிக்கிறேன். அவ்வளவுதான். பார்த்தீர்களா? “...ஓடுகிறவனாலும் அல்ல, விரும்புகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாகும்”. கிரியைகளினாலல்ல, அது கிருபையினால் உண்டாயிருக்கிறது. பார்த்தீர்களா? நான் அதை அப்படியே விசுவாசிக்க மட்டும் செய்கிறேன். தேவனுடைய மீதமுள்ளவற்றை செய்வது அவரைச் சார்ந்ததாகும். அப்படியே விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள். அதன் பேரில் கிரியை செய்யுங்கள். பின்வரும் இப்பாடல் மிகவும் பிரபலமானதாகும். இங்கே அல்லது வேறெங்கோ இதை அவர்கள் இசைக்க நான் கேட்டிருந்தேன். ஓ, தேவனுடைய நேசம் முழு நிறைவானதும் சுத்தமுமானது அது புத்திக்கெட்டாததும், பலமுமானது அது என்றும் நிலைத்திருக்கும் பரிசுத்தரும், தூதரும் பாடும் பாட்டு அது. 142 கணிதத்தில் தேர்ந்த ஒரு மனிதன் அதை ஆராய்ந்து, தனது கல்வித்திறனால் அதைக் காண்பிக்க முயன்றால், அது உங்களை பைத்தியம் பிடிக்க வைத்துவிடும். நீங்கள் அதைச் செய்ய முடியாது. அவ்வாறு செய்ய முயல வேண்டாம். அதை நீங்கள் ஆராய்ச்சி செய்ய முயல வேண்டாம். தேவன் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவர். நீங்கள் தேவனை ஆராய்ந்து கண்டு பிடிக்க வேண்டாம். நீங்கள் தேவனை விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள். அதுவே இரகசியம். அதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்குச் சொல்ல என்னால் இயலாது. அதை எவ்வாறு செய்வது என்று கூற எனக்கு இயலாது. நான் அதை விசுவாசிக்க மட்டுமே செய்கிறேன் என்று மாத்திரம் எனக்குத் தெரியும். அவ்வளவுதான். நீங்கள் ஒரு சிறு பிள்ளையிடம் ஒரு காரியத்தைக் குறித்து வாக்குக் கொடுத்தீர்களென்றால், அது அதை அப்படியே விசுவாசிக்கும். நீங்கள் வார்த்தையைக் காத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தேவனுடைய பிள்ளை. அவர் தமது வார்த்தையைக் காத்துக் கொள்கிறார். எளிமையாக அதை விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள். அசைக்கப்பட வேண்டாம். அங்கேயே நிலைத்திருங்கள். ஒரு தடவை தேவன் அதைச் செய்திருக்கிறார். மீண்டும் அவர் அதைச் செய்து தான் ஆகவேண்டும். அவர் செய்யாவிடில், தான் எதற்காக அதைச் செய்யவில்லை என்பதை உங்களுக்குக் கூறுவார். அது சரியானது. ஆகவே இப்பொழுது, அதனோடு நிலைத்திருங்கள். 143 அப்பாடலின் ஒரு வரியானது, நீங்கள் அறிவீர்கள். நேற்று இரவிலே ஞானஸ்நானம் பெற்ற அச்சகோதரன் அப்பாடலை பாடுகிறார். ஓ தேவனுடைய அன்பு என்ற அப்பாடல். இப்பாடலின் வரிகள் ஒரு மன நோயாளிகள் உள்ள மருத்துவமனை விடுதியில் சுவற்றிலே எழுப்பப்பட்டிருந்தது என்று என்னிடம் கூறினார்கள். அது பின்வருமாறு: ஜலமெல்லாம் மையானாலும், ஆகாயம் தாளானாலும், மரமெல்லாம் எழுதுகோலானாலும் மனிதரெல்லாம் வேத எழுத்தாளரானாலும் தேவ அன்பைப் பாட இவை போதாது ஏனெனில், ஜலமெல்லாம் எழுதித் தீர போதாது ஆகாயம் தளாகினும் எழுத இடம் போதாது. 144 அதைப் பற்றி சிந்தியுங்கள். பூமியின் நான்கில் மூன்று பங்கு நீரால் ஆகியது. காற்றிலுள்ள ஜலவாயு (ஹைட்ரஜன்), பிராண வாயு (ஆக்ஸிஜன்) இவைகளையும், ஈரப்பசை முதலியவற்றையும் பாருங்கள். ஈரப்பசையாவும் எழுதும் மையமாக மாறினாலும், கோடானகோடி அளவுள்ள வைக்கோலெல்லாம் எழுதும் தாளாக மாறினாலும், இப்புவியிலுள்ள மனிதர் ஒவ்வொருவரும் தன் தொழிலால் வேத எழுத்தராக இருக்கிறார் என்று வைத்துக் கொண்டால், கோடான கோடிக்கணக்கான மனுஷரைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், தேவனுடைய அன்பை விவரிப்பதற்கு, எழுதுகோல்களை சமுத்திரத்தில் தோய்த்து தோய்த்து எழுதிட சமுத்திரமே வற்றிப் போகும், நித்தியத்திலிருந்து நித்தியம் வரையிலும் விரித்து வைக்கப்படும் வானம் என்னும் ஆகாயம் எழுதப் போதாது. அதை ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டாம். உங்களால் இயலாது. அதை ஆராய்ந்து கண்டுபிடிக்க நீங்கள் முயன்றால், உங்கள் சிந்தையையே இழப்பீர்கள். விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். அவரை உங்களது முற்றிலுமானவராகக் கொள்ளுங்கள். அங்கேயே நிலைத்திருங்கள். அதில் கிடைக்கிற இனிமையான சமாதானமும், அனுபவமும் நீங்கள் ஒருபோதும் மறக்கவே மாட்டீர்கள். அதில் நங்கூரமிட்டுக் கொள்ளுங்கள். அப்பள்ளத்தாக்குக்குள்ளாக அந்த நங்கூரம் உங்களை பற்றிக் கொண்டு காத்துக் கொள்ளும். நாம் தலைகளை வணங்குவோமாக. 145 நீர் எத்தனை மகத்துவமானவர்! நீர் எத்தனை மகத்துவமுள்ளவர். உங்களில் எத்தனை பேர்கள் இக்காலை வேளையில் தலைகளை வணங்கினவராக இருக்கிறீர்கள். இப்பொழுது புத்தாண்டு நெருங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒவ்வொருவரும் தேவ பக்தியுள்ளவராயிருக்கிறீர்கள். அது நல்லதுதான். நான் உங்கள் ஒவ்வொருவரையும் அதற்காக மெச்சுகிறேன். தேவனும் அவ்வாறு செய்கிறார் என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். ஆனால் உண்மையாகவே உங்களுக்கு அந்த முற்றிலுமானதின் அனுபவத்தை பெற்றிருக்கவில்லை. அவ்வனுபவம் உங்களுக்கு ஏற்பட்டால், நீங்கள் பாவனையான விசுவாசம் கொண்டிருக்கமாட்டீர்கள். நீங்கள் வெறும் கற்பனை செய்யமாட்டீர்கள். ஆனால் திரும்பப் பேசுகிறதாக அது இருக்கும். அப்போது உங்களுடைய ஜீவியம் அவ்வேளையிலிருந்து மாற்றமடைந்து, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வாக்குத்தத்தமும் ''ஆமென்'' என்பதோடு வலிமை பெறும். அப்போது நீங்கள் அந்த முற்றிலுமானதைப் பற்றிக் கொண்டிருப்பீர்கள். ஏனெனில், அவர் கூறியது உங்களுக்கு நினைவிலிருக்கும்; என்னவெனில், “வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை'' என்பதே. ஒவ்வொரு தேவ வார்த்தைக்கும் ஆமென் என்று சொல்லக் கூடிய இடத்திற்கு நீங்கள் இன்னும் வரவில்லை. ஏனெனில் அது உங்களுடைய மதக்கோட்பாடுகளுக்கு எதிரானதாக இருக்கிறது, உங்களது மத ஸ்தாபனத்திற்கு எதிராயுள்ளது. ஆனால் நீங்களோ மோசேயைப்போல் அந்த இடத்திற்கு வர விரும்புகிறீர்கள். ஏனையோரைப் போல். அந்த முற்றிலுமானதைப் பற்றிக் கொள்ளுகிற வரையிலும் அவர்களால் அதை அடைய இயலவில்லை. இன்று காலையில் நீங்கள் அதை பெற்றிட விரும்புகிறீர்கள். எனவே அதற்காக, தேவனிடத்திற்கு உங்கள் கரங்களை உயர்த்திக் காண்பிக்கிறதின் மூலம் அதைத் தெரியப்படுத்துவீர்களாக. நல்லது ஐயா. இக்கட்டிடம் முழுவதும். 146 கிருபையுள்ள பிதாவே, ஒரு சமயத்தில் நாங்கள் பிரிய வேண்டியுள்ளது என்பதை நான் அறிவேன். இவ்வுலகை விட்டு நாங்கள் கடந்து செல்ல வேண்டிய ஒரு வேளை உண்டு. அது எப்பொழுது என்பது எங்களுக்குத் தெரியாது. அது ஒன்றும் பெரிய வித்தியாசத்தை உண்டு பண்ணி விடப்போகிறதில்லை. எங்களது வேளை முடிவடைந்துவிட்டால், அப்போது நாங்கள் வந்திட விரும்புகிறோம். இங்கே நாங்கள் தங்கியிருக்க வேண்டியதின் நோக்கமெல்லாம் உம்மைச் சேவிப்பதேயாகும். ஒரு நாள் பவுல், சபையிலே நாசத்தையுண்டாக்கும்படி தமஸ்குவுக்கு போகிற வழியிலே போகையில், அவன் அழிவின் பாதையில் இருந்து கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு ஒளியானது அவனை குருடாக்கியது. ஓ தேவனே, அவ்வொளி அவனை பின்தொடர்ந்தது, ஏனெனில் அது கிறிஸ்துவாயிருந்தார். அந்த முற்றிலுமானதில் அவன் தன்னை நங்கூரமிட்டுக் கொண்டான், அதினால், அவன் மரணத்தின் முகத்தைக் கூடப் பார்த்து, ''இயேசு கிறிஸ்துவினால் நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்“ என்று கூறி நகைத்தான். நீர் அவ்வப்போஸ்தலனுக்கு முழுவதுமான ஒரு முற்றிலுமானவராக ஆனீர். அவனுக்கு ஒவ்வொரு வாக்கியத்திற்கும் நீர் ஆமென் ஆனீர். அவனது ஜீவியத்தின் நட்சத்திரமாக நீர் ஆனீர். திசைகாட்டும் நிலையான ஆதாரமாக நீர் ஆனீர். கொந்தளிப்பின் வழியாக அவனை நடத்தக்கூடிய திசை காட்டும் கருவியாக நீர் ஆனீர். நீரே வெளிப்பாடாயிருந்தீர். நீரே தரிசனமாக இருந்தீர்; நீரே நம்பிக்கைகளாயிருந்தீர்; நீரே இரட்சிப்பு. மரணத்தின் வேளையிலுங்கூட, தான் அதை அடையப் போகிறோம் என்ற கட்டத்திலுங் கூட அவனுக்கு இன்னமும் நீரே முற்றிலுமானவராக இருந்தீர். 147 நீர் தானியேலின் முற்றிலுமானவராக இருந்தீர். சகல தீர்க்கதரிசிகளின் முற்றிலுமானவராக நீர் இருந்தீர். மத ஸ்தாபன வேறுபாட்டின் மத்தியிலே, அவர்களின் துன்பத்தின் நாட்களிலே, பரிசேயர், சதுசேயர் மத்தியிலே, உம்மை தங்களது முற்றிலுமானவராகக் கொண்டிருந்த மனிதர் இருக்கத்தான் செய்தனர். இன்றைக்கு, கர்த்தாவே, மனிதரும், ஸ்திரீகளும் இரக்கத்தோடும் அன்போடும் உள்ளவர்களாய், ஒரு உண்மையான அனுபவத்தினால் தேவனை அறிந்து கொள்வதற்காகவும், ஒரு முற்றிலுமானதைப் பெற்றுக் கொள்வோம் என்ற நிச்சயத்தை அடைவதற்காகவும் தங்கள் இதயங்களில் மிகுந்த தாகத்தோடு இருக்கிறார்கள். அவர்கள் ஆண்டவரே இதற்காக சபையைச் சார்ந்து கொள்ள வேண்டுமென இருந்தார்கள். நான் அவர்களுக்கு, சபையை அவர்கள் சேர்ந்து கொள்ள முடியும் என்றும், அவைகள் மெத்தடிஸ்ட், பாப்டிஸ்டு, கத்தோலிக்க சபை, பெந்தெகொஸ்தே என்ற விடுதிகள் தாம் என்றும் உண்மையாக கூறியிருக்கிறேன். வேறுபாடாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. நீர் என் இதயத்தை அறிந்திருக்கிறீர். நீங்கள் சபையில் பிறக்க வேண்டும், அதுதானே இரகசியமானதாயிருக்கிற கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறது என்றும், அவரது சரீரத்தின் அவயவங்களாக ஆவியின் வரங்களைப் பெற்று, அவரது மகத்தான சரீரத்தை கிரியையோடும், வல்லமையோடும் அசையச் செய்யும்படி ஆகவேண்டும் என்றும் நான் அவர்களுக்கு கூறியிருக்கிறேன். 148 தேவனே, இக்காலை வேளையிலே உயர்த்தப்பட்ட கரங்கள் இதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. கர்த்தாவே, என்னை கையில் எடுத்து உருக்கி, உருவாக்கிடும். கிறிஸ்துவோடு பிணைக்கப்பட்டு, அந்த முற்றிலுமானதைத் தவிர வேறு எதையும் பற்றி சிந்திக்காத அளவுக்கு வாழ்க்கையில் என் நிலையை அப்படிப்பட்ட முற்றிலுமானதாக ஆக்கியருளும். கர்த்தாவே அதை அளித்தருளும். அவர்களை ஆசீர்வதியும். பிணியாளிகளையும் பெலவீனரையும் சொஸ்தமாக்கியருளும். காணாமற்போனவர்களை இரட்சியும். இப்பொழுதும், கர்த்தாவே, ஜனங்களை பீடத்தண்டையில் அழைப்பது ஒரு வழக்கமாக இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் அது எங்களுக்கு ஒரு பாரம்பரியமாக ஆகிவிட்டது. இன்று காலையிலே, பீடங்கள் நிறைந்திருக்கிறது; குழந்தைகள் மற்றுமுள்ளோரும் உள்ளனர். ஆனால், கர்த்தாவே, எப்படியாவது அவர்களோடு நீர் பேசும். அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தியுள்ளனர். ஒரு தீர்மானத்தை எடுத்துக்காட்டுவதாக அவர்கள் இதைச் செய்துள்ளனர். அவர்களுக்கு உண்மையான ஒன்று தேவைப்படுகிறது. அவர்களின் சார்பாக நான் இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறேன். ஒவ்வொருவருக்கும் அதை அளித்தருளும் கர்த்தாவே. இப்பொழுதும் எங்களோடிரும், எங்களுடைய பாவங்களை மன்னித்தருளும், எங்களை வியாதியினின்று குணமாக்கியருளும். எங்களுக்குத் தேவையான விடுதலையைத் தாரும். 149 மேலும் கர்த்தாவே, எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் அந்த முற்றிலுமானவரிடத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை இன்றைக்கு நாங்கள் மறந்திட வேண்டாம். அவரே எங்களுடைய வடதிசை நட்சத்திரமாக இருக்கிறார்; கல்வாரியண்டைக்கும், கிறிஸ்துவண்டைக்கும் வழி நடத்துகிறவராயிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தைகளை எடுத்து, வியாதியஸ்தரை சுகமாக்குவதின் மூலமும், எங்களுக்குத் தரிசனங்களை காண்பிப்பதின் மூலம், மரித்தோரை எழுப்புவதின் மூலமும், அவர் வாக்குரைத்தவைகளை அப்படியே செய்து நிறைவேற்றுவதின் மூலம், எழுத்தின்படி பிரத்தியட்சமாக்கித் தருகிறார். இன்று காலையில் இங்கே குழுமியிருக்கிற இச்சபை, கிறிஸ்துவின் சரீரத்தின் ஒரு பாகமாயிருக்கிற இந்த ஜனங்கள், ''நீங்கள் உலகத்துக்கு உப்பாயிருக்கிறீர்கள்“ என்று கூறி இயேசு வாழச் சொன்ன விதமாக வாழச் செய்தருளும். அவர்கள் தங்களுடைய சமுதாயம் தாகமடையும்படி உப்பேறிப் போயிருக்கச் செய்தருளும். உப்பானது தாகத்தையுண்டு பண்ணும். உப்பை தொடர்பு கொள்ளுகையில் அது பாதுகாக்கிறது. தேவனே, இந்த ஜனங்கள் ஆத்தும ஆதாயம் செய்யத் தக்கவர்களாக இருக்க அருளிச் செய்யும் என்று நான் வேண்டுகிறேன். 150 கர்த்தாவே, இந்த தாழ்மையான ஊழியக்காரனாகிய எங்களது மேய்ப்பன் சகோதரன் நெவில் அவர்களை ஆசீர்வதியும். அவர் தனது பணிமனையிலே கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு அவயவம் என்ற முறையில் பயபக்தியோடு நின்றுகொண்டு, அவரிடம் நீர் கூறும் ஒவ்வொன்றையும் பின்பற்றிட தன்னால் இயன்ற அளவு சிறப்பாக முயன்று கொண்டிருக்கிறார். தர்மகர்த்தாக்களை ஆசீர்வதியும். இம்மனிதர்கள், நான் கடந்து வந்திருக்கிற பெரிய இருளான வேளைகளிலெல்லாம் மிகவும் தயவோடு என்னோடு நின்றிருந்தார்கள். என்னோடு சேர்ந்து ஜெபித்து, துன்ப வேளைகளிலெல்லாம் என்னருகில் நின்றனர். சபையோடு நின்றருளும். கர்த்தாவே, நான் அவர்களை நேசிக்கிறேன். அவர்கள் உம்மை நோக்கிப் பார்க்கட்டும் என்று நான் அவர்களுக்காக என் ஜெபத்தை ஏறெடுக்கிறேன். கர்த்தாவே, அழிவுக்கேதுவான களிமண்ணாகிய ஊழியக்காரனை விட்டு பார்வையைத் திருப்பி, சர்வ வல்லவராகிய அவரை நோக்கிப் பார்க்கட்டும். நாங்கள் முடிவுள்ளவர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம் கர்த்தாவே. நாங்கள் யாராயிருந்தாலும் சரி, நாங்கள் அழிவுள்ளவர்கள் தான். செய்தியாளனல்ல, செய்திதான். அதை அளித்தருளும் கர்த்தாவே. அங்கேதான் நாங்கள் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை சுட்டிக் காட்டுகிறோம். இன்று இங்கிருக்கிற ஒவ்வொருவருக்கும் அவர் மெய்யாகக் காணப்பட கிருபை செய்யும். சிறு பிள்ளைகளுக்குங் கூட, முழுச் சபைக்குங்கூட அவர் முற்றிலுமானவராக ஆகட்டும், இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம். ஆமென். 151 நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில். இப்பொழுது நாம் மீண்டும் இப்பாடலை பாடுகையில், உங்களுக்கு முன்பாக இருக்கும் யாராவது ஒருவரிடம் கைகுலுக்கிக் கொள்ளுங்கள். உங்கள் பக்கத்தில் இருக்கிறவர்களிடம்... யாவரும் இப்பொழுது கைகுலுக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் உட்கார்ந்து கொள்ளுங்கள். திரும்பி உங்களால் இயன்றால், கைகுலுக்கிக் கொள்ளுங்கள். நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில். 152 திங்கள் இரவிலே, நடு இராத்திரியிலே, இராப்போஜனம் என்று அறிவித்திருக்கிறார்கள். நாம் இப்பொழுது நமது கரங்களை உயர்த்தி அவரைப் போற்றிப் பாடுவோமாக. அவர் உங்களது முற்றிலுமானவர் என்பதை எத்தனை பேர்கள் உணருகிறீர்கள்? வார்த்தையானவர்; அவரே வார்த்தையானவர். அதை நீங்கள் விசுவாசிக்கிறிர்களா? அவரே வார்த்தையாயிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் வார்த்தையிலுள்ள அவ்வொளி உங்களில் ஜீவிக்கும்படியாக வார்த்தையை உயிர்ப்பித்திருக்கிறார். வார்த்தையை உங்களில் இருதயத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் உள்ளே பிரவேசித்து, அவ்வார்த்தை அசையத்தக்கதாக கவனித்துக் கொள்வாராக. விசுவாசியுங்கள், தாழ்மையாயிருங்கள். ஏதோ ஒரு பெரிய ஆளாவதற்கு ஆசைப்படாதீர்கள். ஒன்றுமில்லாதவராக ஆகுங்கள். அப்பொழுதுதான் தேவன் உங்களை ஒரு ஆளாக ஆக்குவார். அதுவே சரி. இப்பொழுதே அதைச் செய்வீர். அவரை நேசிக்கிறவரெல்லோரும், 'ஆமென்' என்று சொல்லுங்கள். (சபையார் “ஆமென்'' என்கிறார்கள் - ஆசிரியர்) ''ஆமென்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? ''அப்படியே ஆகக்கடவது“ 'ஆமென்'. அது சரிதான். அல்லேலூயா என்று சொல்லுவோம்.(சபையோர் “அல்லேலூயா'' என்று பிரதியுத்தரம் சொல்லுகிறார்கள் - ஆசிரியர்) அதனுடைய அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? ”நமது தேவனை துதி''. 153 சமீபத்தில் நான் ஜெர்மனியில் இருந்தபோது, அந்நாளிலே நான் முப்பது அல்லது நாற்பதாயிரம் ஜனங்களுக்கு முன்பாக எழுந்து நின்று, அவர்களிடம் கூறியதாவது: ஜெர்மானியராகிய நீங்கள் புரிந்து கொள்ள இயலாத ஒரு விசித்திரமான காரியம் ஒன்றுண்டு. இன்றைக்கு காலையிலே இங்கு வரும் வழியிலே, ஒரு நாய் என்னைப் பார்த்து ஆங்கிலத்தில் குரைத்தது. அது சரிதான். அதற்கு எந்த தொல்லையும் இல்லை என்று கூறினேன். அங்கே ஒரு பறவை அமர்ந்து எனக்காக ஆங்கிலத்தில் பாடியது. தெருவில் வரும் போது, ஒரு தாய் தன் கரத்தில் ஒரு குழந்தையை ஏந்திக் கொண்டிருந்தாள். பின்னால் நான் வரும்போது, அக்குழந்தை ஆங்கிலத்தில் அழுகிறது என்று சொன்னேன். உங்களைப் பற்றி என்ன? ஆகவே நீங்கள் சுற்றுமுற்றும் நோக்கினால், அவர் எங்குமிருக்கிறார். அவ்வாறு அவர் இருக்கவில்லையா? நிச்சயமாகவே அவர் இருக்கிறார். 154 இப்பொழுது நாம் நமது கரங்களை உயர்த்தி, கண்களை மூடியவாறு, நமது மேய்ப்பரை முடித்து வைக்கும்படியாக கேட்கையில், பாடுவோமாக. முதலில் நாம் எழுந்து நிற்போமாக. ஒவ்வொருவரும் எழுந்து நிற்கவும். மீண்டும் இப்பொழுது, நீங்கள் அவரை, ஒவ்வொருவரும் நேசிக்கிறீர்களா?அப்படியாயின் “ஆமென்” என்று கூறுங்கள். சகல பாஷையிலும் அல்லேலூயா என்று வார்த்தை உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆப்பிரிக்காவின் நாடோடி இனத்தவர் காடுகள் மத்தியில் செல்லுங்கள்; அங்கும் அல்லேலூயா தான். அல்லேலூயா! அதுவே எவ்விடத்திலுமுள்ள கிறிஸ்தவ வாழ்த்துரையாக இருக்க வேண்டுமல்லவா? அல்லேலூயா! அவ்வார்த்தைக்கு, “நமது தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று அர்த்தமாம். அவர் அதற்கு பாத்திரராயிருக்கிறார் அல்லவா? அவரே முற்றிலுமாக எனக்கு இரட்சகராயிருக்கிறார். அவர் எனக்கு முற்றிலுமாக தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவாயிருக்கிறார். அவர் முற்றிலுமாக நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் உங்களுக்கும் அதே விதமாக இருக்கிறாரா? நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில்.